Friday, June 29, 2007

காய் காயா காய்த்திருக்கு

உலகில் எத்தனை விதமாகக் காய் காய்க்கிறது என்று யோசித்ததில் தோன்றியவை வெண்பாப் பாடலாகக் கீழே அளித்திருக்கிறேன். பாடலை உங்கள் கண்முன்னே கொண்டுவர இணையத்தில் இருந்து படங்களை தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறேன். புகைப்பட உரிமையாளர்களுக்கு நன்றி.

பாடல் :

படரலில் உருண்டு பந்தலில் நீண்டு
செடியில் குவிந்து கொடியில் உதிர்ந்து
கிளையில் பரந்து மரத்தில் அடர்ந்து
கோளமும் காய்க்கும் காய்

படங்கள் :













5 comments:

  1. ஆஹா. பாட்டும் அருமை, படங்களும் அருமை. காலங்காத்தால பலாப்பழம் காமிச்சி ஊர் ஞாபகம் கொண்டு வரீங்களே...

    நல்ல வேளை. முந்திரியையும், வாழையையும் விட்டு வெச்சீங்க. இல்லாட்டி ஊருக்கு ப்ளேன் ஏறியிருப்பேன்.

    ReplyDelete
  2. நாகு,

    படித்துப் பாராட்டியதற்கு நன்றி.

    வாழை, முந்திரி ... ஆஹா இதுகூட அருமை தான். இன்னொரு பாட்டு எழுத முடியுதா பார்க்கிறேன் :)

    நீங்க ஊருக்குப் போறதுக்காக அல்ல ;-) எல்லா வகைக் காய்ப்புகளையும், இந்த பாடலில் சேர்த்த மாதிரி இருக்குமே.

    ReplyDelete
  3. சதங்கா,

    என்னது இது இப்படி இத்ணூண்டு பாட்டு போட்டு பதிவை முடிக்கரது, கேக்கரதுக்கு ஆள் இல்லைன்னு இப்படி அநியாயம் பண்ணாதீங்க. பெரிய பாடலா எழுதுங்க், வெச்சுகிட்டு வஞ்சனை பண்ணாதீங்க. ஆமா சொல்லிட்டேன்.

    நாகு:
    'ஏழைக்கின்னே பொறந்த பழம் - எலந்த பழம்ன்னு' ஒரு 'பெரிய' பழம் பெருமை வாய்ந்த பாட்டு இருக்கரப்போ சதங்கா இப்படி சுருக்குன்னு பாட்டை முடிக்கிறார், நீங்களும், அவரை பாராட்டி பின்னூட்டமிடறீங்க. ஹீம் சரியில்லை, இன்னா பொட்டி கிட்டி (சரியா படிங்க, தமிழ் ஒரு நுணுக்கமான மொழி) வாங்கிட்டீங்களா?

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  4. பொட்டியுமில்ல, கிட்டியுமில்ல.

    மாசக் கடசில கோட்டா முடிக்க, கான்ஸ்டபிள் டபுள்ஸ் சவாரி, டைனமோ இல்லாதவன், பிக்பாக்கெட்டு எல்லாரையும் புடிப்பான். ஏட்டு கண்டுக்காம எழுதுவாரு.
    சார்ல்ஸ் ஷோப்ராஜத்தான் புடிக்கனும்னு லொள்ளு பண்ண மாட்டாரு.

    அதுமாதிரிதான் இதுவும். புரியுதா?

    ReplyDelete
  5. பாட்டெழுதி, படத்தால் விளக்கிய உங்கள் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியதாகும்!

    நகைச்சுவை கருதி எழுதியிருந்தீர்களானால் சரி!

    இலக்கணப்படி வெணபா எழுதும் ஆர்வத்தில் எழுதியிருந்தீர்களானால், ஒரு சிறு செய்தி!

    பாட்டில் முதல் அடியிலும், மூன்று நான்காம் அடிகளுக் கிடையிலும் தளை தட்டுகின்றது. திருத்திக் கொள்க!

    அன்புடன்,
    சி.மு.கொ.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!