Wednesday, March 11, 2009

உங்களுடைய செக் இஞ்சின் லைட் சரி செய்து விட்டீர்களா?

உங்களுடைய காரில் செக் இஞ்சின் லைட் எரிய ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னை மாதிரி பயந்தாங்குளிகள் அடித்துப் பிடித்து ஓடிப்போய் மெக்கானிக்கிடம் காரை கொண்டுபோய் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டு வருவோம். அதே ஒரு கால்வலியோ, முதுகுவலியோ, நெஞ்சுவலியோ வந்தால் ஒழுங்காக டாக்டரிடம் போகாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்போம். ஒரு காருக்கு செலுத்தும் அக்கறை கூட நம் உடல் நலத்தில் செலுத்துவதில்லை.

சென்ற வாரம் ஒரு நண்பருக்கு இப்படித்தான். இரண்டு நாட்களாக நெஞ்சுவலி என்று உடல்வலி மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை, மூன்றாம் நாள் அவர் மனைவி காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனார். அங்கே அவர் உடலை பரிசோதித்துவிட்டு உடனே எமர்ஜென்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அவருக்கு வந்தது மாரடைப்பு. மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்தக்குழாயில் இருந்த இரண்டு அடைப்புகளை சரி செய்து அனுப்பியிருக்கிறார்கள். நாற்பதுகளில் இருக்கும் நண்பர் நிறைய டென்னிஸ் ஆடுபவர், சுறுசுறுப்பாக, இருக்கும் அனைத்து சங்கங்களிலும் ஈடுபட்டு நிறைய தொண்டு செய்பவர். அவருக்கு மாரடைப்பு வந்தது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஆகவே உங்களுக்கு எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். நல்ல உடல்நலத்தோடு இருந்தாலும் ஆண்டுக்கொரு முறை உடல்நலப் பரிசோதனை (annual physical checkup)செய்து கொள்ளுங்கள். அதுவும் நாற்பதை தாண்டிவிட்டால் இது மிகவும் கட்டாயம். கொழுப்பெடுத்து எது செய்கிறீர்களோ இல்லையோ - உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இக்கால அன்றாட வாழ்க்கையில் நமக்கு நடப்பது, ஓடுவது எல்லாம் மிகவும் குறைந்திருக்கையில், நமது உணவு அதற்கேற்றார்போல மாறாதிருப்பது, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக முக்கிய காரணம். இப்போதும் ஒன்றும் காலதாமதமாகவில்லை. இந்த சனிக்கிழமை மானுமென்ட் அவின்யுவில் பத்து கிலோமீட்டர் ஓடலாம் வருகிறீர்களா?

4 comments:

  1. நீங்க நிறைய ஓடுவீர்கள் போலிருக்கிறது. அது சரி... நிறைய டென்னிசு ஆடுற நண்பருக்கே மாரடைப்புன்னா, அப்புறம் மத்தவங்கள்ளாம் என்ன பண்றது?!

    ReplyDelete
  2. //நீங்க நிறைய ஓடுவீர்கள் போலிருக்கிறது. //
    ஓடற மாதிரி ஒரு பில்ட் அப் குடுக்கனும். அவ்ளதான் :-)

    நீங்க ஒருதடவை ஓடறமாதிரி ஒரு சூப்பர்போஸ் குடுத்திருந்த படம் ஞாபகத்துக்கு வருது. எப்படியோ, செக் இஞ்சின் லைட்ல கவனமா இருங்க..

    ReplyDelete
  3. நாகு, பயனுள்ள பதிவு.

    //கால்வலியோ, முதுகுவலியோ, நெஞ்சுவலியோ வந்தால் ஒழுங்காக டாக்டரிடம் போகாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்போம். ஒரு காருக்கு செலுத்தும் அக்கறை கூட நம் உடல் நலத்தில் செலுத்துவதில்லை.//

    நான் மட்டும் தான் என்று நினைத்தேன். நீங்களுமா ??? :)

    ReplyDelete
  4. அடுத்த முறை கண்டிப்பாக நானும் உங்களோடு சேர்ந்து ஓட முடிவெடுத்துள்ளேன். (இந்த வருடம் உங்க குடும்பத்தோட இதற்கான ட்ரைனிங் மிக அபாரம்!)

    உடற் பயிற்சியோடு உணவிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் (வெங்காய பஜ்ஜி, பக்கோடா எல்லாம் எண்ணை விளம்பரத்தில் பார்த்தது தான்)..

    சென்ற புது வருட ரெசல்யுஷன் - 1. மாதம் ஒரு முறை மட்டுமே பிஸ்சா. 2. சுத்தமாக முட்டை (மஞ்சள் கரு) சேர்ப்பதில்லை. இதை ஓரளவிற்கு தான் காப்பாற்ற முடிந்தது. இந்த வருடம் முதல் - பிஸ்சா, முட்டை, பிரென்ச் ப்ரைஸ், பர்கர் வகையரா அனைத்தும் கட். 3 மாதம் இவையில்லாமல் ஓட்டியாயிற்று. மே மாத ரத்த பரிசோதனையில் தான் இவை எந்த அளவு உபயோகமாக இருந்தது என தெரியும். அமேரிக்காவில் வருடாவருடம் முழு உடல் பரிசோதனைக்கான அனைத்து செலவுகளையும் முழுமையாக இன்சுரன்ஸ் கவர் செய்வது பலருக்கு தெரியாது. தெரிந்தாலும், நமக்கெல்லாம் எதுவும் வராது (!) என்ற குருட்டு நம்பிக்கையால் சிலர் PCP(பேமலி/ப்ரைமரி டாக்டர்) பக்கம் எட்டி பார்ப்பதில்லை! நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!