ப்ளாகிகள் மாநாட்டில் கிடா வெட்டுவதாக தெரியவில்லை. ஆனால் ஒரு பிரபல தினசரியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியை படிக்கவும்.
காத்மாண்டு: நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், இந்து கடவுளின் அருள் வேண்டி இரண்டு ஆடுகள் பலியிடப்பட்டன. நேபாள ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங்-757 ரக விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோளாறை சரி செய்வதாகக் கருதி, இந்து கடவுளான ஆகாஷ் பைரவ் அருள் வேண்டி, விமானத்தின் முன் இரண்டு ஆடுகள் பலியிடப்பட்டன. வான்வெளி பாதுகாப்பில் ஆகாஷ் பைரவ் பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த சடங்குக்கு பின், அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரியானது. இதன் பின், விமானம் வெற்றிகரமாக ஹாங்காங்குக்கு புறப்பட்டது, என்று விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி கே.சி.ராஜூ தெரிவித்தார். நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் இரண்டு போயிங் விமானங்கள் உள்ளன. இதில், ஒரு விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதால், விமானப் பயணம் பலமுறை ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து நேபாள ஏர்லைன்ஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு மின் கோளாறு தான் காரணம் என்று சில உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
அப்படியே ஒரு ரவுண்டு சென்னை பாடிகாட் முனீஸ்வரன்கிட்டயும் போயிட்டு வந்துட்டா நல்லா இருக்கும்.
ReplyDeleteபயணிகளுக்கு எல்லாம் விமானம் ஏறும்போது கொஞ்சம் வேப்பிலை அடிச்சா, இந்த ஹைஜாக்கிங் தொந்தரவு எல்லாம் இல்லாமல் இருக்கும்.
விமானத்துக்கு மொட்டை போடாம இருந்தா சரி.
பரதேசியாரே - நீங்க களத்துல இறங்கிட்டிங்கல்ல, கடா வெட்டிறலாம் கூடிய சீக்கிரத்தில்.