Wednesday, June 13, 2007

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி...

டும், டும், டும்.....

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி. தலைவர் நாகு அவர்களுக்கு ஒரு சந்தே.. ஹி.. ஹி... பழக்க தோஷம்.... சரி நேரா சப்ஜெக்டுக்கு வருகிறேன்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஆவலுடன் மாதா மாதம் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு தகவல் இதுதான். இந்த மாதம் நல்ல செய்தி.

க்ரீன்கார்டை நோக்கி நெடும்பயணம் செய்யும் மக்கள் முகத்தில் புன்னகை பூக்கும் காலம் வந்து விட்டது. வக்கீல் அலுவலகத்தில் வியர்வை சிந்திய எம் குல மக்கள் ஆனந்தமாக அஞ்சாமல் வீடு வாங்கி கடனாளியாகும் காலம் கனிந்து விட்டது. உத்தியோக சம்பந்தப்பட்ட அனைத்து விதமான விசாக்களும் கரண்ட். எனதருமை மக்களே... படையெடுங்கள் உடனே. தூங்கும் உங்கள் வக்கீல் அலுவலகத்துக்கு சென்று தட்டியெழுப்புங்கள் சிங்கங்களே....

டிபண்டெண்ட் விசாத் துணைகளே(politically correct ma..), பேசாம ஒரு பேங்க் எம்ப்ளாயியை கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியாக இந்தியாவில் இருந்திருக்கலாம் என்ற புலம்பலை நிறுத்தி, சதங்கா எழுதிய மாதிரி ஒரு விருந்து படையுங்கள் பார்க்கலாம்! சீனக்கடையில் உறைந்த வாழையிலை கிடைக்கிறதாகக் கேள்வி! முதலில் defrost செய்து கொள்க. இல்லாவிடில் அப்பளத்துடன் சிறிது வாழையும் இறங்கும்.

7 comments:

  1. நாகு,

    நேற்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

    அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று பார்த்தால் நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள்.

    மேலும் தகவலுக்கு கீழே உள்ள சுட்டியைக் க்ளிக்கவும்

    Visa bulletin

    ReplyDelete
  2. நேத்து விஷயமாச்சே :-) உடனுக்குடன் எழுதிடனும்.

    ReplyDelete
  3. மின்னஞ்சல் நேற்றிரவு அனுப்பியிருக்கிறார். இன்று காலை தான் பார்த்தேன் ;-)

    ReplyDelete
  4. அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு என்று தலைப்பை மாத்தும்யா, நான் கூட டாஸ்மாக் ல தான் சரக்கு விலை குறைக்கப் போறாங்களோனு ஓடி வந்து படித்தேன்!

    ReplyDelete
  5. //அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு என்று தலைப்பை மாத்தும்யா, நான் கூட டாஸ்மாக் ல தான் சரக்கு விலை குறைக்கப் போறாங்களோனு ஓடி வந்து படித்தேன்!//

    hihi! naanumthan!:)

    ReplyDelete
  6. அமெரிக்க வாழ் நாட்டு மக்களுக்கு.... அவங்களுக்கு எதுக்கய்யா கிரீன் கார்டு? :-)

    சரி...

    அமெரிக்க வாழ் இந்திய நாட்டு மக்களுக்கு...

    ஏன் மலேசிய,இலங்கை மக்களுக்கு கிடையாதா?

    சரி...

    அமெரிக்க வாழ் குடியுரிமை பெறாத....

    நாட்டு மக்களுக்கு டாஸ்மாக் கலக்காத ஒரு நற்செய்தி....

    நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

    நீர் முதலில் தலை கீழாக பார்க்காமல் நேராக பார்க்கவும். டாஸ்மாக் தவிர மற்ற விஷயங்கள் கண்ணில் படும் ;-)

    அடுத்த முறை எங்கபேர் சொல்லி ஒரு ரவுண்டு அடிங்க... டாஸ்மாக் ஜிந்தாபாத்....

    என்ஸாய்....

    ReplyDelete
  7. பதிவுல தான் நகைச்சுவைனா, பின்னூட்டத்திலயும் கலக்க[றா/றீ]ங்க நாகு.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!