Monday, January 01, 2018

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு - சில எண்ணங்கள்


ரஜினிகாந்த் அறிவிப்பின் சாராம்சமும் நம் எண்ணங்களும் 



  • அரசியலும் அரசியல்வாதிகளும் சுயநலமாகி விட்டதாகவும் அக்கறையின்மையின் உச்சக்கட்டமாகி விட்டதாகவும் மாற்றம் கண்டிப்பாகத் தேவையாகி விட்டதாகவும் கூறுகிறார் - அரசியல்வாதிகள் எப்போது பொது நலம் கருதி இருந்தார்கள்? மாற்றம் தேவை என்று நாம் நினைக்க ஆரம்பித்து அதிக நாட்கள் ஆகி விட்டன. ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் செயலின்மையும் ரஜினிகாந்திற்கு இப்போது ஒரு முகாந்திரம் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது அரசியல் பிரவேசத்தின் ஆர்வத்திற்கு மூல காரணமாக நாம் கருதுகிறோம். 
  • 1996-ல் பதவி என்னிடம் இருந்தது, உதறிவிட்டேன் என்கிறார் - சற்று ஆர்வக் கோளாறான கருத்து. ஒரு கட்சி அமைக்கும் வாய்ப்பு அவரிடம் இருந்தது, ஒரு வேளை ஜெயித்திருக்கலாம் என்பதே அதிகப்படியான உண்மை 
  • ஆன்மிக அரசியல் - ரஜினிகாந்த் பகவத் கீதையை வைத்து ஆரம்பித்ததாலும், ஆன்மிகம் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியதாலும், பல பிஜேபி மற்றும் இந்து மதம் சார்ந்த ஆர்வலர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவரது பொதுவானஆதரவு குறையும் ஒரு அபாயம் உண்டாகி உள்ளது.
  • கட்சியின் ஆரம்பம் - கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டிஇட  மூன்று வருடங்களுக்கு மேல் இருப்பதாகவும் அது வரை கட்சி உருவாகி பலப்படுத்தும் முயற்சி உண்டாகும் என்கிறார். அவருடைய அடுத்த கட்டத் தலைவர்கள் யாரும் இது வரை இல்லை. அதிக கெட்ட பெயர் இல்லாத மற்றும் ஓரளவுக்கு வயது மீதம் உள்ள சில அரசியல் புள்ளிகளை வைத்து அவர் தொடங்கலாம். ஆனால், NTR போல் அதிரடி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத ஒரு காலத்திற்கு நாம் வந்து விட்டோம் என்று அவர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் 1000தொண்டர்களும் 10 கோடியும் இல்லாமல் எந்தத் தொகுதியிலும் போட்டிஇட  முடியாது என்பது தெள்ளத் தெளிவு. பணம் இருக்கலாம், அல்லது திரட்டலாம், ஆனால் மாற்றம் வந்தே தீர வேண்டும் என்ற ஒரு கடுமையான அலை இல்லாத பட்சத்தில், தனியாக நின்றால் ஒரு சில தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் வாய்ப்பை நாம் கணிக்கவில்லை 
  • காவலர்கள் - அவர் கட்சித் தொண்டர்கள் அநீதியைத் தட்டிக் கேட்கும் காவலர்களாக இருக்க வேண்டும் என்கிறார். ஷங்கரின் அடுத்த படத்திற்கு நல்ல கதையாக அமையலாம், அல்லது ஊக்குவிக்கும் முயற்சி என்று கருதுவோம். பண பலமும் குண்டர் படையும் உள்ள பெரிய கட்சிகளோடு திரை அரங்கில் விசில் அடிக்கும் எளிய ரசிகர்கள் மோதும் ஒரு சூழ்நிலையை நாம் திரைப்படங்கள் தவிர எங்கும் பார்க்க முடியும் என்று தோணவில்லை  
தலைமையே இல்லாமல் தறிகெட்டு நடக்கும் ஒரு ஆட்சியின் நடுவில், வெறும் பணத்தை மட்டுமே வைத்து ஒரு சுயேட்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் வென்றிருக்கும் காலகட்டத்தில்,  ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு மக்களுக்கு ஒரு டானிக் ஆகும். அவருக்கு ஒட்டு போடுகிறோமோ இல்லையோ, எல்லாக் கட்சிகளின் தரத்தை ஆராய்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டிய ஒரு ஆர்வத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். 

அவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத் தக்கது. அவரால் முடியா விட்டாலும், வேறு ஒரு நல்ல முடிவையாவது மக்கள் எடுக்கும் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கி இருக்கிறார். 

வாதங்களும் ஊகங்களும் மட்டுமே நம்மால் முடியும். மக்கள் என்ன செய்வார்கள் என்பது அவர் நம்பும் ஆண்டவனுக்கே வெளிச்சம் 


7 comments:

  1. Nice summary! A test for the people of TN to stay put or embrace change.

    ReplyDelete
  2. A good write up Sathya.. especially the conclusion! Established parties missed some golden opportunities for the past 12 months.. it’s now a wake up call to rethink their strategy!

    ReplyDelete
  3. தெளிவான அலசல், சத்யா.

    எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நாம் திரிந்து கொண்டிருக்கும்போது, பித்தர்களாக கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம்.

    ரஜினியின் அறிக்கையை நான் படிக்கவில்லை. இன்று காலை வானொலியில் அவரது வலைத்தள முகவரியை சொல்லிக் கொண்டிருந்தார்கள். மன்றம் என்ற பெயரே பயமுறுத்துகிறது. ஒரு மன்றத்தின் பின் போய் தமிழகம் பட்டுக்கொண்டிருக்கிற பாடு போதும்.

    மாற்று வேண்டும். அது எந்த மாற்று என்பதுதான் இன்னும் தெளிவாகவில்லை.

    ரஜினி என்ற சினிமா முகத்தைத் தவிர ஒரு எளிமையான ஆன்மீகவாதி என்றளவில்தான் ஒரு பிம்பம் இருக்கிறது எனக்கு. அதுவும் ஒரு ஊடக பிம்பமாக இருக்கலாம். அதுவே உண்மையாக இருப்பினும், எளிமையான ஆன்மீகவாதிக்கு ஓட்டு போட்டு நமக்கு என்ன கிடைக்கப்போகிறது.

    இந்தக் கேள்விக்கு எப்படி பதில் அளிக்கப்போகிறார் ரஜினி?

    ReplyDelete
  4. நல்ல கருத்துக்கள் சத்யா.
    சில பேர் நல்லது பன்னனும்னு அரசியலக்கு வருகிறார்கள். ஆனால் சுற்றியிருக்கும் பல பேர் கெடுத்து விடுகிறார்கள் .
    பல பேர் சுயநலத்திற்காக ஆரம்பிக்கிறார்கள். நல்ல அருவடையும் செய்கிறார்கள் .

    ReplyDelete
  5. Why Thiru RK is not fit for TN at this crucial political juncture
    1. Not an ideologist
    2. Covert communal and nationalist agenda of the people
    behind him
    3. Consistently reluctant in making clear decisions
    4. His followers (crooks in the making)
    5. His age and health
    6. God complex (its high time TN elect a leader based on
    ideology rather than false idols and fake
    charisma)
    7. He, not by any means is Tamil (controversial.. but true)



    ReplyDelete
  6. சத்யா,
    நிறைய எழுதவேண்டும், அதிலும் தாங்கள் மேற்கூறிய பல கருத்துக்கு மறுதளித்து எழுதவேண்டும் என்ற அவா எழுவதை தவிர்க்க முடியவில்லை. இன்று காலை (1/2/2018) 9:46 மணிக்கு தங்கள் கருத்துக்கு பதில் எழுதியிருந்த அனானியின் பதிலுக்கு பதில் தர வேண்டும் என்றும் இருக்கிறது. முடிவில், இது ஒரு குழாயடி சண்டையாக மாறும் அபாயம் இருப்பதால், சுருக்கமாக ஒரு பதில்:

    ஒஷோ சொன்னது போல "We see things not as they are, but as we are". அதைத்தான் இது வரை நான் கண்ட, கேட்ட பதிவுகள் மூலம் தெளிவாகிறது. மற்றவை நேரில்.

    முரளி இராமச்சந்திரன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!