Wednesday, November 16, 2011

பின்னூட்டங்களில் இருக்கும் நகைச்சுவை - பகுதி 1.


சமீபத்தில் நாகு, அவர்  அதிகம் எழுதாமல் பின்னூட்டமே போட்டுக் கொண்டிருப்பதற்கு வருத்தப் பட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதைப் படிச்சதும் எனக்கு ஒன்னு தோணிச்சு, பின்னூட்டம் எழுதரது கஷ்டம் அதுவும் காமெடியா எழுதரது ரொம்ப கஷ்டம்.  அதுலயும் தெரிஞ்சவங்க எழுதி அதுக்கு பின்னூட்டம் போடரது ரொம்ப ரொம்ப கஷ்டம்.  நான் எழுதரதுக்கெல்லாம் சூப்பர்ன்னு பின்னூட்டம் வந்தா, பாவம் எவ்வளவு கஷ்டப் பட்டு படிச்சுட்டு அதுக்கு தலையெழுத்தேன்னு பின்னூட்டம் போடராங்களேன்னு நினைச்சுப்பேன்.  அதாவது நான் சொல்ல வந்தது என்னன்னா, தெரிஞ்சவங்க எழுதினா சூப்பர்ன்னு தான் பின்னூட்டம் போடுவாங்க.  தெரியாதவங்க எழுதினா?

எப்படி போடுவாங்க?  இப்படி போடுவாங்க:
இடம்: விகடன்:
தலைப்பு: அன்று எம்.ஜி.ஆர்சொன்னது இன்று அப்படியே நடக்கிறது!
மனம் திறக்கும் ராசாத்தி அம்மாள்:

னிமொழியின் சிறைப் படலத்துக்குப் பிறகு முதன்முறையாக இங்கே மனம் திறக்கிறார் ராஜாத்தி அம்மாள்...
 ''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தப்பகனிமொழி தீவிர அரசியலில் இல்லைஅது எப்போ எம்.பிஆச்சுஎப்போ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததுனு ஒப்பிட்டுப் பார்த்தாலே... கனிமொழிக்கு இதில் எள்முனை அளவுகூடச் சம்பந்தம் இல்லைங்கிறது தெரியும்ஆனாதிட்டமிட்டு கனிமொழியை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இழுத்துவிட்டுட்டாங்ககனிமொழியை விசாரிச்ச சி.பி.அதிகாரிகளுக்கே எங்கள் தரப்பில் இருக்கும் அடிப்படை நியாயம் புரியும்இருந்தும் 150 நாட்களுக்கும் மேலா கனிமொழி சிறையில் இருக்குதுஜாமீன் மனுவுக்கு ஆட்சேபணை தெரிவிக்க மாட்டோம்னு சி.பி.தரப்பே சொன்ன பிறகும்கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்குகோர்ட்டுக்கு கனிமொழி வந்தப்ப, 'கவலைப்படாதம்மா... உன்னோட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்னிக்கு விடிவு கிடைச்சிடும்னு ஆறுதல் சொன்னேன்எப்பவும் சிரிக்கிற மாதிரியே மென்மையா சிரிச்சதுஜாமீன் மனுவை நீதிபதி நிராகரிச்சப்பவும் அதே மாதிரி சிரிச்சதுஅந்த சிரிப்பில் இருக்கிற துயரம் எனக்கு மட்டும்தான் தெரியும்ஒரே ஒரு பெண்ணைப் பெத்தெடுத்துஇப்படி அல்லாடவிட்டுட்டோமேனு என் மனசு கொதிக்குது!'' என்றபடியே கண் கலங்கியவரிடம் சற்று இடைவெளிக்குப் பின் நம் கேள்விகளை வைத்தோம்.
''ஜாமீன் நிராகரிப்புக்குப் பிறகு கனிமொழி என்ன மன நிலையில் இருக்கிறார்?''
''பெத்த தாயா நான்தான் கனிமொழிக்கு ஆறுதல் சொல்லணும்ஆனாகனிமொழி என் கையைப் பிடிச்சு எனக்கு ஆறுதல் சொல்லுதுநான் கண் கலங்கியதைப் பார்த்து, 'அழுவுறதால ஏதும் ஆகப் போறது இல்லம்மா... ஜாமீன் கிடைக்காததுல உங்களுக்குத் தாங்க முடியாத வருத்தம்தான்ஆனாஎதையும் தாங்குற வல்லமையை இந்த மாதிரியான பிரச்னைகளே எனக்குக் கொடுத்துச்சுனு சொன்னதுதிகார் ஜெயில்ல இருந்து கோர்ட்டுக்குக் கிளம்பினப்பஅங்கே இருக்கிற கைதிகளோட குழந்தைகள் சிலர், 'இனிமேல் இங்க வர மாட்டீங்களா?’னு அழுது இருக்காங்கஎங்கே போனாலும் யாரோட கஷ்டத் தையும் பொறுக்காத குணம் என் பொண் ணுக்குபெட்ஷீட்சாப்பாடுபழங்கள்னு சிறைக்குள் இருக்கிற அந்தக் குழந்தைகளுக்கும் கனிமொழி நிறைய உதவுதுமறுபடியும் சிறைக்குக் கிளம்பிய கனிமொழிஅந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறதுக்காக சாக்லேட் வாங்கிவரச் சொன்னதுஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும். 'பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்குஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்னு சொல்லிட்டுக் கிளம்பிப் போச்சுஎல்லாத்தையும் கடந்த மனுஷியா என் மக பேசுறதைத் தாங்க முடியலைஇந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?''
''கனிமொழியைச் சிக்கவைத்ததிலும்அடுத்தடுத்த சில நிகழ்வுகளிலும் காங்கிரஸ் கட்சியின் சில கோபங்களும் இருப்பதாகச் சொல்கிறார்களே?''
''இதில் யாரோட கோபம் இருந்தாலும் சரி... ஒரு சின்னப் பையனோட தாயா கனிமொழியை ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்க்கணும்மகனைப் பிரிஞ்சு திகார்ல அது படுறபாட்டை ஒரு தாயா என்னால தாங்க முடியலைகலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் வந்ததா சொல்லப்படுற விவகாரத்தில்கனிமொழிக்குச் சம்பந்தம் இல்லைனு அதிகாரிகளுக்கும் தெரியும்அரசியல் பண்றவங்களுக்கும் தெரியும்கனிமொழியைக் காப்பாத்தச் சொல்லி நாங்க கெஞ்சலைஅனுபவிக்க வேண்டிய அத்தனை சிரமங்களையும் அது அனுபவிச்சிட்டுதுஒரு விசாரணைக் கைதியோட நியாயமான கோரிக்கைதானே ஜாமீன் கேட்கிறதுஅதைத் தடுக்கிற விதமா வழக்குல திடீர்னு இரண்டு பிரிவுகளைப் புதுசாச் சேர்த்து ஏன் கனிமொழியைச் சிக்கவைக்கணும்அதைத் தாண்டியும் ஜாமீன் கேட்பதற்கான எல்லா வாய்ப்புகள் இருந்தும்அது எப்படிச் சாத்தியம் இல்லாமப்போச்சுனு எங்களுக்குப் புரியலை.

நாங்க சட்டத்தை மதிக்கிறோம்நீதியை நம்புறோம்என் பொண்ணு தவறு பண்ணி இருந்தால்எல்லா விசாரணைகளையும் நடத்தி என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்கஆனாவிசாரணைக் கைதியாவே கனிமொழியைச் சாகடிச்சிடாதீங்ககனிமொழிக்கு எதிரான சதியை யார் பண்ணினாலும் சரி... ஒரே ஒரு தடவை திகார் ஜெயிலைப் போய்ப் பார்த்துட்டு வாங்கஉங்களால் ஒரு நாள் அங்கே இருக்க முடியும்னு தோணுச்சுன்னாநீங்க தொடர்ந்து பண்ணுங்க!''
''நீங்களும் கருணாநிதியும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து கனிமொழிக்காக மன்றாடியதாகச் சொன்னார்களே?''
''அவர் (கருணாநிதிமகளைப் பார்க்கிறதுக்காகத்தான் டெல்லிக்கு வந்தார்அப்போ சோனியா காந்தி அம்மையாரைச் சந்திக்காமத் திரும்புவது அரசியல் நாகரிகமாக இருக்காதுன்னுதான் அந்தச் சந்திப்பு நடந்துச்சுஅமெரிக்காவுக்கு சிகிச்சைக்குப் போய் வந்ததுக்கு அப்புறம் சோனியா காந்தியை அவர் சந்திக்கலைஅதனால்உடல் நலம் சம்பந்தமாத்தான் ரெண்டு பேரும் பேசினாங்களே தவிரகனிமொழிபத்திப் பேசலைஇன்னிக்கு கனிமொழி எந்த மாதிரியான துயரத்தை அனுபவிக்கிதுனு நாங்க சொல்லாமலே சோனியா காந்தி அம்மையாருக்குத் தெரியும்யார் மேலயும் வருத்தப்படுற நிலையில் நாங்க இல்லை!''
''ஓர் இலக்கியவாதியாக மட்டுமே இருந்த கனிமொழியை அரசியலுக்கு இழுத்து வந்து இப்படி ஆக்கிவிட்டீர்கள் என்று உங்களைக் குற்றம் சாட்டுகிறார்களே?''
''கனிமொழியைக் கையைப் பிடிச்சு யாரும் அரசியலுக்கு இழுத்து வர வேண்டியது இல்லைஅது சின்னக் குழந்தையா இருந்தப்பவே அரசியல்ரீதியான ஆர்வத்தை நிறைய பேர் ஊட்டினாங்கஎம்.ஜி.ஆர்அவர்கள் கனிமொழியை அள்ளிக் கொஞ்சி, 'உங்க அப்பா மாதிரி நீ வருவம்மானு சொன்னார்வேறு யாரைப் பார்த்தும் எம்.ஜி.ஆர்அப்படிச் சொன்னது இல்லைஅவர் மனசாரச் சொன்ன வார்த்தைகள்தான் இன்னிக்கு நடந்திருக்குஐந்து முறை முதல்வரா இருந்தவரோட மகளை அரசியலுக்கு யாரும் இழுத்து வரணும்கிற அவசியம் இல்லைகனிமொழி சின்னப் பொண்ணா இருந்தப்ப கோயம்புத்தூருக்கு விமானத்தில் போய்ட்டு இருந்தோம்நாவலர் நெடுஞ்செழியனும் குடும்பத் தோட வந்திருந்தாங்கஅப்போ விமானம் தரை இறங்குறப்ப வேகமாக் குலுங்குச்சுநான் பயந்துபோய், 'முருகானு கத்தினேன்அப்போ கனிமொழி என்ன சொன்னுச்சு தெரியுமா... 'ஏம்மாமுருகானு கத்துறமு.-னு கத்தியிருக்க வேண்டியதுதானேநீ முருகானு கத்தினதைப் பார்த்துசுத்தி இருக்கிறவங்க தலைவரைத் தப்பா நினைக்க மாட்டாங்களானு அஞ்சாவது படிச்சப்பவே பகுத்தறிவுக்கொழுந்தா இருந்த கனிமொழிஅரசியலுக்கு வந்ததில் ஆச்சர்யமே இல்ல.  
தலைவரைக் கைது பண்ணின நாள்தான் கனிமொழியோட அரசியலை வெளிக்கொண்டுவந்த நாள்சிறை வாசல்ல உட்கார்ந்து அவர் துடிச்ச துடிப்பு யாருக்கும் மறந்திருக்காதுஅரசியலுக்கு வந்ததுக்கு அப்புறமும் கனிமொழி ஓர் இலக்கியவாதியா மட்டுமே இருக்கிறதை நினைக்கிறப்பதான் கஷ்டமா இருக்குபதவிகளுக்கு ஆசைப்படுற சராசரி அரசியல்வாதியா கனிமொழி இல்லைகடந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திஎத்தனை லட்சம் பேருக்கு அது வாழ்வு ஏற்படுத்திக்கொடுத்துச்சுனு எல்லோருக்குமே தெரியும்.  ஊனமுற்றவர்களுக்காகவும் திருநங்கைகளுக்காகவும் அது எந்த அளவுக்கு ஆத்மார்த்தமா நல வாரியம் போன்ற ஆக்கப்பூர்வ உதவிகளைச் செஞ்சுதுனு எல்லோருக்குமே தெரியும்உதவிகளை மட்டுமே செஞ்சதாலதான்இன்னிக்கு இவ்வளவு பெரிய கொடுமைகளை அனுபவிக்கிற நிலையில இருக்குஅரசியலையும் செஞ்சிருந்தா உள்ளே போயிருக்க வேண்டிய அவசியமே உண்டாகி இருக்காது!''
''செய்த தவறுக்குத்தானே கனிமொழி கஷ்டப்படுகிறார் எனச் சிலர் சொல்வதுபற்றி?''
''நெருப்புல குதிக்கிறவரைக்கும் சீதை யும் தவறானவளாத்தான் பார்க்கப்பட்டாள்இதிகாசத்திலேயே இப்படித்தாங்கிறப்பநிகழ்காலத்தில் எங்களை நோக்கி வர்ற விமர்சனங்களைச் சட்டைபண்ற நிலையில் நாங்க இல்லைகனிமொழியை மீட்க எல்லோருமே போராடுறோம்கட்சிஉறவுனு எல்லோருடைய அன்பையும் அக்கறையையும் நினைச்சுப் பார்க்கிறோம்குற்றம் சாட்டப்பட்டாலே குற்றவாளியாப் பார்க்கிறதும் பேசுறதும் இங்கே எல்லாருக்கும் பழக்கம் ஆயிடிச்சுபேசுறவங்க என்ன வேணும்னாலும் பேசட்டும்... ஆனா, 200 கோடி ரூபாய்க்கும் கனிமொழிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு நிச்சயம் நீதிமன்றம் ஒரு நாள் சொல்லும்அதுவரைக்கும் எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!''

இனி பொதுமக்களின் பின்னூட்டங்கள்.  இதில் சொல் பிழைகளை விட்டுடுங்க.  அவங்க உணர்வுகளை மட்டும் பாருங்க. 

  •  கடவுள் நல்லவர்களை அதிகம் சோதிப்பார் ஆனால் கை விட மாட்டார்கெட்டவர்களுக்கு நிறையா தருவார் ஆனால் ஜாமீன் தரமாட்டார்.!


  •  நாங்க ஏங்க திஹாருக்கு போயி பார்க்கணும், 200 கோடி நாங்களா அடிச்சோம்? அப்படிப்போடு... போடு... போடு...!


  • கண்ணே கனியம்மா வைத்து விடுவார்கள் உனக்கு ஆப்பாம்மானு அன்றே எம்ஜீஆர் சொன்னரோன்னு நினைச்சேன்.


  •  ஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும்" - அக்கா வெளியதான் எல்லாருக்கும் அல்வா குடுத்துட்டாங்களேஅதான் அல்வா ஸ்டாக் காலியாயிருக்கும் சாக்லேட் குடுத்துருக்காங்கவிடுங்க தலைவர்கிட்டே சொன்னமுன்னா கிண்டித் தந்துட்டு போறாரு!


  • ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரிச்சப்பவும் அதே மாதிரி சிரிச்சது." - ஏதாவது பேதலிச்சிருக்கலாம்.


  • கனியக்காவிற்க்கு ஒரு லேப்டாப் குடுத்துஅதில் விகடன் வாசகர்களின் கமென்ட்டை படிக்க ஒரு வாய்ப்பு தாருங்கள்...


  • சின்ன வயசு...எந்த பள்ளியில படிக்குது புள்ளபிஞ்சுலே பழுத்ததோ?  தீவிர அரசியலில் .....லேசான அரசியல் .....விளக்க முடியுமா அம்மையாரே?



  • கனி: 'பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்குஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்


மக்கள்நாங்கள் படவேண்டிய நஷ்டத்தையெல்லாம் பட்டாச்சுஇனி புதுசா என்ன இருக்குபணம் கிடைக்கலைன்னாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம்...

  • இப்படியே போச்சுன்னா 1 லட்சத்தி 75 ஆயிரத்த தாண்டி போயிரும் ஆமா சொல்லிபுட்டேன்.....கருதுக்களின் எண்ணிக்கையை சொன்னேன்.


  • என்னடா நாராயணா .... உள்ள ஒரே புழுக்கம் ...ஓஹ்ஹொ ஹ்ஹொஹ்ஹோ ... சீபீஅய்னாலே இதெல்லாம் இருக்கறதானடா ...... ..... .....அரசியல்வாதினாலே தியாகிகள்தானே ...... ஆயிரம் என்கொயரீஸ்.......ஆயிரம் எங்கேஜ்மென்ட்ஸ் ..... அய்ய்யோ அய்யோ ....இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும் ....எனக்கு செல வெப்பாங்க ....ஸ்டூடன்ட்ஸெல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க ................................ சத்திய சோதன ............ பாரதமாதாவே சோ சாரீ ..... அரசியல்னா இதெல்லாம் சாதாரணமப்பா ......


  • எனக்கு ஒரு டவுட்டுஜெயிலுக்கு போய்ட்டு வந்தால் அரசியலில் முதிற்சி வந்திருமாஅப்படீன்னா கனி இன்னும் கொஞ்ச நாள் உள்ளுக்கு இருந்தால் இன்னும் முத்தும் தானேஎப்பிடி என் டவுட்டு.


  • சோனியா காந்தியிடம் "கனிமொழி காப்பிட்டு திட்டம்எடுபடவில்லை....


  • ஒரு தாயா உங்க மகளை பார்க்குறது சரி.... ஒரு அப்பாவி இந்தியனாய் ஒன்னேமுக்கால் லட்சம் கோடிகளை கொஞ்சம் அண்ணாந்து பாருங்களேன்...


  • அடிச்சது ஒன்னேமுக்கால் லட்சம் கோடிபடிச்சது 150 நாட்கள் திஹார் சிறையில்... கூட்டி கழிச்சு பார்த்தாலும் கணக்கு ஒட்ட மாட்டேங்குதே... ஒன்னேமுக்கால் லட்சம் கோடிகள் அடிச்சுட்டுஅரை கிலோ சாக்லேட் வாங்கி தருவது பெரிய காரியமா???


  • கண்ணகியின் கலக்கம்..!
  • அடுத்து வள்ளுவருக்கும் கலக்கும்..


  • எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!''--------> ஈரமான ரோசாவேநன்றே நடக்கட்டும்அதுவும் இன்றே நடக்கட்டும்காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போகலாம்.


  • ஏம்மாமுருகானு கத்துறமு.கநு கத்தியிருக்க வேண்டியதுதானேநீ முருகானு கத்தினதைப் பார்த்துசுத்தி இருக்கிறவங்க தலைவரைத் தப்பா நினைக்க மாட்டாங்களானு அஞ்சாவது படிச்சப்பவே பகுத்தறிவுக்கொழுந்தா இருந்த கனிமொழிஅரசியலுக்கு வந்ததில் ஆச்சர்யமே இல்ல -  அப்ப நடிப்பு 5 வயசிலேயே ஆரம்பிச்சிருச்சாஅரசியலுக்கு வந்ததில் ஆச்சரியம் இல்லை.


  • கனிமொழிக்கு எதிரான சதியை யார் பண்ணினாலும் சரி... ஒரே ஒரு தடவை திகார் ஜெயிலைப் போய்ப் பார்த்துட்டு வாங்கஉங்களால் ஒரு நாள் அங்கே இருக்க முடியும்னு தோணுச்சுன்னாநீங்க தொடர்ந்து பண்ணுங்க - கவலைப்படாதீங்க ஸ்டாலின் திகார பாத்துட்டாருஆனாலும் சதி தொடருதே.


  • இந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?' - கஷ்டம்தான், 1.76 லட்சம் கோடின்னா சும்மாவாவெயிட்டாத்தான் இருக்கும்.


  • பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்குஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்’ - அப்புறமென்ன இனிமே ஜாமீனுக்கு அப்ளை பண்ண வேண்டாம்.


  • ஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும். - நல்லா விசாரிச்சு பாருங்கராசா குடும்பமும் சாக்லேட் கொடுத்திருக்கும்கனிக்கு ஜாமீன் கொடுக்காமலிருந்ததுக்காக.


  • திகார் ஜெயில்ல இருந்து கோர்ட்டுக்குக் கிளம்பினப்பஅங்கே இருக்கிற கைதிகளோட குழந்தைகள் சிலர், 'இனிமேல் இங்க வர மாட்டீங்களா?’னு அழுது இருக்காங்கஎங்கே போனாலும் யாரோட கஷ்டத் தையும் பொறுக்காத குணம் என் பொண் ணுக்கு.- அதனால இனிமே நீதிபதி ஜாமீன் கொடுத்தாலும் கனியக்கா வாங்காம சிறைக்குள்ளேயே இருப்பார்.


  • சீதைதீயில் குதிக்க எந்த நாட்டின் பல்கலையில் பயிற்சி பெற்றார் என்று தெரியவில்லையே.. தன்க்குன்னா இந்தக் கேள்வியெல்லாம் வராதில்லஅது சரி.


  • உடல் நலம் சம்பந்தமாத்தான் ரெண்டு பேரும் பேசினாங்களே தவிரகனிமொழிபத்திப் பேசலை...


... இவருதான் டாக்குடர் களைஞர் இல்ல...

  • சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும்...


வழக்கமா ட்ரெய்ன்லதானே சாக்லேட் வாங்கிக் கொடுப்பாங்க (கொள்ளை அடிக்ரத்துக்கு)... அது சரி.. இப்பதான் ஜெயில்ல பணப்புழக்கம் அதிகமிருக்கே...

  • இந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?

      என்ன... ஒரு மூணு வயசு இருக்குமா?

  • எம்.ஜி.ஆர்அவர்கள் கனிமொழியை அள்ளிக் கொழ்ஞ்சி, 'உங்க அப்பா மாதிரி நீ வருவம்மானு சொன்னார்"............. அப்புறமென்ன..... வருங்கால முதல்வர் ரெடி...! ஸ்டாலினுக்கு ஆப்புத்தான்....!


  • முருகாவை முக என்று மாற்றியதால் இவர் இன்றுமுதல்
"வேப்பங்கொழுந்துமன்னிக்கவும் "பகுத்தறிவுக்கொழுந்து"
என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவார்



  • நெருப்புல குதிக்கிறவரைக்கும் சீதையும் தவறானவளாத்தான் பார்க்கப்பட்டாள்" - அப்புறம் ஏன் திஹாரை விட்டு வரணுமுன்னு துடியா துடிக்கிறீங்க?


  • எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!


ஆஹா படிக்கப் படிக்கச் சந்தோஷம்... அப்படியே ஆகட்டும் பக்தையே...

  • உங்க அப்பா மாதிரி நீ வருவம்மானு சொன்னார்.


அப்பருக்குப் புள்ளை தப்பாம பொறந்துருக்குன்னு அன்றே எம்ஜிஆர் கண்டு புடிச்சிருக்கார்... நாமதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே வர்ற வரைக்கும் அசடா இருந்துட்டோம்... கொஞ்சம் முன்னாலேயே இதைச் சொல்லியிருந்தா கொஞ்சம் அலர்டா இருந்துருப்போம்ல...

  • கனிமொழி இலக்கியவாதியாநாலு வார்த்தை எதுகைமோனையில் மொக்கையாக எழுதினால்.. மு. பொண்ணு என்பதால் ஃபேமஸ் ஆகி விட்டார்இல்லை என்றால் கை எழுத்துப்பத்திரிகை நடத்தும் எண்ணில் அடங்கதாவர் களிமொழியை விட அருமையாக இலக்கியம் படைக்கின்றனர்.


  • அன்று எம்.ஜிஆர் சொன்னது இன்று அப்படியே நடக்கிறது.


எப்புடிகலைஞர் எனக்கு ஆப்பு வெச்ச மாதிரி உங்களுக்கும் ஆப்பு வெச்சிருவாருன்னு சொன்னாரா.

  • இந்த அம்மா தொல்லையாலதான் அந்த அக்கா அரசியலுக்கு வந்துச்சு இல்லாட்டு அதுபாட்டுக்கு கிறுக்கிட்டு கவிதைன்னு பில்டப் கொடுத்துட்டு இருந்திருக்கும்.


  • நாராயணாகொசுத் தொல்லை தாங்க முடியலை.


  • ஏம்மாமுருகானு கத்துறமு..னு கத்தியிருக்க வேண்டியதுதானே. இனிமேல் 'நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முகஅப்படின்னு கத்துங்க மகளையும் கத்த சொல்லுங்கமு.வையும் நாக்க முகன்னு கத்த சொல்லுங்க.



  • செந்தமிழ் மானாட்டில் ஆராய்ச்சி கட்டுரை எழுதப்பட்டு வாசிக்கப்படும் அளவுக்கு தற்பெருமையும் தகுதியும் வந்திருந்தால் கூடவே இதையும் தாங்கித்தான் ஆகவேண்டும்.


  • அன்று எம்.ஜி.ஆர்சொன்னது இன்று அப்படியே நடக்கிறது!


-      என்ன ஜாமீன் குடுக்காதீங்கன்னு சொன்னாரா?
சம்பந்தமே இல்லாத தலைப்பு

முரளி இராமசந்திரன்


Friday, November 11, 2011

தடயம் - மர்மத்தொடர்




தடயம் மர்மத்தொடரின் பதிமூன்றாம் அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.

முரளி.