Friday, September 28, 2007

டெக்ஸாஸில் கள்ள ஓட்டு

நம்ம ஊர் அரசியல்வாதிகளாவது அடியாட்களை வைத்து பொதுத் தேர்தலில்தான் கள்ள ஓட்டு போடுகிறார்கள். இங்கே பாருங்கள் சட்டசபையிலேயே மக்களின் பிரதிநிதிகள் ஜமாய்க்கிறார்கள். சுழன்று சுழன்று வேலை செய்கிறார்கள். பாயும் புலிகளாக இருக்கிறார்கள் பாருங்களேன்!



பண்ணுவதையும் பண்ணிவிட்டு அதற்கு சால்ஜாப்பு வேறு. நம்ம ஊரில் இவ்வளவு டெக்னாலஜி வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. வந்தால் நம்ப ஆட்கள் ஸ்கோர் போர்டிலேயே மேட்டரை முடித்து விடுவார்கள் :-)

நமக்கே பதிவு எழுத விஷயம் கிடைக்க மாட்டென்கிறது. இதில் நம்ம கூட்டணி கட்சிகள் வேறு முந்திவிடுகின்றன. இனி பதியக்கூடிய மேட்டர் எல்லாம் பதிந்து விட்டுதான் மக்களை ஸ்பேம் பண்ண வேண்டும் :-)

Thursday, September 27, 2007

Jimmy Kimmel Explains what Miss Teen said - 16 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நகைச்சுவை வீடியோ

நாகு அவர்களின் ஒரு மின்னஞ்சல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அப்படியே சுட்டு ஒரு பதிவா போட்டாச்சு. வந்து ரசிச்சிட்டுப் போங்க.

http://vazhakkampol.blogspot.com/2007/09/jimmy-kimmel-explains-what-miss-teen.html

Sunday, September 23, 2007

டூரிங் டாக்கீஸ்

என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், இன்னும் இந்த டூரிங் டாக்கீஸ் உயிர் பெற்றிருப்பதைப் பல கிராமங்களில் இன்றும் நாம் காணலாம். சுமார் இருபது ஆண்டுகள் முன்னால் இது போல் எங்கள் ஊரிலும் ஒரு டாக்கீஸ் இருந்தது. இப்போது இல்லை. ஆனால் அதன் நினனவுகள் இன்றும் மனதில் நிற்பவை. அதன் நினைவாய் எழுதிய எனது கவிதை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_22.html

Friday, September 21, 2007

இந்தியா மகத்தான வெற்றி...

இரண்டு நாட்களுக்கு முன்னே ஒரு நண்பனிடம் சாட்'டிக்கொண்டிருக்கும்போது கேட்டேன், "இங்கிலாந்தையும் ஜெயித்து, சவுத் ஆஃப்ரிக்காவையும் ஜெயித்து, நல்ல ரன் ரேட் இருந்தால் இந்தியா செமி ஃபைனல்ஸ் போகுமாம்?". ஏதாவது நடக்கிற காரியமா பேசு என்றான் அவன். எனக்கும் நம்பிக்கையில்லை. ஆனால் இளைஞர்கள் என்னமாக ஆடினார்கள். இங்கிலாந்து மேட்சில் யுவராஜின் விளாசல் என்ன? சவுத் ஆஃப்ரிக்காவுடன் இருபதே வயதான முதல் ஆட்டம் ஆடும் ரோஹித்தின் ஆட்டம் என்ன... இருவத்தோரு வயதான ருத்ரப்ரதாப் சிங்கின் பவுலிங் என்ன...

அற்புதம். நீங்களே பாருங்களேன்...

இந்தியாவின் இன்னிங்ஸின் முக்கிய பாகங்கள்.



இந்திய பவுலிங் - முதல் பாகம்




இந்திய பவுலிங் - இரண்டாம் பாகம்



யுவ்ராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்கள். வேறு எந்த வர்ணனையைவிட பங்க்ரா இசை எப்படி பட்டையை கிளப்புது பாருங்க!


யுவராஜை ஃப்ளிண்டாஃப் வெறியேற்றிவிட்டாராம். இருவரும் முறைத்துக் கொண்டு போகும்போது வர்ணனையாளர், "நானாக இருந்தால் இந்த நேரத்தில் யுவராஜிடம் ஒன்றும் வைத்துக்கொள்ளமாட்டேன்", என்று சொல்லி முடிக்கவில்லை. வாணவேடிக்கை ஆரம்பமாகிவிட்டது!



பாகிஸ்தானுடன் ஆடிய ஆட்டம் தமாஷாக முடிந்தது. சர்வதேச அளவில் ஆடும் பௌலர்களுக்கு வெறும் விக்கெட்டுக்கு பந்து போட்டு வீழ்த்தவா முடியாது? அதுவும் மூன்று பௌலர்களும்? எனக்கு என்னவோ பொட்டி வாங்கினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

ஆட்டங்களை பார்க்க வலையில் இரண்டு வழி இருக்கின்றன. சொன்னால் அப்புறம் நான் பார்ப்பதை கெடுத்து விடுவீர்கள் :-) வேண்டுமானால் கூகுளாண்டவரிடம் sopcast tvuplayer என்று முறையிட்டுப் பாருங்கள்!

Thursday, September 20, 2007

மாட்டுச் சந்தை - ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

கொஞ்ச நாள் முன்னால் ஆரம்பித்து கிடப்பில் கிடந்தது இக்கதை. இன்று கிடைத்த சிறு ஓய்வில் எழுதி முடித்து பதிவிட்டிருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_2111.html

Wednesday, September 19, 2007

ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர் (Flashback)

சமீபத்தில் இருவர் படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் வரும் ஒரு பாடல் அப்படியே அற்புதமாய் M.G.R.ஐ இமிடேட் செய்திருப்பார் மோகன்லால். அதைப் பற்றி எனது பதிவை இங்கே காணலாம்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/flashback.html

Tuesday, September 11, 2007

வலைவலம்

ஒருவனுக்கு சாப்பிட மீனைக் கொடுத்தால் அவன் அன்று மட்டும்தான் சாப்பிடுவான். அதைவிட அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுதும் சாப்பிடுவான் என்கிறது ஒரு சீனப்(?) பழமொழி. அந்த பழமொழியைச் செயல்படுத்தும் இரண்டு பொதுப்பணி நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.



முதலாவது கிவா! கிவா'வின் திட்டம் மிக எளிது. சுயமாகத் தொழில் செய்ய விரும்பும் ஏழைமக்களுக்கு தேவையான சிறுகடன்(மைக்ரோக்ரெடிட்) கொடுப்பது. நீங்கள் உங்கள் கணணியில் இவர்களைப் பற்றி படித்துவிட்டு இருபத்தைந்து டாலரில் இருந்து தேவைப்பட்ட அளவு கொடுக்கலாம். அவர்கள் அந்த கடனை அடைக்கும்போது நீங்கள் மீண்டும் வேறு யாருக்காவது கடன் கொடுக்கலாம் அல்லது உங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். கிவா நிறுவனம் பல நாடுகளில் உள்ள சேவை நிறுவனங்கள், மற்றும் மைக்ரோகிரெடிட் நிறுவனங்களுடன் சேர்ந்து உங்கள் கடனை அப்படியே தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள கிவா தளத்தில் படியுங்கள். நியுயார்க் டைம்ஸின் இந்த வீடியோவும் சுவாரசியமானது.

PBS-ன் செய்தித் தொகுப்பை இங்கே பாருங்கள்.


நான் கிவாவைப் பற்றி கேள்விப்பட்டது இந்த பதிவின் மூலம்.

ஆனால என்ன ஒரு வேடிக்கை என்றால், அண்மையில் கிவாவுக்கு ஆப்ரா வின்ஃப்ரி மூலம் நல்ல விளம்பரம் கிடைத்ததால், அனைத்து கடன்களுக்கும் பண உதவி கிடைத்துவிட்டது. நீங்கள் கடன் கொடுக்க இப்போது ஆளில்லை. ஆனால் தளத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருங்கள். கிவா நிறுவனம் கடன் கொடுக்க தகுதியானவர்களை மும்முரமாக தேடி தளத்தில் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. ஒரு உபகதையாக ஆப்ராவுக்கு நன்கொடை செய்ய ஐடியா கொடுத்த ஒரு சிறுமியின் கதையையும் படியுங்கள்.





இரண்டாவது நிறுவனம் ரூம் டு ரீட். இந்த நிறுவனத்தை ஜான் வுட் ஆரம்பித்த கதை ரொம்ப சுவாரசியமானது. மைக்ரோசாஃப்டில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஜான் வுட் நேபாளத்தில் ஒரு முறை மலையேற்றம் செய்யப் போயிருந்தபோது ஒரு சின்னஞ்சிறு பள்ளிக்கூடத்தை பார்க்கிறார். அங்கு இருக்கும் புத்தகங்களெல்லாம் இவர் மாதிரி மலையேறும் மக்கள் போட்டுவிட்டுப்போன புத்தகங்கள், வார இதழ்கள். அவற்றுள் பல குழந்தைகளுக்கு உகந்ததுமல்ல. ஆசிரியர்களோ குழந்தைகளுக்கு படிப்பு சொல்லத் துடிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி உதவலாம் என்று ஜான் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்த தலைமை ஆசிரியர் சொன்ன ஒரு வாக்கியம் தன் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டது என்கிறார் ஜான். அந்த தலைமை ஆசிரியர் சொன்னது இதுதான்:

"Perhaps, Sir, you will some day come back with books".

அந்த கதையை அவர் சொல்லியே கேளுங்கள்.



அந்த பள்ளிக்கு சில புத்தகங்கள் கொடுக்கலாம் என்று ஆரம்பித்த முயற்சி இன்று ஒரு மிகப் பெரிய பொதுச்சேவை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே அதன் முதல் அத்தியாயத்தைப் படித்துப் பாருங்களேன்.

ஜான் வுட்'டின் நிறுவனம் இன்று பள்ளிக்கூடங்களில் நூலகம் நிறுவுவதில் இருந்து நூதனமான முறையில் பள்ளிக்கூடங்களே கட்டிக் கொடுப்பதும் பெண் குழந்தைகளுக்கு படிக்க பண உதவி தருவதுமாக கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு சிறு கிராமத்தில் உங்கள் பெயர் போட்ட நூலகம் நிறுவத் தயாரா?

கோப்பையிலே உன் குடியிருப்பு - ரோஜர் ஃபெடெரர்

வணக்கம் நண்பர்களே.

சமீபத்தில் US Open வென்ற நாயகன் Roger Federer பற்றி எழுத வேண்டும் என்று, அவர் வென்றதிலிருந்து என் மனதுள் ஒரே போட்டி ... அதன் விளைவாய் எழுதிய கவிதை இங்கே. கவிதையைப் பற்றி உங்கள் எண்ணங்களை மறவாமல் தெரிவியுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post.html

Wednesday, September 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 15

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/09/15.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

விமானத்தின் முன் கிடா வெட்டிய நேபாள ஏர்லைன்ஸ்

ப்ளாகிகள் மாநாட்டில் கிடா வெட்டுவதாக தெரியவில்லை. ஆனால் ஒரு பிரபல தினசரியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியை படிக்கவும்.

காத்மாண்டு: நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், இந்து கடவுளின் அருள் வேண்டி இரண்டு ஆடுகள் பலியிடப்பட்டன. நேபாள ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங்-757 ரக விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோளாறை சரி செய்வதாகக் கருதி, இந்து கடவுளான ஆகாஷ் பைரவ் அருள் வேண்டி, விமானத்தின் முன் இரண்டு ஆடுகள் பலியிடப்பட்டன. வான்வெளி பாதுகாப்பில் ஆகாஷ் பைரவ் பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த சடங்குக்கு பின், அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரியானது. இதன் பின், விமானம் வெற்றிகரமாக ஹாங்காங்குக்கு புறப்பட்டது, என்று விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி கே.சி.ராஜூ தெரிவித்தார். நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் இரண்டு போயிங் விமானங்கள் உள்ளன. இதில், ஒரு விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதால், விமானப் பயணம் பலமுறை ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து நேபாள ஏர்லைன்ஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு மின் கோளாறு தான் காரணம் என்று சில உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.