ரமேஷ் தன் கைபேசியில் நண்பனை அழைத்தான்.
மறுமுனையில் குரல், "ஹலோ.. யார் பேசரது.."
"டேய் வெண்ணை. எத்தனை வாட்டி உன்னை கூப்பிட்டு மெசேஜ் விடறது. அப்படி என்ன வெட்டி முறிக்கர வேலை ஒனக்கு. திருப்பி கூப்பிட மாட்டயாடா?"
"மெசேஜ் விட்டயா? எப்ப.. எனக்கு மிஸ்டு கால் ஏதும் இல்லையே.."
"போன சனிக்கிழமை மதியம் 2 மணி போல கூப்பிட்டேன். பிறகு செவ்வாய்கிழமை சாயந்திரம் பண்ணினேன்."
"வேலை கொஞ்சம் அதிகம். சரி என்ன விசயம்னு சொல்லு."
"ஒன்னும் இல்லடா கோபால். சும்மாதான் பண்ணினேன். தீபாவளி ரிலீஸ்'ல எந்த படம் பார்த்தே? எது நல்லா இருக்கு.?"
"----------------------------------------------------------------"
இந்த குட்டிக்கதையின் முடிவை ஒரே வரியில் முடியுமாறு பின்னூட்டத்தில் எழுதுங்க.. கோடிட்ட இடத்தில் நான் எனது முடிவு வரியை 2-3 நாளில் பதிக்கிறேன்.
யாருய்யா கோபால், நான் செல்வம், ஆள் மாத்தி ஃபோன் பண்ணிட்டு பந்தாவா காட்ற, வைடா ஃபோனை
ReplyDeleteமுரளி, நன்றி!
ReplyDeleteகிட்டதட்ட என்னோட முடிவு!