Tuesday, March 16, 2010

மீனாவுடன் மிக்சர் - 19 {முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி?}

டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.

தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?

ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.

சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?

கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.

ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க அருமையான கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.

முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!

ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.

என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.

எங்க ஊர் பக்கம் வர்றதா இருந்தீங்கன்னா, அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதி மாண்டலின் சகோதரர்கள் (ஸ்ரீநிவாஸ் மற்றும் ராஜேஷ்) கச்சேரிக்கு கண்டிப்பா வந்துட்டு போங்க. டிக்கட் விலை தலா இருபதே டாலர் தான். மேலும் விவரங்களுக்கு இங்கு சொடக்கவும் - www.richmondrasikas.org.

அப்புறம் எங்க ஊர் கோவில் கட்டி முடிச்சப்புரமா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசைப்பட்டீங்கன்னா இங்கே சொடக்குங்க - http://www.hinducenterofvirginia.org. நீங்களா ஆசைப்பட்டு இந்த கோவிலின் விரிவுபடுத்தும் பணிக்கு நிதி உதவி செய்ய விரும்பினீங்கன்னா நான் உங்களை தடுக்கவே மாட்டேன். உங்க சவுகரியம் எப்படியோ பார்த்து செய்யுங்க (பாத்து மேல போட்டு குடுப்பான்னு யாரோ எங்கயோ சொல்லி கேட்ட மாதிரி இல்லை??).

எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


-மீனா சங்கரன்

13 comments:

 1. Super Meena! Naanum ippo rendu moonu nalla vishayathukku 'nidhi vasool' panna aarambichuttaen :D

  Awesome write up - Had a permanent grin on my face while reading it.

  Krithika is AWESOMEST (before she corrects me, it is not a valid word) in the family. She never excused herself from ANY duty, and still got her PhD - Many Kudos!

  I remember you, Sankar and kutties wearing 'Help Rajesh' badge to collect bone-marrow samples in the temple. It requires more courage to ask for funds/help even for a Noble cause, because one has to overcome their ego. ('naan evalo periya aalu! naan en yaar kittayum udavi kaekkanum?') - All things done with an attitude of service and without the ego, helps people get closer to God.

  Ishwararpitam Nechayakritam
  Chitta Shodakam, Mukti Sadakam
  (All work Done as an offering for God, without involving personal accomplishments cleans up the mind, and enables us to Reach God (Mukti) - Upadesa Saram, Verse 3 by Bhagawan Sri Ramana Maharshi)

  ReplyDelete
 2. Meena - yes, you have the talent...you never made me feel like you were begging! Neenga kaeta vidham, naan'na odi odi vandhu check kudhuthaen!

  ReplyDelete
 3. வா ஸ்ரீராம்! நீயும் "நிதி வசூல்" வேலையில இறங்கிட்டியா? பலே பலே. பதிவுல நான் சொன்ன கௌரவ பிச்சை டெக்னிக்ஸ் பத்தி ஏதாவது டிப்ஸ் வேணும்னா கூச்சப்படாம கேளு. ஆனா ஒரே ஒரு விஷயம். என் அறிவுரையை கையாண்டீனா, நிதி வசூல் பண்ணப்போற இடத்துல ஒரு நாலு பேர் செல்லமா முதுகுல கொஞ்சம் தட்ட வாய்ப்பு இருக்கு. பொது நலத்தொண்டுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க நீ தயாரா? :-)))

  ReplyDelete
 4. வாங்க விஜி.

  //Neenga kaeta vidham, naan'na odi odi vandhu check kudhuthaen!//

  தேடி வந்து காசோலை கொடுத்துட்டு போனதுக்கு உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. உங்ககிட்ட நிதி வசூல் பண்ண எந்த ஒரு ஸ்பெஷல் யுக்தியும் தேவையில்லை. கேட்டாலே டக்குனு எடுத்து குடுத்திடுவீங்களே!

  நம்ம ஊர் எல்லாப் பொது நல நிறுவனங்கள் சார்பிலும் உங்களைப்போல சமூக நலனில் அக்கறை உள்ளவங்களுக்கெல்லாம் தொப்பி தூக்கி வணங்கறேன்.

  ReplyDelete
 5. Meena,
  You have an awesome talent to retain followers to your blogs. I am one of the ardent follower. Just keep doing what you are doing, Ph.Ds will follow you.

  Your usage of words and size of sentences are just right. I tell my daugter to write essays as crisp as yours.

  Your blogs are entertaining, creative and thought provoking.
  You are our living Helen Keller of blog space.

  ReplyDelete
 6. உங்க சேவைக்கு மெச்சி இதோ பிடியுங்க டாக்டர் பட்டம்!

  தகுதி இல்லாதவங்களுக்கு எல்லாம் தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் குடுக்கும்போது, தகுதி உள்ளவர்களுக்கு தகுதியில்லா நான் ஏன் கொடுக்கக்கூடாது? இது எப்படி??

  :-)

  கோவிலுக்கும், கர்நாடக சங்கீத சேவைக்கும் மெச்சி ரிச்மண்ட் தமிழ் மக்கள் வழங்கும் பட்டம் இது...

  ReplyDelete
 7. நயமான எழுத்துக்கள்.

  வாழ்த்துக்கள்.

  கணேஷ் , சென்னை

  ReplyDelete
 8. Sriram, do I trouble people so much correcting language that you needed to explain a humorous, indeed very flattering, usage? Hint taken, da. I will not bug people anymore with my corrections.
  Meena's witty post and your erudite comment were truly classy. Great job folks! Keep it going.
  Krithika

  ReplyDelete
 9. unnoda sense of humor,way of writing innum for so many good qualities u deserve morethan a Phd.Meena.
  Keep ur good work going.As sriram said, what ur doing is not a easy job.

  ReplyDelete
 10. Meena...Asaththitta. unnoda indha blog ezhudhi-vila-vallikka-elloraiyum-sirikka- vaikkara kalaikku, naan unakku oru double doctorate confer pannarein. romba nalla vishayam pannara(nidhi vasool and sirikka vaikaradhu). super o super.

  ennoda oru akka original Ph.d holder and another one is 'Blog Arasi' Meena ...appadinnu sollikaradhula naan rombave perumai padarein.

  Sriram...it is not a surprise to know that you are involved in many noble causes, because that is the kind of person you are. What a beautiful quotation! Thanks for sharing it with us.

  ReplyDelete
 11. @ அனானி - உங்க அன்பான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. உங்களைப் போல ரசிப்புத்தன்மை மிக்க மக்கள் என் எழுத்துக்களை தொடரும்போது எனக்கு எதுக்கு டாக்டர் பட்டம் எல்லாம்?

  @ நாகு - பட்டம் கொடுத்து என்னை டாக்டர் மீனாவா ஆக்கினதுக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல? ஆனா இது செல்லுமான்னு தான் சந்தேகமா இருக்கு. இருந்தாலும் உங்களோட அன்பான டாக்டர் பட்டத்தை இன்று என் சகபிச்சையாளர்களுடன் (கோவிச்சுக்காதீங்க தோழர்/தோழிகளே) பகிர்ந்து கொள்ள விரும்பறேன்.

  அது போகட்டும். எங்கே என் பொன்னாடை? இது வரை வாங்கலைனா பச்சை வண்ணத்துல எடுத்துருங்க. ஏன்னா 'பச்சை தான் எனக்கு பிடிச்ச கலரு'. :-))

  @ கணேஷ் - வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

  @ கிருத்திகா - உண்மையா கஷ்டப்பட்டு படிச்சு டாக்டர் பட்டம் வாங்கிய என் அருமை தமக்கையே, வா வா. You can't help correcting language mistakes in people anymore than we can help making them so keep on correcting us and don't worry about it so much. I am sure Sriram would only readily agree with me when I say 'We are happy to stand corrected'. Especially by you as you have earned it. :-)

  @ ஜெயஸ்ரீ - நான் எழுத தொடங்கினதில் இருந்து எப்பவும் என்னை 'ஊக்கு'வித்துண்டே இருக்கும் உனக்கு சமயல்கலைல நான் டாக்டர் பட்டம் குடுக்கறேன்(காசா பணமா சொல்லு, பட்டம் தானே? நீ வச்சுக்கோ). உன் வாங்கி பாத் recipe யை திருடி செஞ்சுப் பார்த்தேன். சூப்பரா வந்தது ஜெயம்மா.

  @ வித்யா - double doctorate பட்டமா? எனக்கா? என் மேல என்னடி காய்ப்பு உனக்கு! கஷ்டப்பட்டு நெத்தி வழுக்கைப்பட்டு படிச்சவங்கள்ளாம் என்னை கட்டையால அடிக்க வர மாட்டாங்களா? அவங்களுக்கு தெரியுமா நீ என் தங்கச்சி, ஒரு பாச வேகத்துல உணர்ச்சி வசப்பட்டு அக்காவுக்கு பட்டமா வழங்கரன்னு?

  சரி ஒரு சந்தேகம்....ரெட்டை பட்டம் வாங்கினா ரெண்டு முறை பேருக்கு முன்னாடி டாக்டர் போட்டுக்கலாமா?

  டாக்டர் டாக்டர் மீனா....நாகு, இது எப்படி?

  ReplyDelete
 12. @Krithika: I didn't mean that way at all :-) - PhD English irukkura edathula naan english thappu panna koodathu :-) Avalo thaan. And, you have all the right in the whole world to correct me any number of times! You are my dear and loving akka!

  ReplyDelete
 13. Dearest Sriram
  Naan thappave eduthukkalaida. Naanum humorous aadhan sonnen. Also, I keep telling myself that focus should be more on clear communication rather than on error analysis, a trait I've picked up from training under my Heads of the Department. (Seldom any one's communication is entirely error free, mine topping the list. If I've learnt anything in life, it is that I am very much flawed and fallible.))
  I did not take offence; there is nothing to take offence. I know you are my loving thambi.Who can match your wisdom, da? I am truly in awe of Meena's spontaneity and inherent humor in writing and your profound philosophical insights.
  Krithika

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!