நன்னண்பர் கூட்டம்வேண்டும்
நாலுபேரைத் தெரியவேண்டும்
நயம்பட விவாதிக்க
நல்லவார்த்தை பேசவேண்டும்
ஏதுமின்றித் திரிந்ததாலே
ஏந்தினாயோ துப்பாக்கி
பட்டுப் பட்டென்று
சுட்டு வீழ்த்தினாய்
ஆம்புலன்ஸ் சத்தத்தையும்
அலறல்கள் மீறியதே
பயிலும் உலகையே
பீதியில் ஆழ்த்தினாய்
உள்ளிருக்கும் எல்லோரையும்
மரணபயம் தொற்றியதே
மடிந்தாய் ஒருவழியாய்
மறுபடியும் வராதே
வந்தாலும்,
நன்னண்பர் கூட்டம்வளர்
நாலுபேரைத் தெரிந்துகொள்
நயம்பட விவாதிக்க
நல்லவார்த்தை கற்றுக்கொள்
ஏதுமின்றித் திரியாததால்
ஏந்தவேண்டாம் துப்பாக்கி ...
நல்ல கருத்து. தனிமையை விட கொடுமையானது ஏதுமில்லை. இதற்கு முன் நடந்த பல துப்பாக்கி சூடுகளுக்கு மன அழுத்தம், தனிமை, இனவெறி, போதை போன்ற வெகு சில காரணங்களே அறியப்பட்டது. என்று தணியும் இந்த துப்பாக்கி மோகம்?
ReplyDeleteகொடுமையான சம்பவம். சதங்கா நன்றாக சாடியிருக்கிறார். லோகநாதன் என்ற இந்தியரும் மடிந்திருக்கிறார்.
ReplyDeleteஇதன் தொடர்பாக ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நிகழவிருக்கிறது. விவரங்கள்:
We are deeply saddened by the tragic events of today at Virginia Tech where 33 young students lost their lives and many more have been severely injured.
In their memory Cultural Center of India is organizing a gathering on Wednesday, April 18, 2007 @ 7:00 pm at CCI Hall, 6641 Ironbridge Parkway, Chester, VA 23831 to pray, condole, and console each other.
May I ask all of you to please show our support to our Indian as well as American communities by gathering there.
On behalf of CCI and India Association I thank you for your support and apologize for such a short notice.
Thank you.
Rakesh Gupta - President
India Association of Virginia