கரிசனத்துடன் எழுதும் அப்பாவின் கடிதம்
புத்தி சொல்லும் அண்ணனின் வார்த்தைகள்
ஆவலுடன் காத்திருக்கும் மனைவி
எப்போது வருவாய் எனும் மகனின் வினா
குடித்துவிட்டு எழுதும் நண்பனின் உளறல்
அவருக்கே புரியாத மாமனாரின் காக்காய் கிறுக்கல்
ஜிலேபி என்றழைக்கப்படும் கல்லூரித் தோழனின் பிழியல்
கல்லூரித் தோழியின் கிட்டத்தட்ட காதல் வரிகள்
தாத்தாவின் பாசக்குழைவு
பொங்கலுக்கு வந்து குவியும் வாழ்த்துக்கள்
தொலைபேசித் தூரத்தாலும் இணையத்தாலும்
இவை அனைத்தையும் தொலைத்த நாம்.
நாகு அவர்களே! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மேலும், போகும் போக்கைப்பார்த்தால் கடிதம் மட்டுமல்லாமல் பேனாக்களும் துலைந்து விடும். பேனாக்களை இனி பொருட்காட்சி நிலையத்தில் தான் பார்க்க நேரும்.
ReplyDelete