Tuesday, March 06, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 5

வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள்:

பெரும்பாலானோர்க்கு இந்த தலைப்பைப் பார்த்த உடன் தோன்றும் முதல் கேள்வி ? நான்தான் நல்ல வைரஸ் ஸ்கேனர் வைத்துள்ளேனே! அது சொல்லாதா ? என்பதாகத்தான் இருக்கும். சில சமயங்களில் நாம் மறதியில் அதை அப்டேட் செய்யாமல் விட வாய்ப்புண்டு , அது மட்டும் அல்லாமல் சில வைரஸ்களை நம் ஸ்கேனர் கண்டு பிடிக்க இயலாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு .

அடிக்கடி கணிணி நின்று போகும், அல்லது திரும்ப திரும்ப ஆரம்பிக்கத் துவங்கும்.

மிக மெதுவாக இயங்க ஆரம்பிக்கும், அல்லது தவறாக இயங்க ஆரம்பிக்கும்.

இன்டர்நெட் தொடர்பு விடுபட ஆரம்பிக்கும்.

சில சிஸ்டம் பைல்கள் தொலைந்து போக ஆரம்பிக்கும். அல்லது பாதிப்படையும்.

உங்கள் மின்னஞ்சலில் உள்ள சென்ட் ஐட்டத்தில் நீங்கள் அனுப்பாமலே மின்னஞ்சல் அனுப்பப் பட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கும் .

உங்கள் கணிணி பூட் ஆகாமல் சில தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் .




இவற்றில் எதேனும் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உங்கள் கணிணி வைரஸால் பாதிக்கப் பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு .




வைரஸ் தாக்கினால் செய்ய வேண்டியன:

முதலில் நெட் இணைப்பைத் துண்டியுங்கள்.

இரண்டாவது உங்களிடம் உள்ள ஆண்டி வைரஸ் பேக்கேஜை ஆழ்நோக்கில் ( Deep scan) இயங்க விடுங்கள். பெரும்பாலும் இதிலேயே பிரச்சனை சரியாகிவிடும் .

ஆனால் , வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டு குணப் படுத்த முடியாவிட்டால் , உங்கள் கணிணியின் நினைவகத்தில் வைரஸானது நீக்க முடியாதவாறு இயங்கிக் கொண்டிருக்கலாம் , அவ்வாறு இயங்கிக் கொண்டிருக்குமேயானால் உங்கள் கணிணியை திரும்பத் துவங்குங்கள். அப்படித் துவங்கும் போது திரையில் ஏதேனும் தோன்றத் துவங்கும் முன் (விண்டோஸ் சின்னம் திரையில் தெரியும் முன் ) F8 ஐ அழுத்திக் கொண்டேயிருங்கள். அதனால் விண்டோஸ் சேப் மோடில் துவங்கும் . அந்த சேப் மோடில் ஆண்டி வைரஸ் பேக்கேஜை இயங்க விடுங்கள்.

உங்கள் கணிணியில் உள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் அப்டேட் ஆக மறுக்கிறது?

உங்கள் கணிணியில் உள்ள ஹோஸ்ட்ஸ் பைலானது பாதிக்கப் பட்டிருக்கும் . அந்த ஹோஸ்ட்ஸ் பைலை நோட் பேடில் திறந்து .127.0.0.1 localhost எனும் வரி மற்ற # ல் துவங்கும் வரி இவற்றைத் தவிர மற்ற வரிகளை அழியுங்கள்.

பின் அப்டேட் செய்துப் பாருங்காள். ஆக வாய்ப்புகள் அதிகம்.

சில உங்கள் சிஸ்டம்

Windows XP/ 2000, சிஸ்டத்தில் அந்த பைல் இருக்கும் போல்டர் C:\WINDOWS\SYSTEM32\DRIVERS\ETC.

Win 98\Me, சிஸ்டத்தில் அந்த பைல் இருக்கும் போல்டர் C:\WINDOWS.
அப்படியானால் என்ன என்ன செய்யவேண்டும்:

உங்கள் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் செக்யூரிட்டி பேட்சுகளை அவ்வப்போது புதிதாக ஏதேனும் வந்துள்ளதா ? எனப் பார்த்து தரவிறக்கம் செய்து இயக்கவேண்டும்.

http://windowsupdate.microsoft.com

உங்களிடம் வைரஸ் ஸகேனர் இருக்குமேயானால், அதற்கான வைரஸ் வடிவங்களை (virus signature) அவ்வப்போது மேம்படுத்தவேண்டும் .

உங்களிடம் உள்ள வைரஸ் ஸ்கேனரின் புதிய பதிப்பு வந்திருந்தால் அதற்கு மாற வேண்டும் .

சில இலவச வைரஸ் ஸ்கேனர்கள்:

ஆன்ட்டிவிர் , இது இலவசம். நன்றாகவும் வேலை செய்யும். சுட்டி www.free-av.com.

கிரிசாப்ட் AVG , இதுவும் இலவசம். நன்றாகவும் வேலை செய்யும். சுட்டி http://free.grisoft.com/

விண்டோஸ் எக்ஸ்பி உபயோகித்தால் அதில் சர்வீஸ் பேக் 2 ஐ தரவிறக்கம் செய்து, இயக்கி, அதில் உள்ள வசதிகளை உபயோகிக்க வேண்டும். கீழ்கண்ட சுட்டி அதற்கான சிடியை பெற உதவும் .

http://www.microsoft.com/windowsxp/downloads/updates/sp2/cdorder/en_us/ .

( பேட்ச் (Patch) மற்றும் சர்வீஸ் பேக் - எந்த மென்பொருளும் வெளியாகையில் சில குறைகளுடனே வரும். அவ்வப்போது கண்டுபிடிக்கப் படும் குறைகளுக்கு தீர்வுகளை அந்த நிறுவனம் வெளியிடும் அது பேட்ச் எனப்படும். இவ்வாறு வழங்கப்படும் பேட்சுகளைத் தொகுத்து வெளியிடுவர் அது சர்வீஸ் பேக் ஆகும்.).


அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

6 comments:

  1. நல்ல தகவல் இதற்கு ஒன்றும் பின்னூட்டம் இல்லாதது வருந்தத்தக்கது.

    ReplyDelete
  2. எல்லோரும் இந்த விஷயங்களைப் படித்துவிட்டு கணினியை சோதித்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்சம் கணினி அறிவு உள்ளவர்கள்,தேவையான முக்கியமான கோப்புகளை மட்டும் வெளியே சேமித்துவிட்டு,இயங்குதளத்தை மீண்டும் நிறுவலாம்.(After harddisk formatting)

    ReplyDelete
  4. //நல்ல தகவல் இதற்கு ஒன்றும் பின்னூட்டம் இல்லாதது வருந்தத்தக்கது.//

    இதன் முதல் பகுதிக்கு (பகுதி 1) ரொம்ப நாள் முன்னாடி (அது வந்த புதிதில்) பின்னூட்டம் இட்டதாக நினைவு. அதைக் காணோம்! தள நிர்வாகி கவனித்தால் நல்லது. நன்றி...

    ReplyDelete
  5. வாங்க சேது. எதொ ஒரு பின்னூட்டம் பப்ளிஷ் பண்ண கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்காக போடாத பின்னூட்டத்தை எல்லாம் கேக்கறது நல்லால்ல :-)

    அன்புடன்,

    ரி.த.ச.

    ReplyDelete
  6. //எதொ ஒரு பின்னூட்டம் பப்ளிஷ் பண்ண கொஞ்சம் நேரம் ஆச்சு//

    ஆமாம், அது கவிதைப் போட்டி என்ற இடுகைக்கு. (கணினித் தொடர் இடுகைக்கு அல்ல.)

    //அதுக்காக போடாத பின்னூட்டத்தை எல்லாம் கேக்கறது நல்லால்ல :-)//

    :-) இதுக்கென்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஏன்னா நான் அப்படி செய்யறதில்ல :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!