கால வீசி நடக்கும் போது
காத்து கூந்தல் கோதும் போது
தென்றல் கொஞ்சம் தீண்டும் போது
வெள்ளி நெலவு காயும் போது
வானில் மீன்கண் சிமிட்டும் போது
வசந்த மரங்கள் அலையும் போது
மனசில் அன்பு மலரும் போது
நேசம் நெஞ்சில் நெறயும் போது
அமைதி வந்து எட்டிப் பாக்கும்
இதயக் கதவத் தட்டிப் பாக்கும்!
--கவிநயா
கவிதை நல்லாயிருக்குது. வாசிக்கும் போதே மனதில அமைதி நிலவுது
ReplyDeleteஅருமையான நடை கவிநயா. முரளி சொன்னதுபோல கிராமிய நடை நல்லா வருது உங்களுக்கு.
ReplyDeleteஅமைதி! (அதான் பீஸ்னு முடிக்கற மாதிரி).
கவிதை நல்லா வந்திருக்கு கவிநயா,
ReplyDeleteஇதெல்லாம் 'இனிமை'னு சொல்லிருந்தா நல்லா இருக்குமோ ?
இல்ல காரணத்தோட தான்னா விட்டுருங்க.
என்றும் அன்புடன்
சதங்கா
கவிநயா,
ReplyDeleteநல்ல சிந்தனை. அமைதி ஒரு அருமையான விஷயம். அதைப் பற்றி பேச (அதாவது எழுத) ஆரம்பித்தால், எனக்கு நிறுத்துவது கடினம் எனவே அதை பின்னர் வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்.
வாங்க நீர்வைமகள், என்ன ரொம்ப நாளாச்சு பார்த்து (அதாவது உங்க படைப்புகளை வாசிச்சு), ஊர்லதான் இருக்கீங்களா?
அன்புடன்,
முரளி
ஊர்ல தான் இருக்கிறேன் ஆறுதலாக எழுத ஆரம்பிக்கிறேன்
ReplyDeleteகவிதை படிச்சுக் கருத்துத் தெரிவிச்ச அனைவருக்கும் நன்றிங்கோ!!
ReplyDeleteசதங்கா, காரணத்தோடதான் அமைதின்னு சொன்னேன். அமைதி, மகிழ்ச்சியோ, வருத்தமோ இல்லாத ஒரு நிலை இல்லையா, அதான். எனக்கு வேற மாதிரி விளக்கத் தெரியல. உரைநடை எனக்கு வராது :-)
முரளி, எல்லாமே வேறு ஒரு சமயம் எழுதறதாச் சொல்லாம, அப்பப்ப எழுதுங்க :-)
கவிநயா,
ReplyDeleteஉங்களுக்கு என்ன சொல்லிட்டீங்க, பாவம் நாகு, இந்தாளு எதாவது எழுதி இங்க படிக்க வரவங்களும் வராம போயிட்டா என்ன பன்றதுன்னு தெரியாம முழிக்கப் போறார்.
அன்புடன்,
முரளி