இது என் மழலை மலர்க்கொத்து
அன்பால் ஆர்வத்தால்
அரவணைப்பால் ஆவலால்
என் ஞாயிற்று கிழமையை
மகிழ்விக்கும் என் மழலை மலர்க்கொத்து
புன்னகையால் பொலிவால்
கேள்விகளால் குறும்பால்
புத்துணர்வை தரும் என் மழலை மலர்க்கொத்து
இனிமையாய் இயல்பாய்
இன்பமாய்
அத்தையென்றும் ஆன்டியென்றும்
ஆசிரியையென்றும்
பொலிவூட்டும் என் மழலை மலர்க்கொத்து
சிரிப்பால் பண்பால்
மட்டுமின்றி
என் தாய்மொழியான தமிழ்மொழிக்கு
உங்கள் மழலைச் சொற்களால்
பெருமை சேர்க்கும் என் மழலை மலர்க்கொத்து
ஆயிரம் வணக்கங்களுடன்
சமர்ப்பிக்கிறேன்
- சுனிதா சந்திரமோகன்
(நம் தமிழ்ப் பள்ளியில் எழுத்தறிவிக்கும் ஆசிரியை சுனிதா தம் வகுப்பு மாணவர்களுக்காக எழுதியது)
அன்பால் ஆர்வத்தால்
அரவணைப்பால் ஆவலால்
என் ஞாயிற்று கிழமையை
மகிழ்விக்கும் என் மழலை மலர்க்கொத்து
புன்னகையால் பொலிவால்
கேள்விகளால் குறும்பால்
புத்துணர்வை தரும் என் மழலை மலர்க்கொத்து
இனிமையாய் இயல்பாய்
இன்பமாய்
அத்தையென்றும் ஆன்டியென்றும்
ஆசிரியையென்றும்
பொலிவூட்டும் என் மழலை மலர்க்கொத்து
சிரிப்பால் பண்பால்
மட்டுமின்றி
என் தாய்மொழியான தமிழ்மொழிக்கு
உங்கள் மழலைச் சொற்களால்
பெருமை சேர்க்கும் என் மழலை மலர்க்கொத்து
ஆயிரம் வணக்கங்களுடன்
சமர்ப்பிக்கிறேன்
- சுனிதா சந்திரமோகன்
(நம் தமிழ்ப் பள்ளியில் எழுத்தறிவிக்கும் ஆசிரியை சுனிதா தம் வகுப்பு மாணவர்களுக்காக எழுதியது)
தமிழையும் குழந்தைகளையும் நேசிக்கும் தமிழ் தாயின் இதயத்திலிருந்து வந்த கவிதை மிக அற்புதம்
ReplyDeleteநல்லாயிருக்கு சுனிதா! பிடிங்க, உங்களுக்கு ஒரு வாழ்த்து மலர்க்கொத்து!
ReplyDelete