Wednesday, September 08, 2010

பித்தனின் கிறுக்கல்கள் - 38

பல மாதங்களுக்குப் பிறகு கிறுக்கத் துவங்குவதால் சமீபத்தில் நடந்த சில தமாஷ்களைப் பற்றி எழுதி இந்தப் பதிவை சற்று லைட்டாக வைக்கலாம் என்றிருக்கிறேன்.

டமாஸ் நெ.1:

உலகச் செம்மொழி மாநாடு:

இது ஒரு கால விரயம் என்றும், பண விரயம் என்றும் பலர் எழுதி குவித்துவிட்டார்கள். இந்த மாநாட்டினால் என்ன பயன் என்று எதற்காக இப்படி எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இதில் அவரை கூப்பிடவில்லை, இவரைக் கூப்பிடவில்லை, அவருக்கு மரியாதை செய்யவில்லை, இவருக்கு மரியாதை செய்யவில்லை என்று புகார்கள் வேறு வந்து கொண்டேயிருக்கிறது. நடந்தது ஒரு அதிகார மமதையில் இருக்கும் ஒரு கழகத்தலைவரின் சுயதம்பட்டத்திற்காக நடத்தப் பட்ட கூத்து. பக்க வாத்தியமாக பல விதூஷகர்களை வைத்து நட்த்தப்பட்ட ஒரு டமாஸ், இதில் காரண காரியத்தை தேடுவதுதான் முதல் கால விரயம். இந்த டமாஸ்களையும் மீறி ஒரு சில நல்ல தமிழ் ஆய்வுகளும், சில கருத்தரங்கங்களும் நடந்தது என்றும் தெரியவருகிறது. இவைகள் இப்படி ஒரு டமாஸுக்காக காத்திருக்காமல் வருடந்தோரும் நடந்து வருகிறது என்பதும் சில வலைப் பதிவிலிருந்து தெரியவருகிறது.

முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

3 comments:

  1. //என்னை தேர்ந்தெடுங்க, கதவை திறந்தா பாலா வரும், பிட்சாவா வரும்ங்கர ரேஞ்சுல கதை விட்டார், ஆட்சிக்கு வந்து 2 வருடத்தில இன்னமும், இராக்கிலிருந்தும், ஆஃப்கானிஸ்தானிலிருந்தும், ராணுவத்தை திரும்ப கொண்டு வரமுடியலை, விலைவாசியை கட்டுப் படுத்த முடியலை, வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியலை//

    அதிமுக மாதிரி இங்கயும் (பாலின்) "அம்மா" ஆட்சிக்கு வந்திருந்தா எல்லா பிரச்னையும் இந்நேரம் தீர்ந்து இருக்கும். என்ன செய்ய, இந்த ஊருல புத்திசாலி பெண்களுக்கு சான்ஸ் கிடைக்கறது இல்லை. புஷ் : "இந்த ஊரு இன்னமுமாடா நம்பிகிட்டு இருக்கு?" டிக் செனி: "அது அவங்க தலைவிதி." இந்திய வழி "அமெரிக்க" குடிமக்கள் பலர் இதே discussion ஜல்லி தான் அடிக்கிறாங்க. பார்ட்டிக்கு போனால் இதே discussion ! எந்த ஊருலேயும் அரசியல்வாதி அதே நிறம் தான். ஒரு சுப்பனை விட இன்னொரு சுப்பன் பரவாயில்லை என்ற எண்ணம் தான் எப்பவும் மாறி மாறி democrats / republicans வருகிறார்கள். இன்னமும் 2வருடம் கழித்து "அம்மா" ஆட்சி வரட்டும், "easy " பட்டன் தட்டிவிட்டால் எல்லாம் சரியாகிடும்..

    ReplyDelete
  2. உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரே ஒரு சாதனையாக வல்லம் தமிழ் சங்கம் நடத்தும் நாங்களும் ரிச்மண்ட் தமிழ் சங்கம் நடத்தும் நீங்களும் தொடர்பு கொள்ள வசதியாக உலகம் முழுமைக்கும் பொதுவான ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கி வழங்கியிருக்கலாம்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!