முடியும். என்கிறார் நம்ம ஊர் சுஜாதா மாமா(தாத்தான்னே சொல்லலாம்). அவர் சொல்லும் சான்று Steve Moss தொகுத்துள்ள 'The World's Shortest Stories ' என்ற புத்தகம். நீங்களும் முயற்சி செய்து பாருங்க, அப்பரமா நான் எழுதிய ரெண்டு கதைகளை இங்கே publish பண்றேன்.
- முரளி.
நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். பார்க்க:
ReplyDeleteஇருவரிக்கதை (14 வார்த்தைகள்)
http://akaravalai.blogspot.com/2006/10/3.html
ஒருவரிக்கதை (18 வார்த்தைகள்)
http://akaravalai.blogspot.com/2006/10/2.html
இருவரிக்கதை (19 வார்த்தைகள்)
http://akaravalai.blogspot.com/2006/09/blog-post_115839304098888069.html
//நீங்களும் முயற்சி செய்து பாருங்க, அப்பரமா நான் எழுதிய ரெண்டு கதைகளை இங்கே publish பண்றேன்.//
ReplyDeleteநீங்கள் எழுதிய கதைகளையும் காணவில்லை. என் சுட்டிகளில் படித்தீர்களா என்றும் சொல்லவில்லையே.
அன்புள்ள வலைஞன் அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் படைப்புகளைப் படித்தேன், என் தாழ்மையான விமர்சனம்....
1. விடுதலை: ஒருவரிக் கதையும், இருவரிக்கதையும், சற்றே நாடகத்தனமாக இருப்பது
போலத் தோன்றியது.
ஆயுள் தண்டனைக் கைதி - எனக்குத் தோன்றிய படி:
ஆயுள் தண்டனைக் கைதிக்கு இன்று விடுதலை,
உறவினர் காத்திருந்து பெற்றுக் கொண்டனர் அவன் உடலை!
பாட்டியின் கதை - எனக்குத் தோன்றிய படி
காதலில் தோற்ற பாட்டியின் உயிர், அவளது உயிர்க் காதலனான தாத்தா வந்து
வாயில் நீரூற்றும் வரை விடைபெறவில்லை.
இருந்தாலும் 2 வரி, 1 வரி கதைகள் ஒரு செய்யுள் போலவோ அல்லது ஒரு வசனம் போலவோ
மாறிவிடுவதால் எனக்கு அது அவ்வளவாக ருசிக்கவில்லை.
நான் யோசித்த ஒன்று,
பசியோடு தென்னை மரத்தடியில் ஒரு தேங்காய் விழாதா என இருந்தவனுக்கு
சித்ரகுப்தன் சொன்னான் விழுந்த தேங்காய் ரொம்ப கனம் என்று.
2. லிப்ட் கேட்ட பெண்ணின் கதை ஏதோ ஒரு சாபம் தருவதைப் போல இருந்தது,
இருப்பினும் நல்ல முயற்சி.
என்னுடைய இரு கதைகளைப் பற்றி கேட்டு இருக்கின்றீர்கள், வேலைப் பளு என்ற
உண்மை ஒருபுறம் இருந்தாலும், என்னுடைய படைப்புகள் அனைத்தும் அழகி நம்-1
என்ற எழுத்துருவி(software-க்கு சரியான தமிழ்ப் பதமா எனத் தெரியவில்லை)
மூலம் எழுதப்பட்டவைகள், அவற்றை யுனிகோடில் மாற்றம் செய்து வெளியிட சற்று
காலம் அவகாசம் தேவைப்படும். மேலும், அந்த காலத்தை ரிச்மண்ட் தமிழ் சங்கத்தை
சார்ந்த மற்ற அன்பர்களுக்கு 55 வார்த்தைகளுக்குள் ஒரு சிறு கதை எழுத அளிப்போமே!!
அன்புடன்,
முரளி.
விமர்சனத்திற்கு நன்றி. மிகச்சிறு கதையாக எழுத முயன்ற ஒரு முயற்சி அவ்வளவே. அதில் சிறுகதை வடிவை மிகச்சரியா நிறுவுவது இயலாதுதான்.
ReplyDeleteஉங்கள் கதைகள் வாசித்தேன் நன்றாக உள்ளன.
சில குறிப்புகள்:
software = மென்பொருள் என்பதை எழுத்துருவி என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். "எழுதி" என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அப்புறம் அழகியில் இப்போது யூனிகோடு மற்றும் யூனிகோடு கன்வெர்ட்டர் இணைக்கப் பட்டுள்ளதே. விஷிக்கு அஞ்சலிட்டு விளக்கம் பெறுங்கள்.
அவசரமான யூனிகோடு கன்வெர்ட்டர் இதோ இருக்கிறதே.
http://www.suratha.com/reader.htm
வலைஞன் அவர்களுக்கு,
ReplyDeleteகருத்துக்களுக்கு நன்றி. suratha வலைப்பக்கத்தில் கொடுக்கப்பட்ட
யூனிகோடு கன்வெர்ட்டரை உபயோகப்படுத்திதான் என் இரு சிறு கதைகளை
வெளியிட்டு இருக்கின்றேன். உங்கள் படைப்புகளை இந்த blog-லும் வெளியிடலாமே!.
அன்புடன்,
-முரளி