உன்னை மாதிரி அனைவரும் நினைத்தால்
உலகம் அன்றே அழிந்திருக்கும்
விருப்போ வெறுப்போ இவ் வுலகில்
சேர்ந்திருக்கத் தவறி விட்டாய்
உன்னைத் தாழ்த்திக் கொண்ட தனால்
தன்னந் தனியனாகி நின்றாய்
உன்னைத் தாழ்வாய் நினைத் ததாலே
உதிர்த்தாய் முப்பதிர்க்கு மேலுயிரை
தனிமை கொண்டது உன் குற்றம்
வஞ்சகம் வளர்த்ததும் உன்குற்றம்
வஞ்சகம் வளர்த்துக் கொண்டவனே பிறர்
நெஞ்சம் குமுறுவதைக் கேட்ப்பாயா ?
பள்ளியில் உன்னை ஒதுக்கினால் பயந்து (?!)
பதுங்கி வளர்ந்ததும் உன்குற்றம்
வாழ்வின் முதல் விதி போராட்டமே
வாழத் தவறிய சிறியவனே
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
எங்கள் கவிஞன் பாடியது
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
என்றும் அவன்வரி சொல்லியது
பார்த்ததில்லையா சோமாலியா போன்ற நாடுகளை
பசிக்கும் நீருக்கும் அலைவதை
அங்கும் சிரிப்பு இருக்கிறது மேலும்
அவர்கள் வாழ்வும் நிலைக்கிறது
போராட்டமே வாழ்வன்று அதன் விளைவாய்
நிச்சயம் கிடைக்கும் வாழ்வொன்று
எவரது வாழ்வும் போரட்டமே பின்பு
எஞ்சி நிலைப்பது ஆனந்தமே
போராடி வெல்பவன் மனிதனடா அதையன்றி
ஏங்கிக் கொள்பவன் கோழையடா.
மறக்க நினைக்கும் வெர்ஜினியா டெக் சம்பவம் குறித்து மீண்டும் எழுதியமைக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteநேற்றிரவு கொலையாளியின் video பதிவைப் பார்த்ததின் பாதிப்பை பகிர்ந்து கொள்ள எண்ணினேன் அவ்வளவே.
என்றும் அன்புடன்
சதங்கா
சதங்கா,
ReplyDeleteஉங்கள் கவிதையின் (கொஞ்சம் வசன நடையாக அங்கங்கே தெரிந்தாலும்) அதன் கருத்துக்கள் அனைத்தும் எனக்கு உடன்பாடே.
இந்த கடினமான நேரத்தில் நாம் அனைவரும் செய்யக்கூடியது, இந்தப் பாதகச் செயலினால் பாதிக்கப் பட்டுள்ள, நமக்கு தெரிந்த, தெரியாத குடும்பங்கள், மற்றும், அந்தக் கொலையாளியின் குடும்பத்தினர் அனைவருக்கும், இத் துயரத்திலிருந்து மீண்டு வர, துணிவும், திடமும், இறைவன் அருள, அவனிடம் இறைஞ்சுவதே என்பது என் கருத்து.
அன்புடன்,
முரளி.