நியுயார்க் நகரத்தின் தெருவோர உணவகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அதில் சிறந்த கடைகளை தேர்ந்தெடுத்து வெண்டி அவார்ட்ஸ் என்ற பரிசை அளிக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் திரு குமார். தோசா மேன் என்று அழைக்கப்படும் கந்தசாமி திருகுமார் ஈழத்தில் இருந்து வந்தவர். வேகன் முறையில் நெய், வெண்ணெய் இல்லாமல் இவர் சுடச்சுட சமைக்கும் தோசைகள் பறக்கின்றன. பல நியுயார்க் சுற்றுலா இதழ்களில்(Tour Guide), நியுயார்க் நகரில் அவசியம் பார்க்கவேண்டிய இடங்கள் பட்டியலில் இவருடைய தோசைக்கடையையும் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டின் வெண்டி அவார்ட்ஸ்க்கு கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களை கீழே காணலாம்
தெருவோர கடையாய் இருந்தால் தரங்குறைவான எண்ணெய், காய்கறிகள் உபயோகிப்பார்கள் என்ற பரவலான கருத்தை பொய்ப்பிப்பதே என் நோக்கம் என்கிறார் திரு குமார்.
ஹ்ம்.. பனகல் பார்க் நாட்கள நியாபகப்படுத்துது..அடுத்த முறை NY போனா கண்டிப்பா திரு கடையில சாப்பிடனும்..
ReplyDeleteநாகு,
ReplyDeleteதகவல்களுக்கு மிக்க நன்றி. எத்தனை தடவைகள் நியூயோர்க் வந்திருப்பேன். இருப்பினும் இந்த தெருவோரக் கடை என் கண்ணில் படவில்லை. அடுத்த முறை வரும் போது கட்டாயம் தோசை சாப்பிட்டே தீர வேண்டும்.
கடந்த 3 அல்லது 4 வருடங்களாக இரண்டாம் பரிசை வென்ற இவர் இம்முறை முதல் பரிசை வென்றிருக்கிறார். அதுபற்றி நியூ யோர்க் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டிருந்தன. இன்று அங்கு போனபோது கூட கலிஃபோர்னிய தொலைக்காட்சிக்காக படம்பிடித்டுக்கொண்டிருந்தனர்.
ReplyDeletehttp://www.nytimes.com/2007/09/30/nyregion/30vendys.html?_r=2&ref=nyregion&oref=slogin&oref=slogin
http://breakingnews.nypost.com/dynamic/stories/N/NY_STREET_FOOD_CONTEST_BAOL-?SITE=NYNYP&SECTION=HOME
http://www.nydailynews.com/lifestyle/food/2007/09/30/2007-09-30_dosa_man_wins_vendy_cup_award_for_best_s-2.html
http://abcnews.go.com/GMA/Travel/story?id=3604459
திரு-2005
ReplyDeleteநாகு, உங்கள் கேள்வி ஒன்றிற்கு விக்கி பசங்க பதிவில் விடை சொல்லி இருக்கிறோம். நன்றி.
ReplyDeletehttp://wikipasanga.blogspot.com/2007/10/blog-post_08.html
சிறகுகள் நீண்டன வலைப்பதிவர் தாரா அவர்களின் இடுகை
ReplyDeletehttp://siragugal.blogspot.com/2007/06/blog-post_08.html