என்னடா இது, இந்த ரிச்மண்டுக்கு வந்த சோதனை? இதில் எழுதிக்கொண்டு இருந்த மக்களைக் காணவில்லை. கோடை விடுமுறையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் போலிருக்கிறது. பித்தனாவது பரவாயில்லை. தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டு நம்முடன் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த சதங்கா இருக்கிறாரே - சத்தம் போடாமல் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார். தமிழ்மணத்தில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். என்னய்யா தனியாக மைக் பிடித்து விட்டீர் என்றேன். கொள்கை அடிப்படையில் தனியாக போய்விட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் 'இஞ்சி' தின்ற குரங்கு மாதிரி ஆகிவிட்டேன். அவ்வப்போது நான் ரொம்ப அழுதால், ஒரு இஞ்சி, மன்னிக்கவும், ஒரு பதிவு இங்கே போடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வாரத்துக்கு ஒருமுறை புலம்புவதாக உத்தேசம்.
தமிழ்மணத்தின் பூங்கா வலை இதழில் சதங்காவின் யானைக்கவிதை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!
பரதேசியாரும் காணோம். சென்னைக்கு போய்விட்டு வந்து இன்னும் பரதேசி மனநிலைக்கு வரவில்லையோ என்று நினைத்துக் கூப்பிட்டேன். தலைக்கு மேல் வேலையாம். அவர்தான் இந்த பதிவை ரொம்ப நாள் ஆக்சிஜன் கொடுத்து காப்பாற்றி வந்தார். இன்னும் ஒரு வாரம் பார்த்துவிட்டு கூப்பிட்டு "தமிழ் சங்கப் பதிவுக்கோர் குறை நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை" என்று பாடப்போகிறேன்.
காணாமல் போன தேனப்பனை பிடித்துக் கொடுக்கும் நபருக்கு ஒரு குறிஞ்சிப்பூ பரிசு கொடுக்கப்படும். அவர் கதையை அடுத்த பதினோரு வருஷத்துக்கு கேட்கக்கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
நம் ஊரில் தனிக்கட்சி நடத்தும் மற்ற சிலரைப் பார்ப்போம். நம் தமிழ் சங்க வெப் மாஸ்டர் கதையைப் பாருங்கள். தனிமரம் காடான கதையாய் ஒரே ஆளாய் பல பேரில் கூட்டணி நடத்துகிறார். அவருடைய புகைப்படங்கள் மிகவும் அருமையானவை. ஜெயகாந்தன் என்றால் சும்மாவா?
எங்க ஊரு பாட்டுக்காரன் பதிவைப் பாருங்கள். தமிழ் சங்க கல்லாப்பெட்டிக்காரர் அரவிந்தின் பாடல்கள் அருமையாக இருக்கின்றன. அரவிந்தன் மட்டும் எழுதினால், அவர் வீட்டில் சும்மா இருப்பார்களா? முப்பது நாளில் முப்பது பதிவுகள் என்று ஒரு சாதனை செய்திருக்கிறார் சுபத்ரா. அவருடைய பதிவு இதோ. ஆனால் கல்லாப்பெட்டி ரொம்ப மோசம். அவர் படிக்கும் பதிவுகள் என்ற வரிசையில் மனைவியின் பதிவை கடைசியில் குறிப்பிடுகிறார்(ஏதோ நம்மால் ஆன கைங்கரியம் :-)
எல்லோர் பதிவையும் சொல்லிவிட்டு இந்த பதிவைச் சொல்லாவிட்டால் எனக்கே புவ்வா கிடைக்காது :-) அப்படியே நம் புத்திர சிகாமணிகள் பதிவுகளும் இங்கே (ஒன்றா, இரண்டா) இருக்கின்றன.
அட மறந்தே விட்டேன். ரிச்மண்டில் அனைவரையும் எழுத வைக்க மூல காரணமே கவிநயாதான். அவருடைய வலைத்தளத்தில் புதிதாக ஏதும் காணவில்லை. அன்புடன் ஜோதியில் கலந்திருக்கிறார் போல. அவர்தான் இயலிலும் நாட்டியத்திலும் கலக்குகிறார் என்றால் அவர் மகன் எனம்மா இசையை விட்டு வைத்தீர்கள் என்ற தோரணையில் மேற்கத்திய இசையில் கலக்குகிறான். எனக்கு ஒரே ஆச்சரியம் அரவிந்த் கேட்கும் மேற்கத்திய இசை எல்லாம் எனக்குப் பிடித்த கிளாஸிக் ராக்! அவனது இசையிலும் அதன் தாக்கம் தெரிகிறது. மேலும் தொடர்ந்து இசையில் சாதனை புரிய என் வாழ்த்துக்கள்.
எனக்குத் தெரிந்த ரிச்மண்ட் பதிவுகள் இவ்வளவுதான். உங்களுக்கு தெரிந்த ரிச்மண்ட்காரர்களின் பதிவுகளையும், வலைத்தளங்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
நாகு..
ReplyDeleteநம்மளத்தவிர யாராவது இத படிக்கராங்களான்னு தெரியல..
எதோ என்னால முடிஞ்சது ஒரு பின்னூட்டம்..
எல்லாரும் சம்மர் ப்ரேக்ல இருக்காங்கன்னு நெனைக்கிறேன்!
ஜெ
நாகு, ஜெயகாந்தன்,
ReplyDeleteகாலம் கலிகாலம் ஆகி போனதால என்னை மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.
இருக்கட்டும் அப்பரம் கவனிச்சுக்கரேன். எனக்கும் கொஞ்சம் வெண்பா, எதுகை மோனை வெச்சு
கவிதை எழுத வரட்டும் அப்பரம் இருக்கு வேடிக்கை.
அன்புடன்,
முரளி.
//காலம் கலிகாலம் ஆகி போனதால என்னை மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.//
ReplyDeleteஆஹா - முரளியை மறந்துட்டனே... மன்னிச்சுக்கங்க முரளி..
அப்பப்ப அட்டென்டென்ஸ் போட்டாதானே ஞாபகம் இருக்கும்? :-)
அப்பறம் வேடிக்கை பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன்.
regular-ஆ attendance போட்டேனே ! (இப்ப வேலைப் பழுவினால் கொஞ்சம் பிஸி).
ReplyDeleteநம்மளையும் மறந்துட்டீங்களே நாகு, but நல்ல ஒரு தொகுப்பு. நிறைய தனிக்கட்சி (!) ப்ளாகுகள் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.
//நம்மளையும் மறந்துட்டீங்களே நாகு//
ReplyDeleteShan - முரளியுடன் இந்த ஆட்டம் ஏற்கனவே ஆடிவிட்டேன். மீண்டும் ஆட்டத்துக்கு வரவில்லை :-)
அது என்ன வேலைப்பழு? வாளப்பளம் சாப்பிட்ட தமிளன் கேள்விப்பட்டு இருக்கேன். இது புதுசா இருக்கே...
ஆஜர்.
ReplyDeleteமுதற்கண் பாராட்டுக்கு நன்றி நாகு.
அடுத்ததா நம்ம ஊர்ல இத்தன பேரு வலைல எழுதறாங்கனு நெனைக்கும்போது சந்தோசமா இருக்கு.
அப்புறம் தனிக்கட்சி அப்படினு நாசுக்கா திட்டி மொத்தமா ஒதுக்கிட்டீங்களே :-( நான் தான் எழுதறேனு சொல்றேனே.
ஆரம்பிக்கும்போது எல்லார் மாதிரியும் இருந்த வேகம் இப்ப கொ'ஞ்'சம் கொற'ஞ்'சிருக்கு. அதான், விசயம் கெடைக்கும் போதெல்லாம் பதிவு போடறேன், okay va.