இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றால், உலகில் என்ன மாற்றங்கள் இருக்கும் என்று ஒருவர் கேட்கிறார்(இங்கே கிளிக்கவும்)
எனது பட்டியல்
1. தமிழர்கள் ஆங்கிலத்தை மறந்திருப்பார்கள்.
2. இந்தியாவில் சாதி அடிப்படை அரசியல் மாறாதிருக்கும்.
3. அமெரிக்கா அல் கய்டாவின் தலைவரை தேடிக்கொண்டிருக்கும்.
4. இந்தியா ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கப் பதக்கம் வாங்கும்.
5. சென்னை கார்ப்பரேஷன் ரோட்டில் சாக்கடை சரி செய்ய பள்ளம் தோண்டி தவறாக ஒரு வயரை வெட்டினால், அமெரிக்க பங்கு சந்தை ஸ்தம்பிக்கும்.
6. ராத்திரி உணவுக்கு பீட்ஸா வேண்டுமென்று நினைத்தாலே போதும். வீட்டு கம்ப்யூட்டர் வீட்டுக்கே வரவழைத்துவிடும். பெங்களூரில் அடுத்த வருடம் டிரையல்.
7. பாலஸ்தீனப் பிரச்னை தீராது.
8. தமிழ்நாடு தென்னமெரிக்க உளுந்து மற்றும் புளி கார்ட்டெல் மிரட்டலுக்கு நடுங்கும்.
9. சில மனிதர்கள் செயற்கையாக ஆயிரம் ஆண்டு வாழ வைக்கப் படுவார்கள்(மற்ற யாருக்கும் COBOL தெரியாததால்)
10. Y3K ஒரு பிரச்னையாக இருக்காது
11. இந்தியத் திரைப் படங்களில் கம்ப்யூட்டர் மௌஸ் அமுக்கி சண்டை போடுவார்கள்.
12. பத்து ஆண்டுகளுக்கு முன்னால், கூகுள் கம்பெனி குரங்குத் தொல்லையால் திவாலாகி இருக்கும்.
13. இதை இன்னும் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது(அதாங்க - Get a life!)
பட்டியலுக்கு நன்றி நாகு
ReplyDelete//சென்னை கார்ப்பரேஷன் ரோட்டில் சாக்கடை சரி செய்ய பள்ளம் தோண்டி தவறாக ஒரு வயரை வெட்டினால், அமெரிக்க பங்கு சந்தை ஸ்தம்பிக்கும்.
//
உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல?
//11. இந்தியத் திரைப் படங்களில் கம்ப்யூட்டர் மவுஸ் அமுக்கி சண்டை போடுவார்கள்.
//
மவுஸ் கிடக்குது. சினிமால முதல்ல டெலிபோன், கம்ப்யூட்டர், டீவிக்கெல்லாம் மின்இணைப்பு கொடுத்திருக்கா மாதிரி காமிப்பாங்களானு கேட்டு சொல்லுங்க.
//தமிழ்நாடு தென்னமெரிக்க உளுந்து மற்றும் புளி கார்ட்டெல் மிரட்டலுக்கு நடுங்கும்.
//
இதென்ன புதுக்கதை???
//இதை இன்னும் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது(அதாங்க - Get a life!) //
:)))))
நன்றாக இருக்கிறது உங்கள் அச்சப்பதிமூணு!