Friday, January 23, 2015

"அமைதி "

"அமைதி "


அமைதி
அதன் அர்த்தம் வெறும் 'நிசப்தம்'-அல்ல
'மனம்', 'சுற்றம்', 'சூழல்'
இவை ஒவ்வொன்றும் அதனதன் ஒழுக்கத்தில்
அசைதலும்
ஓசைகள் ஒலித்தலும்
ஆழ்ந்து நனைந்தலும்
புறத்தாக்குதல் துளியேனும்-இன்றி - பூற்ணமாய் செய்தொழில் செய்தலும்
சிந்தையில் வேட்கையை சிற்பமாய் செதுக்குதலும்
புன்னகையை உள்ளிருந்து பூத்தலும்
சுற்றத்தின் சுயமில்லா அன்பினையும், சூழலின் களங்கமில்லா இயற்கையையும்
இருப்பதை இருப்பதுபோல்
ஏற்பதும் ஏற்று ரசித்தலும்
சிதறாத சிந்தையும்
சீரான சுவாசமும்

மட்டுமே "அமைதி" என்பேன்


-- ஆரவாரத்துடன் சு.கண் [04-Jun-2006]

2 comments:

  1. அருமையான கவிதை. சுரேஷ்.
    முதல் பதிவுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

    ஆரவாரமான விளக்கம் அமைதிக்கு :)

    ReplyDelete
  2. அர்த்தம்
    நிசப்தம்
    பூற்ணமாய்
    சுயமில்லா
    சிந்தையும்
    சுவாசமும்

    - ​​​தமிழ்க் கவிதையில் ​​ஊடுருவியுள்ள வடமொழிச் சொற்கள். :-(

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!