நபர் 1: அந்த ஹீரோ ஏன் கடுப்பா இருக்காரு?
நபர் 2: கதைப்படி ஹீரோ கடைசி ஸீன்ல ரோட்ல செத்துக்கிடக்கிறாராம்.
கடைசி ஸீன் தவிர மத்த ஸீனுக்கெல்லாம் டூப் போட்டுட்டாராம்
டைரக்டர்
நபர் 1: அந்த ஹீரோ ஏன் கடுப்பா இருக்காரு?
நபர் 2: அவர் நடிச்ச படத்துலே ஐஸ்வர்யா ராய் கூட ஹீரோ நெருக்கமா
இருக்கிற 4 லவ் ஸீன் வருதாம். அந்த 4 ஸீன்களுக்கு மட்டும்
டைரக்டர் டூப் போட்டுட்டாராம்.
நபர் 1: அந்த நடிகர் ஏன் கடுப்பா இருக்காரு?
நபர் 2: டைரக்டர் நடிகர் கிட்ட "நீ இந்த படத்துல உண்டு" ன்னு சொன்னாராம்
நபர் 1: ஓ, அவருக்கு சான்ஸ் குடுத்தாரா?
நபர் 2: டைரக்டர் சான்ஸ் குடுத்தாரு, அவரும் நடிச்சாரு
நபர் 1: அப்புறம் என்ன கடுப்பு?
நபர் 2: அவர் நடிச்ச சீன்ல எல்லாம் அவருடைய ஸ்டில்
போட்டோவைத்தான் காட்டினாங்களாம்
நபர் 1: அந்த நடிகர் ஏன் டைரக்டர் கிட்ட கடுப்பா இருக்காரு?
நபர் 2: டைரக்டர், "நீங்க வர்ற ஸீன்ல எல்லாம் ஹீரோயின் உங்க
பக்கத்திலேயே இருப்பாங்க" அப்படீன்னாராம்
நபர் 1: அப்புறம் என்ன கடுப்பு?
நபர் 2: படத்துல ஹீரோயின் வீட்டு ஹாலில் அவர் ஸ்டில் போட்டோவை
மாட்டி, மாலை போட்டு ஹீரோயினோட செத்துப்போன
அப்பா ரோல் குடுத்துட்டாராம்.
நபர் 1: டைரக்டர் ஏன் ஹீரோயின் மேல கடுப்பா இருக்காரு?
நபர் 2: 10 மணிக்கு கால்ஷீட் குடுத்துட்டு 10:30 மணிக்கு வந்தாங்களாம்
நபர் 1: அரை மணி தானே லேட் - அதுக்கு என்ன?
நபர் 2: ஹீரோயின் கால்ஷீட் குடுத்தது நேற்று 10 மணிக்கு. இப்போ தான்
வர்றாங்க.
ஏன் பரதேசி கடுப்பா இருக்காரு?
ReplyDeleteஇன்னக்கி ரேடியோவில பேசும்படம் ஒலிச்சித்திரம் போடறாங்களாம்.
அருமை
ReplyDelete