Sunday, December 07, 2008

பனித்துளிக்கு தேர் கொடுத்த வள்ளல்....

நேற்று ரிச்மண்டில் இந்த ஆண்டின் முதல் பனியாக ஒரு சின்ன பனித்தெளிப்பு இருந்தது. புல்தரை கூட முழுதாக மூடப்படாத அளவு குறைவான பனிச்சிதறல். குழந்தைகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் சிறிதாக விழுந்த பனியால் பெரிய மனக்குறை. எங்கள் மாவட்டத்தில் (கவுண்டிக்கு தமிழில் வேறென்ன?) பள்ளிக்கூட தினங்களில் கொஞ்சம் பனி விழுந்தாலும் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிடுவார்கள். சனிக்கிழமை இவ்வளவு குறைவாக விழுந்தால் என்ன ஆகும்...


அரைகுறையாக மூடப்பட்ட புல்தரை...

ஞாயிறு மதியம் வெளியே கிளம்பினோம். எப்பொழுதும் வேனில் போகலாம் எனும் என் மகன், காரில் போகலாம் என்றான். என்னடா என்றால், வெயில்பட்டு எல்லா பனியும் மாயமாய் மறைந்திருக்க வேன் மறைத்ததால் புல்தரையில் ஒரு சின்ன இடத்தில் மட்டும் பனி இருந்தது. வேன் எடுத்தால் அந்த பனியும் உருகிவிடுமாம்! அதனால் வேனை எடுக்க விடவில்லை. அவனால் காப்பாற்றப்பட்ட புல்தரையும், தேரும்...


பனித்துளிக்கு தேர் கொடுத்த வள்ளல்....

3 comments:

  1. //கவுண்டி == வட்டம்? //

    வட-கரொலினா செல்ல காலை 5:00 மணிக்கு எழுந்து குளிரில் கார் கண்ணாடியை நான் சுரண்டின சோகத்த எங்க போய் சொல்ல.. இருந்தாலும் முதல் பனி சுவராசியமாகத்தான் இருக்கும்.. (கண்ணாடி மேல் 10 அங்குலம் உயரத்திற்கு பனி விழாமலிருக்கும் வரை.)

    ReplyDelete
  2. கவுண்டின்னா மாவட்டம்தான் சரியா வரும்னு நினைக்கிறேன். மாவட்டம் - மாநிலம் என்கிற நமக்கு பழக்கமான வரிசைப்படி. கவுண்டி, வட்டம் என்றால் - மாவட்டம் எது? :-)

    ReplyDelete
  3. தேர் கொடுத்த வள்ளலின் புன்னகையில் மனம் பனியாய் உருகத் தான் செய்கிறது.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!