1. பாரதியின் கண்ணம்மா : எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரிய்ர்கள் மற்றும் நான் படித்த சில பல உரைகள் எல்லாம் சொன்னது இதுதான்: பாரதி கண்ணனைப் பெண்ணாக பாவித்து செய்த கவிதைக்ள் இவை என்று. ஆனால் இந்த நாட்டிய விழாவிலே, ஒரு பாடலை எடுத்து இது பராசக்தியை பாவித்து என்றனர். திக்கித்தேன். நான் கற்றதே தவறோ? இறையனாரும் எம்மான் இலக்குவனாரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கத்திலே இந்தக் கேள்வியை வைக்கிறேன். படித்த்மான்களே. கருத்துக்க்ளை அள்ளி வீசுங்கள். சரியான விடையை, விளக்கத்துடன், அறிய அவா.
இந்த லிங்கில் விடை இருக்குது:
http://www.sas.upenn.edu/~vasur/kili.html
இந்த படத்திலும் இருக்குது:
இலக்குவனார் தெரியும், இறையனார் யார்?
2. RAGAA : ராகம் தமிழ். RAAG ஹிந்தி. ராகா என்ன மொழி? அவர்கள் ஷொன்னார்கள், நம ஷிவாய, போன்ற த்வனிகள் - பேச்சுக்களல்ல - எமக்கு ரத்தக் கொதிப்பைத் தரும். ராகாவும் அதேரகம் போலும். தன்னைத்தானே அறிவு ஜீவி என்று கருதும் ஒரு நடிகர், தங்கிலீஷ் என்பார் இதை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....
அண்ணே, யார் அப்படி பேசினாங்கன்னு நீங்க சொல்லலை. உங்க வீட்ல சூரிய தொலைக்காட்சி இல்லை போல இருக்கு, இருந்தா தமிழ் நாட்டில தமிழ எவ்வளவு கேவலமா பேசராங்கன்னு தெரிஞ்சுருக்கும். தமிழ் நாட்டில தமிழ் கத்துக்க, பேச அவ்வளவு சந்தர்ப்பம் இருக்கும்போதே அப்படி தமிழ் பேசரது தப்பா தோணலையா! அட அத விடுங்க தமிழ்ன்னு சொல்லத்தெரியாம தமில்ன்னு சொல்லிகிட்டு இருக்காங்க, அவங்கள விட இங்க அப்படிபட்ட வசதிகளெல்லாம் இல்லாத போதே தமிழ் பேசும் போது தப்பா கொஞ்சம் உச்சரித்தா அது குத்தமா? கூடவே எதுக்கு அந்த நடிகரைப் பாவம் இதுல இழுக்கறீங்கன்னு தெரியலை. அவர் உண்டு அவர் அவதாரம் உண்டுன்னு இருக்கார்.
நாகு சொன்னா மாதிரி நீங்க தோப்புக்கரணம் போடரதைப் பார்க்க நாங்க ரெடி.
- முரளி.
என்ன முரளி - நான் பின்னூட்டத்தில் கருப்பு வெள்ளை படம் காட்டினால், நீங்க தனியாக கலர் படம் காட்டுகிறீர்களோ? - பாரதி லிங்க்'கைத்தான் சொல்கிறேன்.
ReplyDeleteஇந்தப் பதிவில் படம் காட்டியதால் சரி. இனிமேல் தனிஆவர்த்தனம் செய்யாமல் ஒத்து ஊதவும்.(பின்னூட்டமயா, பின்னூட்டமய்யா - ஓ நீர் ஸன் டீவி பார்க்கும் ட்மிலர் இல்லையா - அதாங்க கமெண்ட்)