Where is Paradesi?
I am sure you all must have been wondering (Ok Ok. I can hear that. This is for the few who really wonder). Yes! I am in Chennai. I can't believe that I am in Chennai after more than 6 years. I am on vacation and just got some time to sit down and write a few lines. I haven't caught up with the articles (Sivaji review etc.) that Shan, Sathanga have posted. I just had a glance. I am trying to get the Tamil font loaded too. Of course, I will try to post some articles from here.
As I promised Murali and Sathanga, I went to Saravana Bhavan and had a nice dinner. But this Saravana Bhavan was the one in Mylapore. I will try to go to the other one and take a peek at Ranganathan Street also.
Will blog later.
Paradesi.
Got to go. Lot of things to do.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
ReplyDeleteபரதேசியாரே - சென்னை பயணத்தை நன்றாக அனுபவிக்க எங்கள் வாழ்த்துக்கள். எங்கள் பெயர் சொல்லி இன்னும் இரண்டு வடை கூட அடியுங்கள். மேலே உள்ள தளத்தில் தமிங்கிலிஷ் சொடுக்கிவிட்டு அங்கே தட்டச்சி, வெட்டி ஒட்டுங்கள். எந்த install ம் தேவையில்லை.
பிறகு முடிந்தால் ஒரு கலசம் சிவாஜி கட் அவுட் அபிஷேக பாலோ, பியரோ கொண்டுவரவும். சிவாஜி பிரசாதம் என்று சொன்னால் கஸ்டம்ஸில் விட்டுவிடுகிறார்களாம்.
பரதேசி,
ReplyDelete//I am in Chennai after more than 6 years//
ஆறு ஆண்டுகளா ? நம்பவே முடியவில்லை. உங்களுக்கு நிறையவே மாற்றங்கள் தெரியும் நம்ம ஊரில். இப்பல்லாம் ஆறு மாசம் கழித்துப் போனாலே, இந்த தெருவா நாம அப்ப பாத்தது என்கிற அளவுக்கு (note பண்ணுங்க தெரு, not ஊர்) இருக்கிற நிலை.
செவி சாய்த்து, வயிற்றைக் கவணித்ததற்கு நன்றிகள். நாகு சொன்னது போல ஒரு ரெண்டு வடை extra அடிங்க.
முக்கியமா vacation enjoy பண்ணுங்க.
நாகு, உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா ? இதுல customs clearance வேறு ;-)
பரதேசி,
ReplyDeleteஇன்னா சும்மா பீட்டர் உட்னுகீர, எம்மா ஜனம் குந்திகினு கீது இங்க, நீ எதுனாச்சும் மேட்ரு சொல்வேன்டு, நீ பாட்டுக்கு ஆங்கில்சுல எயுதிகினே. மருவாத்யா அலேக்கா டமிள்ல எயுதிகோ, தெர்தா?
அன்புடன்,
முரளி.
நாகு, சதங்கா, முரளி,
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நாகு, தமிழ் தட்டச்சு லின்க் அனுப்பியதற்கு மிக்க நன்றி. நமது ப்ளாகைப்பற்றி என் தம்பியிடமும் என் தந்தையிடமும் மிகவும் பெருமையாகச்சொன்னேன்.ஈகலப்பை நிறுவ வேண்டும் என்று சொன்னவுடன் என் தம்பி ஒரு மாதிரி பார்த்தான். ஏர் கலப்பை தெரியும் அது என்ன ஈகலப்பை என்று கேட்காமல் கேட்டான். எனது இந்திய பயணம் இதுவரை மிகவும் நன்றாக உள்ளது. ஆறு வருடங்களுக்குப்பிறகு எனக்கு சென்னையில் எனக்குத்தெரிந்த இடங்களெல்லாம் புது மாதிரியாக தெரிகிறது. நான் படித்த உயர்பள்ளி பக்கம் சென்று பார்த்தேன். புகைப்படமும் எடுத்தேன். பிறகு போஸ்ட் செய்கிறேன். சரவணபவனில் சாம்பார் வடை, ஆப்பம்-குருமா, புரோட்டா குருமா என்று ஒரு வெடு விட்டு கடைசியில் 'முக்கனி' ப்ளேவரில் ஐஸ்க்ரீம் வேறு. நீங்கள் ஜொள்ளு விடுவது தெரிகிறது. என்ன செய்வது? ஆறு வருடங்களுக்குப்பிறகு பிறகு இந்தியா சென்றால் இதெல்லாம் தேவை தானே? பரவாயில்லை வாயைத்துடைத்துக்கொள்ளுங்கள். இன்று தி நகர் பக்கம் சென்றேன். ரங்கநாதன் தெரு வழியாகச்சென்றேன். அப்பப்பா என்ன கூட்டம்! அப்பப்பா என்ன கூட்டம்! இத்துடன் நிறுத்துகிறேன். பிறகு தொடர்கிறேன்