சின்ன வயதில் எல்லோரும் இந்த குறுக்கெழுத்து வார்த்தைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும், வார்த்தைகள் மாறாது. எனக்கு நினைவிருக்கும் இரண்டு:
சி | வா | ஜி |
வா | யி | லே |
ஜி | லே | பி |
க | ர | டி |
ர | யி | ல் |
டி | ல் | லி |
சிவாஜி வாயிலே ஜிலேபி என்றால் ரசிகர்கள் வாயில் என்ன என்று முயற்சித்தேன். இதற்கு மேல் போகமுடியவில்லை.
ர | சி | க |
சி | வா | ஜி |
க | ஜி | னி |
இதிலும் முழு வார்த்தைகளில்லை. நாலெழுத்தில் ஒன்றும் தோன்றவில்லை. பார்ப்போம். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன் பின்னூட்டத்தில். நான் ஜெயிப்பவர்களுக்கு தண்டனையாக ஒரு தசாவதாரம் டிக்கெட் :-)
பின்னூட்டமிடும் மக்களே - நான் பாலின்ட்ரோம் தேடவில்லை. பாலின்ட்ரோம் என்றால் இடமிருந்து வடமாகவும் வடமிருந்து இடமாகப் படித்தாலும் ஒன்றாக இருக்கும். நான் கேட்பது - மூன்று வார்த்தைகள் - மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் - அட மேலே இருக்கும் வார்த்தைகள் போல - இருக்க வேண்டும்.
இதை படித்தவுடன் என் ஞயாபகத்துக்கு வருவது.
ReplyDeleteமோரு போருமோ?
மோரு போறுமோ - தானே சரி. ஓசைக்கு மட்டும் போறும் :-)
ReplyDeletePLease guess it tamil.
ReplyDelete1) Vikatakavi
2)Theru Varuthe
Arun
Madhagu
ReplyDeleteThavidu
Kudumi
kadugu
ReplyDeletedumeel
kulla