Friday, September 29, 2006

ரிச்மண்ட் பழமொழிகள்

ஊரார் கணவரை ஊட்டி வளர்த்தால்
தன்கணவன் தொந்தி தானே வளரும்.

மேற்குக்கோடி கணிதம்:

ரோபியஸ் ரோட்டிலிருந்து ப்ராட் ஸ்ட்ரீட்டுக்கு இருக்கும் தூரத்தைவிட
ப்ராட் ஸ்ட்ரீட்டிலிருந்து ரோபியஸ் ரோட்டுக்கு இருக்கும் தூரம் மிக அதிகம்.
(புரியாதவர்கள் பழமொழி அருளிய 'அப்பனைப் பாடும் வாயால் பாடப்படாத'வரைக் கேட்கவும்)

டயட்மொழி: உப்பில்லாப் பண்டம் தொப்பையிலே.
(அ)டயட்மொழி: சப்பில்லாப் பண்டம் குப்பையிலே. (பரதேசியின் பின்னூட்டம்)

பங்குசந்தையில் போட்டாலும் அளந்து போடு

2 comments:

  1. டயட் மொழியின் இரண்டாம் அடி -
    சப்பில்லாப்பண்டம் குப்பையிலே

    ReplyDelete
  2. வெகு ஜோர். ஆனால் சப்பில்லாப் பண்டத்தின் பெயர் கூர்மே உணவுன்னு கேள்விப்பட்டனே?(கூர்மே - அது யாருமே!)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!