Sunday, March 25, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 9

ஹேக்கர்ஸ் :

நாயகன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "நீங்கள் நல்லவரா? கெட்டவரா?" என்று, அதைப்போல ஹேக்கர்ஸ் நல்லவரா? கெட்டவரா ? என்று வாதிடுவோர் கணினி உலகில் உண்டு. பொதுவாக ஹேக்கர்ஸ் என்றாலே கணிணி அல்லது கணிணிகள் நெட்வொர்க்கில் பாதுகாப்பு வளையத்தை உடைத்து , அத்துமீறி நுழைந்து ஏதாவது செய்ய நினைப்பவரையே குறிக்கும். ஆனால் பாதுகாப்பு வளையத்தை சோதனை செய்வதற்காக தாக்குபவர்களை ஹேக்கர்ஸ் எனவும் , தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களை கிராக்கர்ஸ் எனவும் கூறலாம். இனி இதில் வரும் ஹேக்கர்ஸ் எனும் சொல் தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களையே குறிக்கும்.

ஹேக்கர்ஸ் பொதுவாக நல்ல அறிவு உடைய சட்டத்தை மதிக்காத நபராகவே இருப்பர், சிலர் அரசின் மேலுள்ள கோபத்திலும் ஹேக்கர்ஸ் ஆக மாறுவதுண்டு . இவர்கள் தங்களுக்குள் இணைய குழுக்களை அமைத்துக் கொண்டு தங்கள் வழிமுறைகளை பரிமாறிக் கொண்டு நல்ல வலுப் பெற்று விடுகின்றனர். நல்ல திறமுடைய ஹேக்கர்ஸ் வழிமுறைகளையும், கருவிகளையும் வடிக்க, தொடக்க நிலையிலுள்ளோர் அதன் மூலம் அனுபவம் பெறுகின்றனர் .

ஹேக்கர்ஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் :

சம்மந்தமே இல்லாத நபரின் கணிணி காரணமே இல்லாமல் தாக்கி தகவல்கள் பாதிக்கப் படும்.

சில அரசு இயந்திரங்களின் வலைப்பின்னல் இது மாதிரி தாக்குதல்களுக்கு ஆளாகும். காரணம் என்று பார்த்தால் தாக்கியவரின் சமூகத்திற்கு எதிரான கோபம் இவ்வாறு திசை மாறியிருக்கும் .

மற்றவரின் அறிவுசார் தகவல்களைத் திருடவும் இவ்வாறு நுழைபவர்கள் முயல்வது உண்டு.

லாபநோக்கில் தாக்கும் ஹேக்கர்ஸ் நம் கணிணியில் டிரோஜன் குதிரையையோ, வைரஸையோ நம் கணிணியில் நிறுவி , நம் கணிணியை அடிமைக்கணிணி(ஜோம்பி)யாக மாற்ற வாய்ப்பு உண்டு .

அடையாளத் திருட்டு: நம் கணிணியில் உள்ள நமது தகவல்கள் திருடப்பட்டு, நமது வங்கி கணக்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

வருங்காலத்தில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு ஹேக்கிங்கை உபயோகப் படுத்தக் கூடும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

2 comments:

  1. இந்த ஹேக்கிங் பற்றி 2 வருடங்களுக்கு முன்புகூட நான் தவறான எண்ணம் கொண்டிருந்தேன்.
    மென்பொருள் பற்றி படிக்கும் போது இது நாணயத்தின் மறுபுறம் என்று தெரிந்துகொண்டேன்.
    சில நல்ல ஹேக்கிங் கூட உள்ளது.
    அடுத்தவர் நலனில் குந்தகம் ஏற்படாதவரை,எல்லா ஹேக்கிங்கும் நல்லவை தான்.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள். சிலருக்கு மக்களுடைய பொருள்களை சேதாரம் செய்வதில் என்னதான் சந்தோஷமோ?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!