வெர்ஜீனியா டெக் சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக.....அவர்தம் ஆத்மா சாந்தியடையவும், அவர் குடும்பத்தோர் இந்தத் துயரத்தை எதிர்கொள்ளத் தேவையான மனதைரியத்தை இறைவன் அவர்களுக்கு அளிக்கவும்...
கண்களிலே கனவுகளுடன்
கல்லூரியில் கால்வைத்தாய்
ஏதோஓர் கொடுமைக்கு
எதனாலோ பலியானாய்
உயிர்விலகும் நேரத்தில்
உன்மனதின் நினைவெதுவோ
உன்வாழ்வின் லட்சியங்கள்
(உன்)உயிருடனே புதைந்தனவோ
அன்பூற்றி உனைவளர்த்த
அன்னை என்செய்வாளோ
அரவணைத்துப் போற்றிய
உன்தந்தை என்செய்வானோ
தருமங்கள் நியாயங்கள்
புரியாத மாயங்கள்
ஏதேதோ கேள்விகள்
விடைதெரியா வினோதங்கள்
மிதமிஞ்சிய அன்பாலே
இறைவன் உன்னைச்
சேர்த்துக் கொண்டான்
என்றே நம்பிடுவோம்
நம்பித் தொழுதிடுவோம்
பிரார்த்தனைகளுடன்...
கவிநயா.
/வெர்ஜீனியா டெக் சம்பவத்தில் உயிரிழந்தோருக்காக.....அவர்தம் ஆத்மா சாந்தியடையவும், அவர் குடும்பத்தோர் இந்தத் துயரத்தை எதிர்கொள்ளத் தேவையான மனதைரியத்தை இறைவன் அவர்களுக்கு அளிக்கவும்...
ReplyDelete/
எனது பிராத்தனைகளும்...
உருக்கமான வரிகள் கவிநயாமீனா..
ReplyDeleteதருமங்கள் நியாயங்கள்
புரியாத மாயங்கள்
ஏதேதோ கேள்விகள்
விடைதெரியா வினோதங்கள்
மனதைத் தொடுகின்றன ஆழ்ந்த சோகம் ஆக்கிரமிக்கிறது,,இங்கேயே இருப்பதால் இன்னமும் பாதிப்பாய் இருக்கிறது
ஷைலஜா
//அன்பூற்றி உனைவளர்த்த
ReplyDeleteஅன்னை என்செய்வாளோ
அரவணைத்துப் போற்றிய
உன்தந்தை என்செய்வானோ//
உங்கள் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன்.
பேரா. லோகநாதனின் அன்னையின் கதறலை நேற்று "சன்"னில் பார்த்தேன்.
அவர்களின் தள்ளாத வயதில், மகனின் துக்க செய்தி கேட்டு, அவர்கள் புலம்புவது கண் கசியச் செய்தது.
இந்த நாட்டின் துப்பாக்கிக் கலாசாரத்திற்கு தன் அருமந்த மகனை/மகளைப் பலிகொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கும் அத்தனை பெற்றோருக்கும் என் அனுதாபங்கள்.
தாளாத சோக நிகழ்வு இது!
ReplyDeleteஆறுதல் கூட ஆற்றிடுமா எனத் தெரியவில்லை.
இருப்பினும் வேண்டிடுவோம்!
/* மிதமிஞ்சிய அன்பாலே
ReplyDeleteஇறைவன் உன்னைச்
சேர்த்துக் கொண்டான்
என்றே நம்பிடுவோம்
நம்பித் தொழுதிடுவோம் */
ஆமென்.
ப்ளாக்ஸ்பர்கில் நாங்கள் ஒரு 10 வருடங்களுக்கு முன்பு 3 வருடங்கள் வசித்திருக்கிறோம். மறைந்த லோகநாதனை சில கூட்டங்களில் பார்த்திருக்கிறோம், சில முறை பேசிக்கூட இருக்கிறோம். அவருடைய படத்தை தொலைக்காட்சியிலும், வலையிலும், தினசரியிலும், பார்த்தபிறகு அவரை நன்கு நினைவுக்கு வருகிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.பல இந்தியப்பேராசியர்களும், இந்திய மாணவ மாணவிகளும், இந்திய வம்சாவளியில் வந்த மாணவ மாணவிகளும் நிறைந்த ஒரு பல்கலைக்கழகம் "வெர்ஜினியா டெக்". இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல நாட்டவர் பயிலும்- பயிற்றுவிக்கும் ஒரு பல்கலைக்கழகம்.இது போன்ற ஒரு கோர சம்பவம் இது வரையில் நடந்தது இல்லை.
ReplyDeleteஎங்கள் பிரார்த்தனைகளும்....