எங்கும் வியாபித்திருக்கும் எம்பெருமான் கூகுளை விட்டுவைப்பாரா? கூகுள் 60வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்களுக்கு சில மென்பொருள்களை வழங்கியிருக்கிறது.
தமிழில் தேட வசதியாக ஒரு விட்ஜெட் அளித்திருக்கிறார்கள். அதில் உதாரண தேடுசொல் அதிர வைக்கிறது. வாழ்க கூகுள். தமிழில் தேடுவதற்கு மிக எளிய முறையில் வசதி இருக்கிறது இந்த விட்ஜெட்டில். இந்த விட்ஜெட் வலது பக்கத்தில் சேர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். அதுவரை கீழே தமிழில் அடித்துவிட்டு, வலப்பக்கத்தில் வெட்டி ஒட்டி இந்தப் பதிவில் தேடலாம்.
மேலே தமிழைத் தடவித் தடவி அடித்து என்ன ஆகிறது என்று பாருங்கள். தேடல் பக்கம் முழுவதும் தமிழில்!
நிரல் துண்டை உடனே அனுப்பிய நம் வெப்மாஸ்டர் ஜெயகாந்தனுக்கு ஒரு 'ஓ'
நாகு,
ReplyDeleteநல்ல பதிவு. கொஞ்சம் விளக்கம் அளித்திருந்தால் மேலும் நன்றாக இருக்கும்.
தேடலைப் பரிசோதித்துப் பார்த்து அசந்தது உண்மைங்கோவ் ... வாழ்க கூகுள்.
ஆமா, அதென்ன 'சிவாஜி' னு லேபில் போட்டிருக்கிறீர்கள் ;-)
நன்றி சதங்கா. கொடுத்திருக்கும் சுட்டியில் போய் பாருங்கள். உதாரணமாக அவர்கள் கொடுத்திருக்கும் சொல்லைப் பார்த்தால், சிவாஜிக்கு காரணம் தெரியும்.
ReplyDeleteஇதுக்கு இந்த விட்ஜ்கெட் இல்லாமலும் வருமே , கூகிளில் தமிழ் தேர்வு செய்துவிட்டு தமிழ் தட்டச்சு செய்து காபி , பேஸ்ட் செய்தாலும் வரும் எல்லாம் தமிழ் பக்கங்கள்.
ReplyDeleteவவ்வால் அவர்களே,
ReplyDelete//தமிழில் தட்டச்சு செய்து// அதானே அங்க மேட்டரே!!
இந்த விட்ஜெட் வச்சிகிட்டே தமிழ்ல தட்டச்சுவது எப்படின்னு கிளாஸ் குடுக்கலாமான்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன். கொஞ்சம் தலைகீழா தொங்கி பாக்கறேன், ஏதாவது ஐடியா கிடைக்குதான்னு..
மக்களுக்குத் தமிழ்த் தட்டச்சு சொல்லித் தருவதென்றால் முறையாக சொல்லித் தர வேண்டுகிறேன். இதற்கு கணிச்சுவடி உதவலாம்.
ReplyDeleteஇந்த gadget அவசர அடிக்குத் தான். நாலு வரி கூட இதை வைத்து எழுத முடியாது.
எந்த ஒரு கூகுள் gadgetஐயும் பதிவின் பக்கப் பட்டையில் சேர்ப்பதற்கான குறிப்புக்கு இங்கு பார்க்கவும்
ரவிசங்கர் - நான் சும்மா வவ்வாலுக்கு தமாஷாக சொன்னேன். இந்த விட்ஜெட் வைத்து சில் சொற்களுக்கு மேலே எழுத முடியாது. அதனால்தானே பதிவில் தடவி தடவி அடியுங்கள் என்றேன்.
ReplyDeleteநானும் தமிழ்99 தட்டச்சு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பூச்சி காட்டிக் கொண்டிருக்கிறது. முழு முயற்சியாக இறங்கவில்லை.
கணிச்சுவடி சுட்டிக்கு நன்றி. நான் வலப்பக்கம் சேர்ப்பதற்கு அந்த தளத்தில் இருந்து நிரல்துண்டை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். வலது பாதி தெரியவில்லை. விட்டு விட்டேன் இப்போதைக்கு.
நல்ல பதிவு நாகு. தகவல்களுக்கு மிக்க நன்றி.
ReplyDelete//இந்த விட்ஜெட் வலது பக்கத்தில் சேர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். //
ReplyDeleteஇங்கே சென்று பாருங்கள்
உங்களுக்குத் தேவையான அளவு தேடு பொட்டியை மாற்றிக்கொண்டு, நிரல் எடுத்து ப்ளாகில் ஒட்டிக் கொள்ளலாம். :)