Wednesday, November 05, 2008

படம் பாரு, படம் பாரு

முதலில் கடிகாரத்தில் நேரம் பார்த்துக் கொள்ளுங்கள். கீழே இருக்கும் படத்தில் ஒரு மனிதன் ஒளிந்துக் கொண்டு இருக்கிறான். அவனைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். நிஜமாகவே இதில் ஒரு மனிதன் இருக்கிறான். கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் கண்டுபிடித்தபின்னே கல்லைக் கண்டால் நாயைக் காணோம் கதைதான்.... காபிக்கொட்டைகளே தெரியாது. மனிதன் தான் தெரிவான்....




என்ன, எவ்வளவு நேரமாச்சு கண்டுபிடிக்க.?

மூன்று வினாடிகளில் கண்டுபிடித்தால், நீங்கள் கில்லாடிதான். உங்கள் மேலாளரிடமோ வாழ்க்கைத்துணையிடமோ உங்களுக்கு இன்னும் நிறைய வேலை கொடுக்கச் சொல்லுங்கள். :-)


அதுக்கும் மேல ஆச்சுன்னாதான் கவலைக்கிடம். சீக்கிரமாக டாக்டரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

அடுத்த படத்தை ஆடாமல் அசங்காமல் பார்க்க வேண்டும். என்ன சரியா? ஆனால் முதலில் இங்கே கிளிக்கி பெரிதாக்கிக் கொள்ளுங்கள்....


அசங்கக்கூடாதுன்னு சொன்னேன். ஏன் இப்படி தலைகீழாகத் தொங்குகிறீர்கள்?

அடுத்த படம் புத்தம் புதுசு. என் நண்பர் ஒருவரின் உறவினர் அப்பலேச்சியன் மலைத்தொடரில் ஹைக்கிக் கொண்டிருக்கிறார் இப்போது. அவரிடம் இருந்து நேற்று வந்த புகைப்படம் இது...


விட்டால் தட்டு, ஸ்பூன் எல்லாம் கேட்கும் போலிருக்கிறது...

5 comments:

  1. >>>ஒரு மனிதன்

    நீயும் ஏமந்தையா... ரெண்டி பேர் இருக்காங்க... கண்டுபுடி பாக்கலாம்?

    ReplyDelete
  2. //கண்டுபிடிச்சாச்சு:-)//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்

    ReplyDelete
  3. ஓ.பார்த்தாஅச்சு. ப்ரிட்ஜ் சூப்பர்.
    கரடிக்கு தேன் யாராவது கொடுக்கறேன்னு சொல்லி இருப்பாங்க:)

    ReplyDelete
  4. பாலம் bloggerல் சரியாக வரவில்லை.
    இங்கே பாருங்கள்...
    http://twitpic.com/kad2

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!