Saturday, September 02, 2006

ஆசை

கடுமையான குளிர் காலத்தில் வெயிலைக் காண ஆசை
ஜோவென்று கொட்டும் மழையில் சுட சுட வடை தின்ன ஆசை
சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் மரத்தை தேடி ஓட ஆசை
குவிந்து இருக்கும் பனியில் குழந்தைபோல் உருண்டோட ஆசை
வண்ண வண்ண இலைகளைக் கண்டு காவியம் பாட ஆசை
இலையில்லா மரத்தைப்போல் துறவியாய் நிற்க ஆசை
பூத்துக் குலுங்கும் மலர்களைப்போல் மகிழ்ச்சியாய் இருக்க ஆசை
இயற்கையுடன் என்றும் இணைந்து இருக்க ஆசை!!!

1 comment:

  1. மேலும் ஒரு வரி சேர்க்க ஆசை
    "தமிழ் சங்க ப்ளாக்கில் வலை பின்னி
    தமிழ்ப்பித்தர்களின் ஆர்வத்தை மேலும் தூண்ட ஆசை"

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!