Monday, October 06, 2014

ஹலோ, அபிதாபியா ? ...

Image credit: Google
ஹலோ, அபிதாபியா ? ...

ஏய் ... லூஸு ... ஆஃப்கானிஸ்தானுக்கு ஃபோன் பன்னிட்டு, அபிதாபியானு கேக்குற ... கட்டத்தொரைக்கிட்ட மாட்டுன கைப்புள்ள கத உனக்கும் ஆகிடும் சாக்றத ... என்றது கரகர குரல் மறுமுனையில்.

தொடைகள் கிடுகிடுக்க, கால்களை ஸ்டெடியாக வைத்துக் கொண்டு, ஆடும் கைகளையும் அடக்கி, ரிஸீவரை கெட்டியாகப் பிடித்தபடி, இரண்டு மூன்று முறை மென்று விழுங்கி ... நா, சாரினா, உங்க அட்ரெஸ் வெரிஃபய் பன்னனும் அதான் ... என்று இழுத்தான் ரங்கன்.

க்ரெடிட் கார்டா ?

இல்லனா

சோப்பு சீப்பு விளம்பரம் .....

நா ...

என்னடா நொன்னா ...

ரங்கன் விளக்கி சொல்கிறான் ... மறுமுனை கரகர குரல், 'அப்டியா ... ஆகட்டும் ... நல்லது ...எங்களுக்கும் டீஸர் போட்டு ஒலகத்த பயமுறுத்த வசதியா இருக்கும்' என்று ஹாஹாகித்து, 'நம்பர் நாலு ....' என்று ஆரம்பித்து பார்த்திபன் ஸ்டைலில் விலாசத்தை சொல்லியது.

நா, ஆஃப்கானிஸ்தான்ல பிள்ளையார் கோயிலா ?

டேய் திரும்பத் திரும்பத் தொல்ல பண்ற நீ... இங்க போன்ல சுட்டேனா அங்க நீ பிஸ் பீஸ் ஆயிடுவா ...

...

ஆமான்னா, மொத்தமா கட்டி கொண்டாந்து உங்க கேம்ப் நட்டநடுல ட்ராப் பன்னிடரேன்னா ...

ஆமான்னா ... ஆமான்னா ... திரும்பிப் பார்க்காம போய்டறேன்னா ....

டொக் என்று மறுமுனையில் போன் துண்டிக்கப்படுகிறது.

'ஆமா, ஒரு ஃபோன் ப்ன்றதுக்கே இந்த ஆட்டம் ஆடறியே, நீ எல்லாம் இந்த டாஸ்க்க எப்படி நிறைவேத்தப் போற' என்றான் ரங்கனிடம் நண்பன் விச்சு.

'இல்லடா ... என்ன ஆனாலும் பரவாயில்ல. இத்த பன்னா நாடு சுபிச்சம் அடையும்.   மக்களும் அவங்கவங்க வேலயப் பாப்பாங்க.  அழுகை குறையும் ... பொய் பித்தலாட்டம், சூது குறையும் ... வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே போகிற திருட்டுக்கள் குறையும் ... அவன் பொண்டாட்டிய இவன் இழுக்காம இருப்பான் ... இவன் பொண்ட்டாட்டிய அவன் இழுக்காம இருப்பான் ... அண்ணனும் தம்பியும் நண்பர்களா இருப்பாங்க ... நாத்தனார் கொழுந்தனார் நல்லவங்களா இருப்பாங்க ... உறவுகள் சிதையாம இருக்கும் ...அலுவலகத்துல காதல் செய்யாம வேல செய்வாங்க ... படிக்கிற வயசுல பிள்ளைங்கலாம் பள்ளிக்குப் போய் படிக்கும் ... சைல்ட் லேபர் குறையும் ...கிராமத்துல வெட்டுக் குத்து கொறஞ்சு நிம்மதியா இருப்பாங்க ... இதிகாசம் என்ற பேர்ல அடிக்கற ஜல்லி கொறயும் ... ஊரு நல்லா இருக்கும் ... வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுனு எல்லாம் நல்லா இருக்கும் ...மொத்தத்துல‌ நல்ல மழை பெய்யும் ...'னு ரங்கன் சொல்லிமுடிக்க, கையில் சோடாவோடு அருகில் இருந்தான் விச்சு.

நல்லாத் தான் இருக்கு, 'ஐ ஏம் வித் யூ, ரங்கா' என்று விச்சு சொல்ல, இருவரும் இருக்கப் பிடித்தனர் கரங்களை, டாஸ்க்கை நிறைவேற்ற‌ ...




4 comments:

  1. அப்படியே கண்ண கட்டுதே....

    சதங்கா என்ன சொல்றாருன்னு அவர தவிர யாராவது எக்ஜ்பிலைன் பண்ணினா, எனது ராஜ்ஜியத்தில் பாதியும், அவர்களுக்கு என் அரச குமாரி/குமாரனை கல்யாணம் செய்து வைக்கிறேன்....

    ReplyDelete
  2. நீங்க எழுதும்போது நெப்போலியன் துணைக்கு வச்சிகிட்ட மாதிரி இருக்கு. இத பிரியலன்னா ரெண்டு பெக் போடனும்போல.

    ReplyDelete
  3. திரும்ப திரும்ப
    அட திரும்ப திரும்ப படிச்சு பார்த்தேன்
    ஒன்னும் புரியல
    ஐ ஆம் வித் யு நாகு அண்ட் சந்து முருகன்

    வேதாந்தி

    ReplyDelete
  4. In a single line, its about the TV Serial Directors who are exploiting the nation with their so called creativity (the big para)

    நாகு, ராஜ்ஜியம் தருவது வரைக்கும் வந்தமைக்கு நன்றி. குறித்துக் கொள்கிறேன். நாளப்பின்ன உதவும் :)

    சந்துமுருகா, ரெண்டு வரி எழுதறதுக்கே ரெண்டு பெக் போட்டிருக்கீங்க போலிருக்கே, புரியாமத் தான் :) ஐ.டி.வேற ஃப்ரெஷ்ஷா இருக்கு!

    வேதாந்தி, திரும்பத் திரும்பப் படித்ததற்கு நன்றி. உங்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்க விரும்பவில்லை :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!