Sunday, July 15, 2007

கொஞ்சும் மழலை


குழலும் உன்குரல் இனிமையில்
குழலும் யாழும் கீழே

மருளும் உந்தன் விழிகள்
பிறமாந்தரைக் காண்கையிலே

சுற்றிச்சுற்றி வந்தே காலைக்
கட்டிக் கொள்ளுவாயே

அள்ளி அணைக்கத் தந்தை
சொல்லித்தர அன்னை

சொந்த பந்தம் எல்லாம்
நண்பர் குழுக்களோடே

பொழுதும் வந்து உதவி - வீட்டைத்
தலை கீழாக்குவாயே

நாளும் சண்டை கொண்டு
நாடக மாடிடுவாயே

அறுசுவை அமுது உண்பாய்
விளையாட்டி லென்விரல்களாலே

அயற்சி யின்றி நீயும்
ஓடிஆடும் போதே

தத்தித் தவழும் என்மனம்
உன்அழகு மழலையாலே

6 comments:

  1. ஷான், 'கொஞ்சும் மழலை' மிக அற்புதம்.

    என்னை கவர்ந்த வரிகள்:
    //பொழுதும் வந்து உதவி - வீட்டைத்
    தலை கீழாக்குவாயே//

    முற்றிலும் உண்மை.

    பேஷ்! பேஷ்! ஷான் கவிதை ரொம்ப நன்னா இருக்கு! (இதை உசிலை மணியின் குரலில் சொல்லிப்பார்க்கவும்)

    ReplyDelete
  2. பரதேசி,

    //பேஷ்! பேஷ்! ஷான் கவிதை ரொம்ப நன்னா இருக்கு! (இதை உசிலை மணியின் குரலில் சொல்லிப்பார்க்கவும்)//

    வாசித்தலுக்கும், பாராட்டலுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. அருமையான கவிதை ஷான். எனக்குப் பிடித்த வரிகள்

    மருளும் உந்தன் விழிகள்
    பிறமாந்தரைக் காண்கையிலே

    ஏனோ இந்த வரிகள் உங்கள் குழந்தையை கண்முன் நிறுத்துகின்றன.

    ReplyDelete
  4. நாகு,

    உங்க பின்னூட்டம் தான் வரவில்லையே என்று எதிர்பார்த்திருந்தேன்.

    வாசித்துப் பாராட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  5. //மருளும் உந்தன் விழிகள்
    பிறமாந்தரைக் காண்கையிலே

    ஏனோ இந்த வரிகள் உங்கள் குழந்தையை கண்முன் நிறுத்துகின்றன//

    உண்மை சான்!! நல்ல வரிகள்!

    ReplyDelete
  6. வாங்க ஜெய்,

    படித்துப் பாராட்டியதற்கு நன்றி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!