Saturday, March 03, 2007

நவீன தர்மராஜன்


மகாபாரதத்தில் தர்மராஜன் திரௌபதியை சூதாட்டத்தில் பணயம் வைத்து கௌரவர்களிடம் இழந்த கதை கேட்டிருக்கிறோம். ஆனால் இக்காலத்தில் தான் பெற்ற பெண்ணையே ஒருவன் சூதாட்டத்தில் பந்தயம் கட்டி இழந்த அவலம் கேட்டிருக்கிறீர்களா? இதைப்படியுங்கள் - பாகிஸ்தானில் ஹைதராபாத் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நூரான் என்பவருடைய கணவன் ஒரு சூதாடி. லால் ஹைதர் என்பவரிடம் ஆட்டத்தில் தோற்றிருக்கிறான். பந்தயத்தில் இழந்த 10,000 ரூபாயை ($151) கொடுக்கமுடியாததால் தனது 2 வயது பெண்ணான ரஷீதாவை பணயம் வைத்து இருக்கிறான். ரஷீதா பெரியவளான பிறகு லால் ஹைதர் அவளை அழைத்துச்செல்லலாம் என்பது ஒப்பந்தம். சில காலத்தில் அவன் இறந்து வேறு விட்டான். அவனுடைய மனைவி நூரான் கஷ்டப்பட்டு லால் கடனையும் அடைத்துவிட்டாள். இப்போது ரஷீதாவுக்கு 17 வயதாம். ஆனாலும் கிராமத்தின் சட்டப்படி ரஷீதாவை தன் வீட்டிற்கு அனுப்பத்தான் வேண்டும் என்று லால் ஹைதர் பிடிவாதம் பிடித்தாராம். அப்பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்யப்போவதாக சில பேர் கூறினார்களாம். யாருக்கு தெரியும் உண்மை? இதில் என்ன வேடிக்கையென்றால், கட்ட பஞ்சாயத்து நடத்தி ரஷீதாவை லால் ஹைதர் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கிராம பெரிசுகள் முடிவு செய்து தீர்ப்பு அளித்துவிட்டனர். ரஷீதாவும் அவள் தாயான நூரானும் கண்ணிரும் கம்பலையுமாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள் (படத்தைப்பார்க்கவும்). லால் ஹைதருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளதாம். ரஷீதாவின் இஷ்டத்திற்கு எதிராக ஒன்றும் நடக்காது என்று போலீஸ் உத்தரவாதம் கொடுத்திருக்கிறதாம். இது யாகூவில் வெளி வந்த செய்தி. யாகூவிற்கு நன்றியாகூக.


1 comment:

  1. என்ன கன்றாவியெல்லாம் கேள்விப் படுகிறம் அந்த நாட்டிலிருந்து. பெண்கள் அங்கே என்ன பாடெல்லாம் படுகிறார்கள். பாவம்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!