Saturday, October 24, 2009

தமிழ் சங்கத்தில் ஆங்கிலமா? - ஒரு வம்பு

ஜெயகாந்தனின் "திருக்குறள் காவ்யா" பதிவு படித்ததும் நம் தமிழ் சங்கங்களை வம்புக்கு இழுக்கலாம் என்று தோன்றியது. அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு கிடைத்த பதில்கள் இங்கு மாதிரிக்கு:

அப்ப தான் எல்லோருக்கும் புரிகிறது.
புரிகின்ற மொழியில் பேசுவது ஒன்றும் தப்பு இல்லை.
தமிழர்களை தவிர மற்றவர்களும் வரலாம் இல்லையா?
நமக்கே தமிழ் ஒன்னும் வர மாட்டேங்குது ?
தமிழ் வளர்ப்பதற்கு ஒன்றும் வர வில்லை.
இதை நான் விமர்சிப்பதற்குள் உங்களின் விமர்சனங்களையும் கேட்க விரும்புகிறேன்.
வேதாந்தி

7 comments:

  1. எதோ நம்மளால முடிஞ்சது கூடிய வரை தமிழில் பேச எழுத நினைப்பது. ஆனாலும் வேலை அல்லது தொழில்நுட்பம் பற்றி பேசும் பொது தமிழ் உபயோகிப்பது கடினம். சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் (*இந்திய) போன்றவற்றை பற்றி பேசும்போது பொதுவாக தமிழிலேயே பேசுவோம். இங்கு ஆங்கிலம் பேசுவது பந்தாவிற்காக அல்ல என்பது என் கருத்து. சரி, நம்ம தமிழ் சங்கத்தின் வலை (தமிழ்) தளத்தை பார்த்ததுண்டா வேதாந்தி? வலையில் ஒரு "தமிழ்" ப்ளாக் உருவாக்கி அதில் பலரும் (ரி.த.ச. நிர்வாகிகள் உட்பட) தமிழில் "கருத்து" சொல்லிகொண்டிருக்கும் இங்கு நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது!

    ReplyDelete
  2. ஐயா வேதாந்தி. வேதாந்தம் பேசுவதைவிட்டு உமக்கெதற்கு இந்த வம்பு?

    தமிழ் சங்க நிகழ்ச்சிகளில் தமிழில் பேசினால்தான் வம்பு. ஆங்கிலத்தில் பேசினால் பிரச்சினையே இல்லை :-)

    தமிழ் சங்க விழாக்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான எனது ஒரே காரணம் இங்கு வளரும் குழந்தைகளுக்கு புரிவதற்காக. அதுவும் குறிப்பாக அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளினூடே... தூய தமிழில் அவர்களைப் பாராட்டி அது அவர்களுக்குப் புரியாமல் போவதைவிட, ஆங்கிலத்தில் அந்தப் பாராட்டு அவர்களை அடைவது மேல் என்பது எனது எண்ணம். உங்களுக்கு எப்படியோ...

    தமிழ் சங்க விழாக்களில் தமிழ் புரிவதில்லை எனும் பெரியவர்களுக்கு - அதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து நம்ம ஊர் டீவி (காபி வித் அனு போன்ற செந்தமிழ் தலைப்பு) பாருங்கள் :-)

    முரளி - தீபாவளியில் மிக்சர் வித் மீனா உண்டா இல்லையா?

    ReplyDelete
  3. //ரி, நம்ம தமிழ் சங்கத்தின் வலை (தமிழ்) தளத்தை பார்த்ததுண்டா வேதாந்தி? வலையில் ஒரு "தமிழ்" ப்ளாக் உருவாக்கி //

    வேதாந்தி கேட்பது தமிழ்சங்க நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தில் பேசுவது குறித்து. மக்களுக்குள்ளே அல்ல.

    ReplyDelete
  4. இப்பொழுதுதான் கவனித்தேன்.
    //அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள்//

    நம்ம ஊரை மட்டும் பார்த்துவிட்டு இப்படி அளக்கிறீர்களே? என்ன ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்ற விகிதமா, இல்லை நிஜமாகவே வேறு ஒரு ஊர் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  5. நாகு: மிக்சர் வித் மீனா உண்டா இல்லையா என்று உங்களைப் போல நானும் தெரியாமல் தவிக்கிறேன். ஒரு பட்டிமன்றம் போட்டு விவாதித்து விடலாமா?

    வேதாந்தி: இது ஒரு அருமையான பட்டிமன்றத்து தலைப்பு, ஒரு தலைவரை பிடியுங்கள், இந்த பக்கம் 3 பேர் அந்த பக்கம் 3 பேர் போட்டு பேசிடுவோம். பேசி முடிச்சதும் என்ன பேசினோம்னு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதிட்டா போச்சு!

    தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் படிக்கும் மாணவ மாணவிகளின் வகுப்புக்கு வந்து பாருங்கள் அவர்களின் ஆர்வம், ஈடுபாடு ப்ரமிக்கவைக்கிறது. எங்களுக்கே ஏன் இந்த வகுப்பை இத்தனை நாட்கள் தவற விட்டுவிட்டோம் என்று இருக்கிறது.

    சங்கத்தில் தமிழ் என்றில்லை, எந்த மொழியில் பேசினாலும் சிறுவர் சிறுமிகளை கட்டிப் போட, சொல்லப் படுகிற விஷயம் அவர்களுக்கு சுவாரசியமானதாக இருந்தால் மட்டுமே கேட்கிறார்கள், இல்லை நம்மை புறக்கணித்து விட்டு அவர்கள் நண்பர்களுடன் விளையாட, பேசப் போய் விடுகிறார்கள். அதற்க்காக தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதை நானும் விரும்புவதில்லை. உங்கள் முயற்சி நல்ல முயற்சி, உங்களின் இந்த கலகத்தால் என்ன விளைவோ?

    முரளி.

    ReplyDelete
  6. "நாகு: மிக்சர் வித் மீனா உண்டா இல்லையா என்று உங்களைப் போல நானும் தெரியாமல் தவிக்கிறேன்."

    என்னைய ஒரு வழி பண்ணிடரதுன்னு முடிவு கட்டிடீங்கன்னு புரியறது. மீனாவுடன் மிக்சர் இந்த தமிழ் சங்க நிகழ்ச்சியில உண்டு. ஆனால் அனு போல பேட்டியெல்லாம் கிடையாது. இப்ப தான் நிகழ்ச்சி என்ட்ரியை அனுப்பி இருக்கேன். ரொம்ப லேட்டா அனுப்பினதால இடம் இருக்குமான்னு சந்தேகம் தான். இடம் கிடைச்சா செய்வேன். ந்யூ யார்க் அகலப்பாதை ஸ்டைல்ல எழுந்து நிற்கும் நகைச்சுவை (he he Broadway style stand up comedy) முயற்சி பண்ணலாம்னு ஒரு ஆசை.

    நடுங்கற தொடையை நிதானப்படுத்தி மேடை ஏற மட்டை தேங்காய் தெரபி உதவும்னு நினைக்கிறீங்களா?

    வேதாந்தி,

    நாரதர் வேலை அருமைங்க.

    ReplyDelete
  7. ஐயா வேதாந்தியாரே,

    உமக்குப் புண்ணியமா போகட்டும். நீங்க ஆரம்பிச்சத வச்சி இணையத்துல கும்மியடிக்கிறார்கள். டோண்டுசார் பதிவில் இதை எழுதப் போய் டாபிக் தமிழ்/ஆங்கிலத்தை விட்டு தமிழிணைய மரபின்படி எங்கேயோ டீ டூர் ஆகிவிட்டது.

    http://dondu.blogspot.com/2009/10/25102009.html

    பண்புடன் என்று ஒரு குழு இருக்கிறது. அது பரவாயில்லை. ஆனால் கருப்பு வாந்தி, காக்கை,காக்கையாக வாந்தி என்று வதந்தியில் வளர்ந்தது மாதிரி, தமிழ் சங்கத்தில் ஆங்கிலப்பேச்சு, தமிழ் சங்க நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில் நடக்கின்றன என்று தொனிக்கும் மாதிரி சொல்லப்படுகிறது.
    http://groups.google.co.in/group/panbudan/browse_thread/thread/2406191d5ffc4316#

    உமக்கு இப்போது சந்தோஷம்தானே?

    ஆனால் என்னவோ போங்கள். நாரதர் கலகம் நன்மையில் முடிகிறமாதிரி இன்றைக்கு நம் குழந்தைகளே அருமையான தமிழில் நிகழ்ச்சியை வழங்கினார்கள். விரிவாக ஒரு பதிவில் விரைவில்....

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!