Wednesday, November 22, 2006

ப க(3)...

இத்துடன் இந்தத் தொடரை முடிக்க விழைகிறேன். பார்ப்போம். பிற்பாடு, இன்னொரு நாள், வேறொரு தலைப்பைப் பிராண்ட அவா.

உமா செட்டி அவர்களைப் ப்ற்றி எழுதுவதாக குறிப்பிட்டிருந்தோம். ஆதலால் இந்த சிறு குறிப்பு.

நீங்கள் தமிழராக, ஏன் ஒரு இந்துவாக, இருந்து ரிச்மாண்ட் நகரிலே சில நாட்கள் இருந்திருந்தீர்களேயானால், மாதுஸ்ரீ உமா செட்டி அவர்களை அறியாமல் இருப்பது அரிது. இந்த அம்மையார் பற்றி நான் எழுதி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. ஆயினும் அவர் பெருமையைக் கூறி நான் சிலாகிப்பதில் தவறில்லையே?

நேச்முடன் ஒரு நினைவாக சிந்தை கலங்காது முழு ஈடுபாட்டுடன் தியானிக்கும் முருக பக்தர். மெத்தப் படித்து இருக்கிறார். சி.பி.ஏ மற்றும் எம்.பி.ஏ. அலுவலகத்திலே முழுநேர வேலை பார்க்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கிறார். ம்ற்றும் மனைவி, வீட்டிலே எஜமானி. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நடனம் கற்றுக்கொண்டு இருக்கிறார். கற்றும் கொடுக்கிறார். கோவிலிலே முருகனுக்கு முறை தவறாது வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்கிறார். பல ந்டனக்க்லை நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். மற்றும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். நடனத்துடன் நட்டுவாங்கம் வேறு. எனக்குத் தெரிந்தது இவை. இன்னும் எவ்வளவோ?

ஆகவே. தமிழ்ச்சங்கத் (புது) தலைவர் திரு நாகு-வுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு முறை தமிழ்ச்சங்க மேடையிலே இவருக்கு (உமா), சங்க சார்பாக, "மாது சிரோன்மணி" அல்லது "மாதர் சிகாமணி" என்ற ரீதியில் ஒரு பட்டத்தை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒன்று நிச்சயம். அவ்வாறு செய்தீர்களேயானால், அதனால் பெருமை அடையப் போவது சங்கமும் நாமுமே தவிர, உமா அவர்கள் அல்ல. உமா அவர்கள் ரிச்மண்ட் இந்து சமூகத்திற்கு செய்யும் தொண்டை நாம் பரிபூரணமாக உணர்வதாக பகிரங்கமாக சபையில் உணர்த்துவதே இந்த முன்மொழிதலின் நோக்கமாகும். யாராவது இக்கருத்துக்குப் பின்மொழிகிறார்களா பார்ப்போம்.

கடைசியாக ஒன்று. In lighter vein. உமா அவர்களின் கணவர் நிலையை சற்று நினைத்துப் பார்ப்போம். சென்ற ஞாயிறு நடனமாடிய மாதர்கள், கடைசியாக, இன்றுடன் எனது கடின உழைப்பு முடிந்தது என்ற ரீதியில் பேசியபோது, அவரவர் கணவன்மார்களின் முகாந்திரத்திலே ஒரு விடுதலைக்க்ளிப்பு எட்டிப் பார்த்ததைக்கண்டோம். உமா அவர்கள் என்று ரிடையர் ஆவது, என்று அசோக் அவர்களின் முகத்திலே களிப்பைக்காண்பது? அசோக் அருகிலிருப்பது தெரியாததுபோல் அவர்கள் அவ்வாறு பேசியது தவறு. பாவம் அசோக். நாகு இவருக்கும் ஏதாவது பட்டமளிப்பார் என்று எதிர்பார்ப்போமாக.

முற்றும்.

1 comment:

  1. உமா அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் பேசும் தீந்தமிழ். அதுவும் சிங்கையில் பிறந்து வளர்ந்தவர் சற்றும் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம். பாராட்டு நல்ல யோசனைதான்.

    அஷோக் பற்றி எழுதியது நல்ல தமாஷ். ஏனய்யா குடும்பத்தில் குழப்பம் உண்டுபண்ணுகிறீர்? அவருக்கு பாராட்டு இருக்கட்டும். மனுஷன் யோகா செய்ய வந்தாலே போதும். எமக்கு உற்சாகமாக இருக்கும்.

    அவருக்கு தனியாக நாட்டியம்(எல்லாம் நம்ப பேட்ட ஸ்டைல்தான்) சொல்லிக் கொடுத்து பாட்டும் பரதமும் ஸ்டைலில் உமாவிடம் மோதவைத்தாலென்ன?

    அதெல்லாம் இருக்கட்டும். எத்தனை தோப்புக்கரணம் போட்டீர்? அதைச் சொல்லும் முதலில். இன்னொரு விஷயம் - முருகப் பெருமான் எப்போது இறையனார் ஆனார்?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!