"அமைதி "
அமைதி 
அதன் அர்த்தம் வெறும் 'நிசப்தம்'-அல்ல 
'மனம்', 'சுற்றம்',
'சூழல்'
இவை ஒவ்வொன்றும் அதனதன்
ஒழுக்கத்தில்
அசைதலும் 
ஓசைகள்
ஒலித்தலும்
ஆழ்ந்து
நனைந்தலும்
புறத்தாக்குதல்
துளியேனும்-இன்றி - பூற்ணமாய் செய்தொழில் செய்தலும் 
சிந்தையில்
வேட்கையை சிற்பமாய்
செதுக்குதலும் 
புன்னகையை
உள்ளிருந்து
பூத்தலும்
சுற்றத்தின்
சுயமில்லா
அன்பினையும், சூழலின் களங்கமில்லா இயற்கையையும்
இருப்பதை
இருப்பதுபோல்
ஏற்பதும் ஏற்று
ரசித்தலும்
சிதறாத சிந்தையும் 
சீரான சுவாசமும்
மட்டுமே "அமைதி" என்பேன்