Wednesday, March 28, 2007

புச்சு கண்ணா புச்சு

நபர் 1: நல்லா பாட கத்துக்கிட்ட சிஷ்யனுக்கு குரு/பாகவதர்
சொல்லிக்கொடுக்கிற கடைசி பாட்டு என்ன தெரியுமா?
நபர் 2: தெரியாதே! என்ன பாட்டு?
நபர் 1: "பாட்டும் நானே பாவமும் நானே பாடா உன்னை
நான் பாட வைத்தேனே"

ரசிகர் 1: இந்த கலை நிகழ்ச்சி என்னங்க புதுமையா இருக்கு?
ரசிகர் 2: எப்படி சொல்றீங்க?
ரசிகர் 1: முதலில் வந்தவங்க "பார்த்தால் பசி தீரும்" அப்படீன்னு
பாடினாங்க.
பிறகு வந்தவரு "ஓடி ஓடி உழைக்கணும்" அப்படீன்னு பாடினாரு
கடைசியா வந்தவங்க "நலந்தானா நலந்தானா" அப்படீன்னு
பாடினாங்க
ரசிகர் 2: ஓ அதுவா? இந்த ப்ரோக்ராமை ஸ்பான்ஸர் பண்றவங்க
லோக்கல் ஹாஸ்பிடல், டாக்டர்கள் தான். அதான் இப்படி.

சபா செகரட்ரி: பாகவதர் இனிமே சன்மானம் வேண்டாம்னுட்டாரு
சபா ப்ரெஸிடெண்ட்: ஓ ரொம்ப நல்லது. பகவதர் நல்ல இதயம் படைத்தவர்.
சபா செகரட்ரி: அதான் இல்லை. அவருக்கு ரொம்ப கெட்ட இதயம்
சபா ப்ரெஸிடெண்ட்: என்ன சொல்றீங்க?
சபா செகரட்ரி: தேங்காய் மூடி கச்சேரி பண்ணி பண்ணி ஒத்துக்கலையாம்.
ஹை கொலெஸ்ட்ராலாம்.

2 comments:

  1. உங்க மொத ஜோக் ஜோருங்க. கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சேன்

    ReplyDelete
  2. தமிழ்ச்சங்க தளத்திற்கு வருகை தந்ததற்கும் ஜோக்குகளையும் படித்து ரசித்ததற்கும் மிக்க நன்றி காட்டாறு அவர்களே. உங்கள் தளமும் பிரமாதம். நான் சாவகாசமாக வருகை தந்து படிக்க ஆசை. வருகிறேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!