வானம் போல விரிஞ்சிருக்கும்
வண்டு போலச் சுத்தி வரும்
கானங் கேட்டுக் கனிஞ்சிருக்கும்
கனவுக் குள்ள கத படிக்கும்
வெள் ளந்திப் புள்ள போல
சொல்லுக் கேக்க வாடிப் போகும்
மறுகி உருகி மாஞ்சு போகும்
மாத்துத் தேடி ஏங்கிப் போகும்
அன்பக் கண்டா அசந்து போகும்
ஆவல் மீற ஆட்டம் போடும்
காட்டு மல்லிப் பூவப் போல
காடும் மேடும் வாசம் வீசும்
--கவிநயா
கவிநயா,
ReplyDeleteஆழ்ந்த கருத்து. நல்ல சொற்பின்னல். தொடருங்கள்.
என்றும் அன்புடன்
சதங்கா
கவிநயா,
ReplyDeleteமிக நல்ல கவிதை. லிஸ்ட் ஏன் சின்னதாயிடுத்து. நிறைய எழுதியிருக்கலாம், நேரமின்மையோ? மனசு - யாராலும், அளவிட முடியாத, அறுதியிட்டு சொல்லமுடியாத ஒன்று அதை நீங்கள் தொட்டு கவிதையாக்கியிருப்பது மிக நல்ல முயற்சி. சமீப காலமாக உங்கள் கவிதைகளில் 'folk' touch தெரிகிறதே, அது மிக நன்றாக இருக்கிறது.
அன்புடன்,
முரளி
சதங்கா, முரளி, உங்கள் அன்புக்கு நன்றி!
ReplyDeleteமனம் ஒரு குரங்கு என்ற சொல்லுக்கு மாறாக, மனம் எவ்வளவு அற்புதமானது என்று அழகாக கோடி காட்டியிருக்கிறீர்கள். முரளி சொன்னதுபோல கிராமிய நெடி நன்றாக வந்திருக்கிறது. தொடரட்டும் உங்கள் கவிநயம்! இப்போதுதான் சபை களை கட்டுகிறது.
ReplyDeleteசதங்கா மற்றும் உங்கள் எழுத்துக்கள் மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். பொங்கியெழட்டும் அமைதிப்படை!
அட, நன்றி நாகு. என் குட்டியூண்டு கவிதையைப் படிக்க உங்களுக்கு இத்தனை நாளா :)
ReplyDeleteதிருக்குறள் மாதிரி :-)
ReplyDeleteசின்ன கவிதையில் எவ்வளவோ விஷயங்கள்!
வெயிலுக்கு நல்லாருக்கு, உங்க வார்த்தைகள், குளுகுளுன்னு :-))
ReplyDelete