Thursday, January 11, 2007

கடுப்போ கடுப்ஸ் - 1

இது ஒரு புதிய முயற்சி. சுயமாக சிந்தித்து நானே உருவாக்கிய சிலவற்றை தொகுத்து "கடுப்போ கடுப்ஸ்" என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளேன். "மாதாந்திர லொள்ளு" களைப்போல் "மாதாந்திர கடுப்போ கடுப்ஸ்" அல்லது "வாராந்திர கடுப்போ கடுப்ஸ்" என்று பதிவு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். நான் பதிவு செய்யும் இவை அனைத்தும் IIA (International Imagination Association) மார்க் பதித்த சொந்த கற்பனையே. எவரும் (முக்கியமாக இசைக்கலைஞர்களும் நடனக்கலைஞர்களும்) தவறாக எடுத்துக்கொள்ள(கொல்ல) மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மற்றொரு முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன். கூடிய விரைவில் அதையும் பதிவிடுகிறேன்.

கடுப்போ கடுப்ஸ் - 1

ரசிகர் 1: அந்த மிருதங்க வித்வான் ஏன் கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: மிருதங்கத்துல வைக்க குடுத்த உப்புமாவுல வெங்காயம்
போடலையாம் அதான்

ரசிகர் 1: புல்லாங்குழல் வித்வான் ஏன் ரொம்ப கடுப்பா இருக்காரு?
ரசிகர் 2: Program break ல யாரோ விஷமக்காரங்க அவர் புல்லாங்குழல்கள் எல்லாத்துலேயும் எக்ஸ்ட்ராவா ஒரு ஓட்டை போட்டுட்டாங்களாம்

ரசிகர் 1: அந்த டான்ஸர் ஏன் கடுப்பா இருக்காங்க?
ரசிகர் 2: அவங்க டான்ஸ் ப்ரோக்ராமை TV ல "ஒளி" பரப்புவோம்னு
சொல்லிட்டு ரேடியோவில "ஒலி" பரப்பிட்டாங்களாம்

1 comment:

  1. ரிச்மண்ட் பிளாகி 1: ஏன் பித்தன் ரொம்ப கடுப்பா இருக்காரு?
    ரிச்மண்ட் பிளாகி 2: பிளாகிங்க தவிர நம்ப ஊர்ல யாரோ தமிழ்சங்க பிளாக்'கை படிக்கறாங்களாம்! அதான்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!