முயற்சி திருவினையாக்கும்....
சுகி சிவம் சொல்வார், "யார் எங்கே என்ன சென்றாலும் கடைசியில் இந்த கிழவன் காலில் விழ வேண்டும்" என்று. ஞாயிறு மதியம் இது மீண்டும் ஒரு முறை உண்மையாயிற்று. இரண்டு மத்திய வயது பெண்மணிகள் சுமார் இரண்டறை மணி நேரம் சற்றும் சளைக்காமல் களிப்புடன் நடனமாடினார்கள். கடைசிவரை முகாந்திரத்திலே புன்னகை குறையவில்லை; சற்றும் சளைப்பு தெரியவில்லை. என்ன அற்புதம்!
மாதர்களின் வயதைப்பற்றி நாகரிகம் குறித்து விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் இந்த நிகழ்ச்சியிலே இவ்ர்களின் வயது அவர்களின் பெருமையைக் கூட்டியதே தவிர குறைக்கவில்லை. அறியாமல் செய்தாரோ, அல்ல்து குறும்போ, யாமறியோம். உமா அவர்கள், நாட்டியமாடிய நாரீமணிகளின் வயதைச் சொன்னார். அதிலொன்றும் தவறு நமக்குத் தெரியவில்லை. என் பக்கத்திலே இருந்த ந்(ண்)பர் அது தவறு என்று சொன்னமையால், இதைப்ப்ற்றி எழுத நேர்ந்தது.
விடா முயற்சி. மனதிலே இளமை. மற்றும் வேறென்ன வேண்டும்? சுமார் எட்டு வருடங்களாக பயின்று மற்றும் பயிற்சி செய்கிறார்களாம். "யாண்டு பலவாயினும் நரையிலவாகுதல்.." கவிதையை நான் மீண்டும் பாடம் செய்ய வேண்டும். வெறுமே படித்து என்ன பயன்? கற்ற பின் அதற்குத்தக நிற்க வேண்டாமா? என் போன்ற் சோம்பேறிகளுக்கு விடா முயற்சியும் பயிற்சியும் வேப்பங்காய். அவரவர் கணவன்மார்களும், குழந்தைகளும் உறுதுணையாய் இருந்திருக்கிறார்க்ள். குடும்பத்துடன் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நமது பரத நாட்டை விட்டு பல நூறு காத தொலைவிலேயிருக்கிறோம் என்ற் நினைப்பேயில்லாமல் லலிதா அம்மையாரின் கான மழையிலே நனைந்தோம், சில மணித்துளிகள். அது எப்ப்டி ஒரே சீராக அவ்வளவு நேரம் பாடினார் அவர்? ஒரு முறையாவது ஒரு க்கும், ஒரு ஹுக்கும் க்னைப்பு இல்லை. சங்கராபரணத்திலே மிதந்தார். தேநீர் இடைவெளியில் நமது கர்ணகடூர தொண்டையிலும் சங்கராபரணம் ரீங்காரித்தது என்றால் பாருங்களேன். பிற்பாடு குறிப்பாக தோடியிலே உயரே பறந்து சஞ்சாரித்தார். கனம் கட்டியபோது நீட்டாமல் சட்டென்று முடித்தார். என்னடா இது இன்னும் கொஞ்சம் சஞ்சாரிக்கக் கூடாதா என்று தோன்றியது என்னவோ வாஸ்தவம்தான். பிறகுதான் தோன்றியது. இது பாட்டுக்க்ச்சேரியல்லவேயென்று. மிருதங்கம், புல்லாங்குழல், வயலின் எல்லாமே ஒருங்கே ஒத்துழைத்தன. இவை எது பற்றியும் விமரிசனம் செய்யும் அருகதை இல்லாத ஞானசூனியம் யாம். உப்புமா கூட பண்ணத்தெரியாது. யாராவது பண்ணினால் சாப்பிட்டு உப்பில்லை, உரப்பில்லை என்று சொல்லத்தெரியும். அவ்வளவே.
க்டைசியாக ஒரு ஆதங்கம். தோடி என்றவுடன். அடுத்த முறையாவது, யாராவது தமிழ்ப்பெண் - சிறுமியோ அல்லது மாதுவோ. நாட்டியமாடும் போது, தாயே யசோதா உந்தன் ... சாகித்யத்தைத் தேர்வு செய்யட்டும். இது ஒரு சாதாரணனின் வேண்டுகோள்.
கடைசியாக ... இவற்றுக்கெல்லாம் காரண்கர்த்தாவான மாதுஸ்ரீ உமா செட்டி அவர்களைப் ப்ற்றி எழுத்வில்லையென்றால் மகாபாபம். இவர் பற்றி அடுத்த குறிப்பில் பார்ப்போம். ....
வாங்க அஜாதசத்ரு. முதல் பதிவே அமர்க்களம். நல்ல விமர்சனம். நாட்டிய நிகழ்ச்சி மிகவும் அருமை. மீனாவின் அபிநயம், ப்ரீதியின் நளினம் வெகுஜோர்.
ReplyDeleteசெம்மையாக திட்டமிடப்பட்டு மேடையேறிய நிகழ்ச்சி. அனைத்து குடும்பத்தினரும் ஒத்துழைத்து அரங்கேற்றத்தை அற்புதமாக நடத்தினார்கள். மங்களத்தை விட்டுவிட்டீர்களே - மராத்தியிலும் தமிழிலும் கலக்கிவிட்டார்கள். மீனா தனது புனைப்பெயர்களில் ஒன்றான நடனகவிக்கு தான் எவ்வளவு தகுதியானவர் என்று நிரூபித்துவிட்டார்.
இசைக்குழுவும் ரொம்ப பிரமாதம். புல்லாங்குழலின் நாதம் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.
உமா அவர்களைப் பற்றி நீர் சொல்வதுபோல் ஒரு அத்தியாயம் அல்லது ஒரு புராணமே எழுதவேண்டும். நீர் எழுதும். யாம் அதிலும் ஒத்து ஊதுகிறோம்.