Friday, April 13, 2007

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

பத்து ஆண்டுகளுக்கு முன்

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் பினாத்திக் கொண்டு புரண்டு படுத்த சங்கர் அதிர்ந்து எழுந்தான். மிக முக்கிய காரணம், இன்று அவன் வேலைக்குச் செல்லும் முதல் நாள்.

டேய் இந்டெர்வியூ கெடைக்கறதே கஷ்டம். அதும் கெடச்சு, ரெண்டு மூனு round தாண்டி வேலையும் கெடச்சிருச்சு, இன்னும் என்னடா பெனாத்தல். பேசாம படு, ஒரு ஏழரை மணிக்கா எழுந்திருக்கலாம். ஹிஸ்ஸித்தான் ஜீவா.

(a+b)2, இது எந்த விதத்தில் நமக்கு வாழ்க்கையில் உதவும் ? பள்ளி நாட்களில் அம்மாவிடம் பல முறை சங்கர் கேட்ட கேள்வி. அம்மாவின் ஆச்சரியம் குறையுமுன், நமக்கெதற்கு அதெல்லாம். நமக்குத் தேவை ராங்க். அட்டை to அட்டை படிக்கனும்டா. நிறைய முறை அப்பா சொன்ன வாக்கியம்.

சங்கரின் கணக்குகள் பாலாராய் பெருகி, மன்னிக்கவும், இந்த ஆறும் இப்ப பிரச்சினையில் இருக்கோ ! சிறு நதியாய் ஓடியது. வேலை எந்த மாதிரி இருக்கும். அங்கே இருப்பவர்கள் எப்படி நம்மை நடத்துவார்கள் ?

ஏதோ ஜாலியா போய்க்கொண்டிருந்த வாழ்க்கை கல்லூரி முடிந்தவுடன் பாலைவனம் போலானது. அடுத்தது என்ன ? என்ற கேள்வி பூதாகரமாய் உருவெடுத்தது. ஆரக்கல், விஸுவல் பேசிக், சி++ எல்லாம் படித்தான், அட்டை to அட்டை. பல வேதனைகள், சோதனைகள் கடந்தது. கல்லூரி நாட்களில் பரீட்சைக்குப் படித்ததை விட அதிகம் படித்து, முட்டி, மோதி, கிடைத்தது இந்த வேலை.


தற்போது - April 2007

விடியுமுன்பே எழுந்த சங்கர், குழந்தைகளின் விலகிய போர்வைகளை சரி செய்து, லேசாக தலை கோதுகையில், என்னங்க அவசரம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்களேன் என்றாள் சுமதி.

வார இறுதியில் ... Spring break க்கு எங்கேப்பா கூட்டிட்டுப் போறே என்றான் ஆறு வயது அபிஷேக். சுமதியின் கொஞ்ச்சலில், சரிம்மா, சரிம்மா என்றது தான் கேட்டது. தங்கை அனுக்ஷாவுடன் backyard-ல் விளையாட ஓடிவிட்டான்.

(a+b)2, இங்கு வந்த போது ஒரு முறை ஜீவா சன்னமாய்ச் சொன்னது ஞாபகம் வந்தது. அது ஒன்னுமில்லேடா சங்கரு, andhra 2 + babu 2 + whole andhra டா babu, குறிப்பா சொல்லனும்னா இந்த testing துறை.

இந்த testing என்ன பாடு படுத்துகிறது. ஆந்திரப் பெண்மணிகள், மனைவிமணிகள் அதிகமாயினும், பொதுவாக இந்தியப் பெண்மணிகள் ஐந்தாண்டு அனுபவம் பெறுவது ஐந்தே நாட்களில்.

ஆந்திராவில் இதுக்கும் கூட Certificate அடிச்சுக் கொடுக்கறாங்களாம்டா, வியந்தான் ஜீவா செல்பேசியில்.

ஜீவா, எப்போடா Richmond வர்ரே ?

நீ எப்போ Denver வர்ரேனு சொல்லு ? மறந்திட்டேன் பாரு, "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்டா'.

o.k. ஜீவா, உனக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். வீட்டில கேட்டதாச் சொல்.

அலுவலகத்தில், சங்கர், நீங்க சொன்ன மாதிரியே உங்க Code (a+b)2 test செஞ்சா, andhra 2 + babu 2 + whole andhra டி baby னு வருது. Great ! testing is passed. Code Release க்கு அனுப்பலாம் என்றார் மூன்றே மாதத்தில் மாறிய பதினோறாம் tester.

3 comments:

  1. ஆஹா... நமது சங்கத்தில் எழுதுவதற்கு இன்னொருவர் வந்துவிட்டார். வாங்க சதாங்கா! (a+b)2 ஃபார்முலா நல்லாதான் இருக்கு. ஆனா பாத்து - அந்த முகாமை முறைச்சுக்கிட்டா உங்க கோட் எல்லாம் எகிற வச்சுரப்போராங்க :-)

    ReplyDelete
  2. வருக வருக சதாங்கா,

    தேன் கூட்டுல கை வெச்சுட்டீங்க. என்ன அந்த தேனிக்களுக்கு தமிழ் தெரியாததினால தப்பிச்சீங்க. நல்ல நடை, தொடர்ந்து எழுதவும்.

    பித்தன்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி நாகு, பித்தன் அவர்களே ...

    கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே !

    இப்படி போட்டு தப்பிச்சிக்கலாமா ?

    come on Developers ... உங்க மன ஓட்டத்தைத் தான் பிரதிபலிக்க முயற்சித்திருக்கிறேன் ... உங்க எண்ணங்களை அள்ளித் தெளிக்கவும்.

    Anyway, உள்ளதைச் சொன்னா ஒதைதான் கிடைக்கும் ஒலகம் இதுதாண்டா எனும் பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் என்றும் நிலைத்திருக்கும் என்று நினைக்கிறேன் !

    ஒரு சிறு திருத்தம், சதாங்கா அன்று சதங்கா என்று அழைக்கவும்.

    மீண்டும் உங்கள் பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி.

    என்றும் அன்புடன்,
    சதங்கா.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!