Wednesday, March 14, 2007

திருட்டானியா பிஸ்கோத்து

இப்போது சில காலமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கின்ற ஒரு நூதன திருட்டு "ரயில் பிஸ்கெட் திருட்டு". ரயிலில் பயணம் செய்கின்ற பயணிகளில் ஏமார்ந்தவர்களாக சிலறை குறி வைக்கின்றனர் சில பேர்வழிகள். மயக்கமருந்து கலந்த பிஸ்கெட் கொடுத்து அவர்கள் மயங்கிய பிறகு அவர்கள் பணத்தையும் பொருட்களையும் அபேஸ் செய்யும் பேர்வழிகள் பெருகி வருகின்றனர். நம் ஊர் ரயில் பயணமே அலாதி. எப்போதும் கும்பல், பேச்சு, ஓசைகள், பயணிகள் நடமாட்டம் இப்படி கலகவென்று இருக்கும். யாராவது பேசிக்கொண்டே இருப்பார்கள். சிலர் கதை அடிச்சுக்கிட்டே இருப்பார்கள். இப்படி இருக்கும்போது இந்த பிஸ்கெட் கொள்ளைக்காரர்கள் எப்படித்தான் காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்களோ. அது என்ன மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிப்பது? ஒரு "மயக்க இட்லி", "மயக்க வடை", "மயக்க தோசை", "மயக்க சமோசா" இப்படிப்பட்ட பொருட்களை கொடுக்கமாட்டார்களா? ஒரு வேளை பிஸ்கெட் பாக்கெட் மிகவும் வசதியோ? இதற்காகவே பிரத்யேகமான முறையில் "திருட்டானியா" பிஸ்கெட்களை எப்படித்தான் தயாரிக்கிறார்களோ. இவர்கள் திருடும் போது மற்ற பயணிகள் என்ன செய்வார்களோ? ஒரு வேளை திருடர்கள் கம்பார்ட்மெண்ட் முழுதும் இலவச பிஸ்கெட் சப்ளை செய்து விடுவார்களோ? எல்லா கேஸ்களிலும், ஒரு ஸ்டேஷனில் ஏறி, பிஸ்கெட் கொடுத்து மயக்கி திருடிவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறார்கள். நம்ம லாலுஜி தான் இதை ஒடுக்க ஒரு நல்ல யோசனை செய்யவேண்டும். ரயிலில் இனி யாரும் பிஸ்கெட் திங்கக்கூடாது. ஸ்டேஷனில் பிஸ்கெட் விற்கக்கூடாது என்று சட்டம் போட்டாலும் போடலாம். இல்லை, ஒட்ச கட்ல, அவல், பொரி, புண்ணாக்கு இப்படித்தான் சாப்பிடலாம் என்று ரூல் கொண்டு வந்தாலும்
வரலாம். ஆனால், இந்த "திருட்டானியா" திருட்டு நடந்துக்கிட்டே இருக்கு.

1 comment:

  1. ப்ஃரீ பினாயிலுக்கு அலையுர ஜனங்க இருக்கர வரைக்கும் இது நடந்துகினே இருக்கும். செல பயலுக, ரொம்ப ரீஜண்டா ட்ரெஸ் பண்ணிகினு, இங்கிலீஸ்ல முனுமுனுத்துட்டு எவனா பேசினா, உடனே ப்ரெண்டாயிடரானுக (அன்பே சிவம்!மாதவன் மாதிரி!!). பட்டா இவனுகோ மாறனும்னா, ப்ஃரீ பினாயிலுக்கு அலையுர ஜனங்க திருந்தனும். பக்கத்தில ஒக்காந்து வர்ரவன் சொன்னா மட்டும் கேப்பாங்களா?! (வடிவேலிடம் சின்ன பயல விட்டு கிட்னி திருடினாங்களே..). நம்ம மக்கா எல்லா அடுத்தவன் எப்படி சறுக்கரான்னு வேடிக்க பாக்கரதுல காலத்த ஓட்டுவாங்க.. அத விடுங்க.. இப்பல்லாம் டிவி சீரியல் ஓடர நேரத்துல தான் வீட்டுல திருடங்க கை வரிசை அதிகம்னு படிச்சேன்..

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!