நாமெல்லாம் ஏதோ பெரிய வஸ்தாதுகள் என்று நினைத்துக் கொள்ளலாம். எல்லாம் நம்ப பேட்டையில்தான். ஜில்லா கத்திரிகளின் ஜம்பம் சொந்த ஜில்லாவில்தான். இங்கே பாருங்கள், பூமி என்கிற ஜில்லா கத்திரி, பேட்டை பிஸ்தா!
சொந்த ஜில்லாவில் இருந்து ஒரு வட்டம் வெளியே வந்தவுடனே, பாருங்கள். நிலைமை எப்படி போகிறது என்று?
அதை விட்டு இன்னும் கொஞ்சம் வெளியே வந்து சூரிய ஜோதியில் கலந்த உடனே, பாருங்கள், கடுகாகிவிட்டோம்.
இன்னோரு பெரிய வஸ்தாது அருகில் போய் பார்த்தால், துக்குளியோண்டு, துக்குளியோண்டு என்பார்களே - அதாகிவிட்டோம்.
அதைவிட ஒரு பெரிய பாஷா இருக்கிறார். அவர் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களிலேயே, பிரகாசத்தில் பதினைந்தாம் இடம் வகிக்கிறாராம். நம்மூரில் இருந்து ஆயிரம் ஒளிவருடங்களுக்கு மேலான தொலைவில் இருக்கிறார். அவர் முன்னே, நாமெல்லாம் ஜுஜுபி! அதனால்தான் கடுகு சிறுத்தாலும், மூர்த்தி சிறிது என்றெல்லாம் பழமொழி சொல்லி பஜனை பாடிக்கொண்டிருக்கிறோம். வேறு ஆள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும்வரை நாம்தான் ராஜா! ஆனால் என்ன ஜுஜுபி ராஜா!!
பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது !!
ReplyDeleteசுவையான தகவலுக்கு ந்ன்றி !!!
ஒப்பீட்டுக்கு அற்புதமான் படங்கள் -
ReplyDeleteஒரு படம் பல பக்க எழுத்திற்கு சமம்
என்பதற்கு உதாரணமாக.
வாழ்கை ஒரு வட்டம் என்பது உண்மைதானா !!!!
ReplyDeleteமேலும் X-planate , நிபிறு2012 ஐ பற்றி உங்களின் கருத்து ???????