ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் கோடை பிக்னிக் ஹென்ரைகோ கௌண்டியிலுள்ள டோரி பார்க்கில் நடைபெற்றது. பெரியவர்கள், சிறுவர்கள் அனைவரும் கிரிக்கெட், உறியடி, கயிற்றிழு(அதாங்க டக் ஆஃப் வார்) போட்டிகளில் கலந்து கொண்டு களித்தார்கள்.
இவற்றில் சில படங்களை இங்கே காணலாம். இதில் சில வீடியோக்களும் இருக்கின்றன.
வணக்கம் நாகு.
ReplyDeleteரிச்மண்ட் ல் இருக்கும் தமிழ் மக்களின் தொகை,முழு நியு மெக்சிக்கொ மாநில எண்ணிக்கையை விட கூடுதலாக இருக்கும் போல :)
படங்கள் ரசிக்கத்தக்கனவாக உள்ளன.
உறியடிக்கு hobby lobby போன்ற இடங்களில் Piñata - பின்யாடா ஒன்றை வாங்கி உறியடிக்கலாம். பின்யாடா உடைந்து உள்ளிருக்கும் மிட்டாய்கள் வெளியே விழும் போது குழந்தைகளின் குதூகலத்திற்கு அளவேது..?
வாங்க வாசன்.
ReplyDeleteஅடுத்த முறை பின்யாடா வாங்கி உறியடிக்கப்போகிறோம். இந்த பிக்னிக்-ல் பார்க்கப்போனால், கூட்டம் குறைவு. எப்பொழுதும் பங்கேற்கும் சிலர் இந்தியா போயிருப்பதாலும், அன்று ரிச்மண்ட் கோயிலில் தமிழ்க் குடும்பங்கள் சமைத்துக்கொடுத்ததாலும் இன்னொரு சாய்பாபா கோயிலுக்கு அடிக்கல் பூஜையாலும் நிறைய அங்கத்தினர்கள் வரவில்லை.
நிறைய புதுமுகங்கள். குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் ஆனந்தமாக விளையாடினார்கள். நீங்கள் கொஞ்சம் ரியோ கிராண்டேவை விட்டு எங்கள் ஜேம்ஸ் நதிப்பக்கம் வாங்கள்!
நாகு,
ReplyDeleteவீடியோவும் படங்களும் அருமை. உங்கள் சிரத்தைக்குப் பாராட்டுக்கள்.
நன்றி ஷான்.
ReplyDelete