Monday, May 06, 2013

திருக்குறள் ‍- கணிணி மென்பொருள்

அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு மனித வாழ்விலும் ஏதோ ஒருவகையில் கூடவே வரும் பழம் தமிழ் இலக்கியங்களுள் திருக்குறள் மிக முக்கியமான படைப்பாகும்.

மனனத்தில் தொடங்கிய கல்வி, எழுத்துக்களாய் உருப்பெற்று, ஏடுகளில் அழுந்தி, தாள்களில் தவழ்ந்து, இன்று மின்னணுவியலில் பயணிக்கும் இக்காலத்தில், என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது !

திருக்குறளை தமிழிலும் ஆங்கிலத்திலும், வரிசையாகவோ, அல்லது குறிப்பான வரிசை அன்றியோ, சிறு கட்டமைத்த‌ கால அவகாசத்தில் காட்டுவதே இத் திருக்குறள் மென்பொருளின் திட்டம். குறிப்பிட்ட எண் கொண்ட குறள் தேடும் ஆற்றலும் இதில் கண்டு பயன் பெறலாம்.

கீழ்க்கண்ட சுட்டியில், இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் முயற்சித்துப் பாருங்கள்.


671 முதல் 680 குறள்களுக்கான ஆங்கில விளக்கம் கிடைக்கப் பெற‌வில்லை. தகவல் இருந்தால்/அறிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இம்மென்பொருளின் சில திரைக்காட்சிகள்:

முதல் பக்கம்

குறிப்பிட்ட குறள் எண் தேடல் பக்கம்

அசைவூட்டக் கட்டமைப்புப் பக்கம்


தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்புவோம் !

நன்றி !!

4 comments:

  1. அட, இப்படி ஒரு விஷயம் இருக்கா?

    நேத்துதான் யாரோ பயமுறுத்தினாங்கன்னு கணினியில் வசந்த கால சுத்திகரிப்பாக ஜாவாவை போகிப்பந்தத்தில் போட்டேன் இப்போ வள்ளுவர் காப்பி கேக்கறாரு. (நல்லா குழப்பிட்டனா?)

    ஆனால் நீங்கள் போட்டிருக்கும் மாதிரியில் இருக்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பைப் பாத்தா பயமா இருக்கு. சாலமன் பாப்பையா எழுதியிருப்பாரோ? :-)

    ReplyDelete
  2. நல்லதொரு சிறப்பான மென்பொருள்... மிக்க நன்றி...

    வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  3. நன்றி நாகு.

    போகிப்பந்தத்திற்குப் போற அளவுக்கு ஜாவா போயிடுச்சே !! ரூபி தான் அங்க பிரச்சனையோ ? காப்பி இருக்கும் வரை ஜாவா இருக்கும்.

    மொழிபெயர்ப்புத் துணை நம்ம கூகிளானந்தா அவர்களே !

    ReplyDelete
  4. //என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது ! //

    அடடா... எவ்வளவு பெரிய விஷயத்தை கவனக் குறைவால் படிக்கத் தவறிவிட்டேன்... வயசாயிடுச்சி. அதான் என்னடா இணைய சுட்டி குடுக்காம உங்க கூகுள் தளத்துல இருக்கேன்னு யோசிச்சேன்.

    நல்ல முயற்சி. இதற்காகவே சொந்தக் கணினியில் காபி ஆத்திக் கொண்டிருக்கிறேன்...

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!