ரெண்டரை மணி நேரத்துல ஓடினதா கேள்வி. வெகு ஜோர். அடுத்த தடவை வீட்ல உருட்டுக்கட்டை எடுத்துட்டு பின்னாடியே வரச்சொல்லுங்க. ஒரு மணிநேரத்துல முடிச்சிறலாம்.
படத்து மேல கிளிக்குங்க... அரவிந்த் விஸ்வரூபம் எடுப்பார்.
இன்னும் கொஞ்சம் படங்க பாக்கனும்னா, இங்க வாங்க! அந்த தளம் வேலை செய்யாட்டி இந்த பக்கத்துல போயி BIB number 10477னு போட்டுப் பாருங்க. நம்ம அரவிந்த் இன்னா ஷ்டைலா ஓடறாருன்னு... நிறைய படத்துல தனியா ஓடறத பாத்தா சந்தேகம் வருது, சும்மா ஆக்ட்டு குடுக்கறாரோன்னு. ஆனா பினிஷ் பண்ணிக்கிறார்பா. அதுவும் மராத்தன் ஓடிட்டு அன்னக்கி மத்யானம் நடந்த நம்ப தீபாவளி பங்ஷ்னுக்கும் வந்துட்டாரு மனுஷன்.
அடுத்த வருஷம் நானும் கூட ஓடனும்னு சொல்லியிருக்கார். என்னை பாதி தூரம் உப்பு மூட்டை தூக்கிட்டு போறதுன்னா சரின்னு சொல்லியிருக்கேன். நாமளே முருங்க மரத்துல இருந்து இறங்கிட்டா மரம் என்ன ஆவறது?
கங்கிராட்ஸ் அரவிந்த்!
//கங்கிராட்ஸ் அரவிந்த்! //
ReplyDeleteரிப்பீட்டேய்.
உங்களின் எழுத்து நடை ... இல்லை இல்லை மராத்தன் ஓட்டம் போல அருமை. அடுத்த வருடம் ஓடிவிட்டு வந்து மூச்சிறைக்க ஒரு பதிவு போட வாழ்த்துக்கள்.
Congratulations Aravinthan!!!
ReplyDeleteகங்க்ராட்ஸ் அரவிந்தன்..
ReplyDelete