Wednesday, March 28, 2007

பேர் என்னடா பேர் பேர்?

எல்லோரும் படித்த படிப்பிற்கேற்ற வேலை பார்ப்பவர்கள் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. எனக்கு தெரிந்தவர் ஒருவர் கஷ்டப்பட்டு டாக்டர் படிப்பு படித்து டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் IAS தேர்வு எழுதி பாஸ் பண்ணி கலெக்டராக இருக்கிறார். Charted Accountancy, Company Secretary எல்லாம் படித்து பாஸ் பண்ணிவிட்டு மலேஷியாவில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதிக்கொண்டிருக்கிறார் என் மற்றொரு நண்பர். நான் என்ன படித்துவிட்டு இப்படி ப்ளாகியாகி குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? என் கதை பெரிய கதை. கூடிய விரைவில் என் சுயசரித்திரத்தை எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.
இப்படி இவர்களைப்பற்றி சிந்தித்துக்கோண்டிருந்தேன். அப்போது ஒருவரின் பெயருக்கேற்ற வேலை என்னவாக இருக்கலாம் என்று யோசித்த போது உதித்த சில பெயர்களை கீழே அடுக்கியுள்ளேன்.
(குறிப்பு: உங்கள் பெயர் இந்தப்பட்டியலில் இருந்து உங்கள் மனம் நோகும்படி இருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். இது ஒரு கற்பனையே)

பெயருக்கேற்ற வேலை
பலராமன் - பளு தூக்குபவர் (Weight Lifter)
சிங்காரம் - Hair Stylist
சாரதி - Driver
பார்த்தசாரதி - ரொம்ப தெரிந்த driver
குகன் - Ship captain
சம்மந்தம் - கல்யாண தரகர்
வளர்மதி - டீச்சர்
சிவப்பிரகாசம்/ஞானபிரகாசம் - லைட்பாய்
மார்க்கண்டேயன் - Life Insurance Agent
கார்மேகம்/நீலமேகம் - Weatherman (Meteorologist)
சாமிகண்ணு - Eye Doctor
அப்பு - Painter
தாண்டவராயன் - Long Jump/High Jump athlete
பாரி - Loan Officer
தச்சு(தட்சிணாமூர்த்தி) - Carpenter
வாதிராஜ் - Lawyer
பஞ்சவர்ணம் - Artist
பவுன்ராஜ் - Goldsmith
பன்னீர் - Perfume shop owner

பெயருக்கு பொருந்தாத வேலை
சர்கஸ் கலைஞர் - ஆடியபாதம்
பைனான்சியர் - பிச்சை
Fireman - பஞ்சு
Carpet shop owner - கரிகாலன்
Olympic runner - நடராஜன்
Public speaker/Orator - சாந்தகுமார்

(குறிப்பு: இதற்கு மேலும் யோசித்து என் மண்டை காய்ந்து விட்டது - உங்களால் முடிந்தால் பட்டியலை நீட்டவும்)

6 comments:

  1. ஜம்புலிங்கம் - Longjump/highjump champion
    பாக்கியராஜ் - கடன் வசூலிப்பவர்
    ஆரோக்கியராஜ் - டாக்டர்
    சித்து - மந்திரவாதி
    குழல்மொழி - பாடகி
    காத்தவராயன் - செக் யூரிடி ஆபிசர்
    தங்கவேலு - நகைக்கடை
    ரத்னசாமி - நகைக்கடை

    ReplyDelete
  2. வாங்கப்பு இலவசக்கொத்தனாரே! எங்க இணைய தளத்துக்கு வருகை தந்து ஒரு 'அப்பு' அப்பினதற்கு மிக்க நன்றி. மீண்டும் வருக!

    ReplyDelete
  3. நாகு, பட்டியலை நீட்டியதற்கு மிக்க நன்றி. இன்னும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். நிறைய பெயர்கள் இருக்கின்றன. சாவகாசமாக யோசித்து பதிவிடவேண்டும். உங்களாலான கைங்கர்யத்தையும் தொடரவும்.

    ReplyDelete
  4. வேலைக்கு தகுந்த பெயர்கள்:

    மீனா - நீச்சல் சொல்லித்தருபவர்
    கலா/சித்ரா - ஓவிய ஆசிரியர்
    ஸ்ருதி - பாட்டு வாத்தி(யார்)
    புவனா - புவியியல் ஆசிரியர்
    அர்த்தநாரி - 'பால்'மாற்றும் சர்ஜன்(கொஞ்சம் ஓவர்?)
    நாகு - பாம்பாட்டி


    வேலைக்கு பொருந்தாத பெயர்கள்:

    சாய்ராம் - நீதிபதி(யார் பக்கமும் சாயாமல் இருக்க வேண்டுமே)
    மங்களம் - கேபரே டான்ஸர்
    குமாரி - கல்யாண தரகர்

    ReplyDelete
  5. ஆசைகொண்டான் - சாமியார், துறவி
    வணங்காமுடி - முடி திருத்துபவர்
    தாமரை, தாமரைக்கண்ணன், தாமரைச்செல்வி, தாமரைச்செல்வன் - பூ விற்பவர்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!