Friday, July 13, 2007

வந்துட்டான்யா வந்துட்டான்

வந்துட்டான்யா வந்துட்டான்! பரதேசி வந்துட்டான்.
சக ப்ளாகிகளே வணக்கம்!
மூன்று வார விடுமுறைக்குப்பிறகு சென்ற ஞாயிறன்று பிறந்த நாட்டிலிருந்து புகுந்த நாட்டிற்குத்திரும்பினோம். என் பயணம் மிக அருமை. பல உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்ப்போல் என் உடன் படித்த நண்பன் ஒருவனை 30 வருடங்களுக்கிப்பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பல பழங்கதைகள் பேசினோம். பிறகு விலாவாரியாக எல்லாவற்றையும் விவரிக்கிறேன். வாக்கு கொடுத்தபடி சரவணபவனில் வயிறு புடைக்க புசித்தேன் (சாம்பார் வடை, புரோட்டா குருமா, குழிப்பணியாரம் முதல் 'முக்கனி' ஐஸ்க்ரீம் வரை). நீங்கள் ஜொள்ளு விட்டு கீபோர்டையும் மௌஸையும் ஈரமாக்குவது தெரிகிறது. 7 வருடங்களுக்கு முன் நான் பார்த்த சென்னையும், மும்பாயும் தலைகீழாக மாறிவிட்டன. என்ன ஜனநெருக்கம்! என்ன பணப்பெருக்கம்! நான் வாழ்ந்த காலத்தில் 10 ரூ நோட்டே ரொம்ப பெரியது. இப்போது அவ அவன் 500 ரூ நோட்டுக்களள சர்வசாதாரணமாக எடுத்து வீசுகிறான். கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி என்று 'அவன்'களும் 'அவள்'களும் சல்லென்று பறக்கின்றனர். பீட்ஸா ஹட், டாமினோஸ்,
பீட்ஸா கார்னர், காபி டே, கபே காபி என்று விதவிதமான தீனிகள் வேறு. போதாதற்கு, சரவணபவன், சங்கீதா, க்ராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்று வேறு.

கட்டுரை தொடரும் வரை......
ஸாம்பிளுக்கு சில படங்கள்:


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பீட்சா ஹட்



மெரினா பீச்சில் கண்ட மாங்காய் பத்தைகள்



திருமயிலை கபாலீஸ்வரர் கோவில்


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி செண்டரின் முகப்பு


திருமயிலை கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் (நிரம்பியுள்ளது)

அடையார் ரோட்டோரம் கண்ட ஒரு டிபன் கடை

9 comments:

  1. வாங்க பரதேசியண்ணே, வாங்க,

    வந்தவுடனே, இப்படி கல்லாமை மாங்காவைக் காட்டி ஜொல்லு விட வெச்சிட்டீங்களே. ஹூம், அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே......

    வெயில் போட்டு தாக்கிட்டதா கேள்வி பட்டேனே, எப்படி சமாளிச்சீங்க?

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  2. ரிச்மண்ட் தமிழ்ச்சங்கம்னு வெச்சுகிட்டு பரதேசின்னு பேர் வெச்சு இருக்கீங்களே? நல்ல பேரே இல்லியா?
    பேர மாத்துங்கய்யா இல்லேன்னா அந்த கெட்ட வார்த்தை கும்பல்னு நெனச்சுப்பாங்க.

    ReplyDelete
  3. அனானி அண்ணே - பரதேசின்னா வெளிநாட்டுக்காரன்னு அர்த்தம். நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல.... நீங்க நினைக்கறது வேற வார்த்தையோ?

    ReplyDelete
  4. அண்ணே அண்ணே அனானி அண்ணே,
    என் பெயரில் குற்றமா? நாகு 'பரதேசி' என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க எங்கேயோ எதையோ கேட்டுவிட்டு பரதேசி என்ற அப்பாவி வார்த்தை மேல் பாய்வது சரியல்ல. தேசி என்பவன் உள்ளூர்காரன் பரதேசி என்பவன் வெளியூர்காரன். அவ்வளவு தான். ஊரையே மாத்துனதனால தான் பேரையும் மாத்தினேன். பெயரில் என்னய்யா உள்ளது. ப்ளாக் உலகில் உள்ள மற்ற பெயர்களையெல்லாம் பார்த்தால் நீங்கள் என்ன சொல்வீர்களோ? பெயரைப்பற்றி கவலைப்படாமல் ப்ளாக் படியுங்கள்/எழுதுங்கள்.

    ReplyDelete
  5. அப்படியே எங்களையும் ஊருக்குச் சென்று வர வைத்துவிட்டீர்கள். புகைப்படங்களும் அருமை.

    ReplyDelete
  6. முரளி, ஷான், நாகு நன்றி.
    சென்னையில் அவ்வப்போது ஆங்காங்கே பரவலாக மழை பெய்ததனால் வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. என் பயணத்தின் கடைசி சில நாட்கள் வெயிலின் உக்கிரம் சிறிது அதிகம்.

    மேலும் பல படங்கள் எடுத்துள்ளேன். விரைவில் கதைகளுடம் பதிவு செய்கிறேன். ஐயா நாகு, ப்ளாகிகள் மாநாடு எப்போது? கிடா எப்போ வெட்டப்போறீங்க? சீக்கிரம் கத்தியை தீட்டுங்க.

    ReplyDelete
  7. பரதேசி,

    பயணம் வெற்றிகரமாக முடித்து திரும்பியமைக்கு வாழ்த்துக்கள்.

    //ஐயா நாகு, ப்ளாகிகள் மாநாடு எப்போது? கிடா எப்போ வெட்டப்போறீங்க? சீக்கிரம் கத்தியை தீட்டுங்க.//

    repeateei ... (ஹி ஹி வலையில கத்துக்கிட்டது !)

    ReplyDelete
  8. சதங்கா, வாழ்த்துக்களுக்கு நன்றி.

    'கெடா' இல்லையென்றால் 'வடா' வாவது முடியுமா? வடா+பொங்கல்+சாம்பார்+சட்னி இருந்தால் இன்னும் பேஷ்!

    ReplyDelete
  9. பரதேசியண்ணே, பரதேசியண்ணே, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா, இப்பதான் சரவணபவன், அந்த பவன், இந்த பவன்னு போட்டு தாக்கிட்டு இங்க வந்தும் வடா, பொங்கல்,சாம்பார், சட்னின்னு கேக்கரீங்களே, உங்களுக்கு நியாயமா படுதுங்களா?

    அன்புடன்,
    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!